எல்லா நன்மைகள் தரும் உணவுகளுக்கும் மற்றொரு முகம் உள்ளது. அந்தவகையில் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற கொத்தமல்லி விதையிலும் பக்க விளைவுகள்உள்ளது. அதை பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
கொத்தமல்லியில் இருக்கும் ஒரு எண்ணெய் பொருள் கல்லீரல் கோளாறுசிகிச்சைக்கு பயன்படுகின்றது. ஆனால் இதை அதிகமாக எடுக்கும் போது இதில் இருக்கும் எண்ணெய்கூறுகள் கல்லீரல் அசாதாரண நிலைகளை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. சில நபருக்கு ஒவ்வாமை எதிர்வினை ஏற்படும். இதில் இருக்கும் வேதி பொருளால், மூச்சுத்தினறல், அரிப்பு, தலைசுற்றல், வீக்கம் போன்ற பிரட்சனை ஏற்படும். அந்த நேரத்தில் கொத்தமல்லி விதையை எடுப்பதை உடனே நிறுத்திவிடுங்கள்.
குறிப்பாக கவனமாக இருக்க வேண்டியது கற்பகால பெண்களும் தாய்பாலூட்டுகின்ற பெண்களும் தான். ஏனென்றால் கொத்தமல்லி விதையில் இருந்து சுரக்க கூடிய சுரப்பிதாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக நாளைக்கு தொடர்ந்து கொத்தமல்லிவிதைகளை பயன்படுத்தி வந்தால், சுவாச பிரட்சனை நிச்சயம் ஏற்படும். இதனால் தொண்டைவற்றிப்போகும், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் மார்பு வலி தொடங்கும். அதனால்தனியாவை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானது இல்லை.
Sun Sensitivity உள்ளவர்கள் நிச்சயம் இதை தவிர்ப்பது நல்லது. வெயில்ஒத்துக்காதவர்களுக்கு தோல் வியாதி எளிதில் ஏற்படும். அதனால் இந்த மாதிரிஉள்ளவர்கள் கொத்தமல்லி விதையை தெரியாமல் எடுப்பதனால் அது அலர்ஜியில் ஆரம்பித்து தோல் கேன்சர் வரைக்கும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. சிலநேரங்களில் தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுபோக்கு, வயிற்று வலி, பசியின்மை, நீரிழப்பு,இரைப்பை மற்றும் குடல் பிரட்சனைகளும் ஏற்படும். வயது வந்த பெண்களுக்கு மாதவிடாய்தள்ளிப்போகவோ அல்லது அதில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.