காய்கறி சமையல் முறைகள்

Spread the love

ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்

தேவையான பொருட்கள்

இளம் சுவீட் கார்ன் – 2
முட்டைகோஸ் – 100 கிராம்
பச்சை பட்டாணி – 1/4 கப்
கேரட் – 1
பீன்ஸ் – 6
காலிஃப்ளவர் நறுக்கியது – 1/4 கப்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் – 1
தண்ணீர் – 21/2 கப்
உப்பு, மிளகு – தேவைக்கேற்ப
பால் – 1 கப்
கார்ன் ப்ளார் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோளக் கதிரிலிருந்து முத்துக்களை உதிர்த்தெடுத்து வேக வைத்துக் கொள்ளவும். டின் கார்ன் வாங்கி இருந்தால் அதனை பால் மற்றும் தண்ணீருடன் கலக்கவும். ஒரு கடாயில் வெண்ணெயை சூடாக்கி அதில் ஸ்பிரிங் ஆனியனை போட்டு வதக்கி பின் எல்லாக் காய்கறிகளையும் போட்டு வதக்கி அதனை, கார்ன் பால் கலவையில் போட்டு நன்கு கொதிக்க விடவும். 2 நிமிடம் கழித்து அடுப்பைக் குறைத்து அஜினமோட்டோ, உப்பு, தண்ணீரில் கரைத்த கார்ன் ஃப்ளாரை போட்டு தொடர்ந்து கிளறவும். சூப் கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

ஹாட் அண்ட் சோர் சூப்

தேவையான பொருட்கள்

கேரட் – 100 கிராம்
கோஸ் – 100 கிராம்
வினிகர் – 3 டேபிள் ஸ்பூன்
சோயா பீன் சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
அஜினமோட்டோ – 2 சிட்டிகை
காளான் – 50 கிராம்
கார்ன் ப்ளார் – 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது

செய்முறை

காளானை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கேரட், கோஸ், பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய காளான், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். இதனை வடிகட்டிய சூப்பில் கொட்டி, உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்க்கவும். கார்ன் ப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க வைத்து அத்துடன் சோயாபீன் சாஸ், வினிகர் ஊற்றி இறக்கவும்.

வெஜ் ஹக்கா நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் – 200 கிராம்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
ஸ்பிரிங் ஆனியன் மேல் பாகம் – 2
இஞ்சி – 1 இன்ச்
பச்சை மிளகாய் – 3
சோயா சாஸ் – 11/2 டேபிள் ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கேரட் – 1
குடமிளகாய் – 1
முட்டை கோஸ் – 100 கிராம்
அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை
ஸ்பிரிங் ஆனியன் மேல் பாகம் – அலங்கரிக்க

செய்முறை

நூடுல்ஸை வேக வைத்துக் கொள்ளவும். கேரட், குடமிளகாய், முட்டைக்கோஸ் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கவும். ஸ்பிரிங் ஆனியன், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கவும்.

ஒரு பெரிய வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு லேசாக வதக்கவும். அதன் பின் எல்லாக் காய்கறிகள், அஜினமோட்டோ, மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். பின் அடுப்பை அதிகமாக வைத்து காய்களை நன்கு பிரட்டி விடவும். பின் வேக வைத்த நூடுல்ஸையும் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக சோயா சாஸ் ஊற்றி 1 நிமிடம் அதிகமான தீயில் கிளறி விடவும். கடைசியாக ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

நூடுல்ஸ் வேக வைக்கும் முறை

நூடுல்ஸை நன்கு உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, சிறிது எண்ணெய் விட்டு, நூடுல்ஸ் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நூடுல்ஸ் வெந்தவுடன் அதனை குளிர்ந்த நீரில் எடுத்துப் போட்டு சில நிமிடங்களில் வடிதட்டில் வடிகட்டவும்.

வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
கேரட் – 1
பீன்ஸ் – 10
பட்டாணி – 1 கப்
கோஸ் – 100 கிராம்
ஸ்பிரிங் ஆனியன் – 2
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீனி – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். ஸ்பிரிங் ஆனியன், பெரிய வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ், பூண்டு முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் போட்டு 2 முதல் 3 நிமிடம் வதக்கி பின் தக்காளி சாஸ், சோயா சாஸ், அஜினமோட்டோ, சீனி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பின் வேக வைத்த காய்கறிகள், மற்றும் வேக வைத்த சாதம் முதலியவற்றைப் போட்டு நன்கு கிளறவும். கடைசியாக மிளகுத்தூள் தூவி நன்கு கலந்து ஸ்பிரிங் ஆனியனால் அலங்கரித்து பரிமாறவும்.

சில்லி கார்லிக் சாஸ்

தேவையான பொருட்கள்

காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 30
பூண்டு – 10 பல்
வெள்ளை வினிகர் – 11/4 கப்
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

பூண்டை உரித்துக் கொள்ளவும். மிளகாயின் விதையை எடுத்து விடவும். விதையெடுத்த மிளகாயை இரவு முழுவதும் வினிகரில் ஊறவைக்கவும். அடுத்த நாள் காலை ஊறவைத்த மிளகாய், உரித்த பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இக்கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஊற வைத்த வினிகரையும் சேர்த்து திக்கான பதம் வரும் வரை கிளறவும். இந்த சாஸை ப்ரிட்ஜில் வைத்தால் 3 - 4 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

காலிஃப்ளவர் மஞ்சூரியன் வித் க்ரேவி

தேவையான பொருட்கள்

பொரிக்க தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் பெரியது – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 1/2 கப்
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

க்ரேவி செய்ய தேவையான பொருட்கள்

இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 8 பல்
பச்சை மிளகாய் – 2
ஸ்பிரிங் ஆனியன் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1
குடமிளகாய் – 1
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயம், குடமிளகாயை சதுரமாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்க வேண்டும். பின்பு பொரிக்கத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து காலிஃப்ளவரில் பூசி அரை மணி நேரம் ஊற விடவும். ஊறிய காலிஃப்ளவரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

க்ரேவி செய்முறை

ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு ஸ்பிரிங் ஆனியன் போட்டு வதக்கி சதுரம், சதுரமாக வெட்டிய வெங்காயம், குடமிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் சோயாசாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விட்டு அஜினமோட்டோ சேர்க்கவும். கடைசியாக கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்து ஊற்றி கொதிக்க விட்டு பொரித்த வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். (காலிஃப்ளவருக்கு பதில் பனீர், சிக்கன், மீன், மஷ்ரூம் சேர்த்தும் மஞ்சூரியன் செய்யலாம்)

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்

பனீர் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 3
பெங்களூர் தக்காளி – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்
முந்திரி – 50 கிராம்
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சோம்பு – சிறிது
உப்பு – தேவையான அளவு
மேத்தி, கொத்தமல்லி – அலங்கரிக்க

செய்முறை

வெங்காயம், தக்காளி, முந்திரி முதலியவற்றை தனித் தனியே அரைத்துக் கொள்ளவும். பனீர் சிறு சிறு க்யூப் வடிவில் நறுக்கிக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகாய் பொடி, மல்லிப் பொடியையும் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் சூடாக்கி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் அரைத்த விழுது போட்டு நன்கு வதக்கவும். பின் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். பனீர் துண்டுகளைப் போட்டு வதக்கி, தக்காளி அரைத்த விழுது, முந்திரி விழுது, உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து க்ரேவி கெட்டியானவுடன் சிறிது பட்டரை மேலே போட்டு, மேத்தி இலை, கொத்தமல்லி இலைகளை மேலே தூவி பரிமாறவும்.

மாண்டரின் ஃபிஷ்

தேவையான பொருட்கள்

 1. வாவல் மீன் (றிஷீனீயீக்ஷீமீt) – 2
  மைதா – 2 டேபிள் ஸ்பூன்
  கார்ன் ப்ளார் – 2 டேபிள் ஸ்பூன்
  முட்டை – 1
  உப்பு – தேவையான அளவு
 2. பெரிய வெங்காயம் – 2
  இஞ்சி – 1 இன்ச்
  பூண்டு – 10 பல்
  பச்சை மிளகாய் – 2
  கேரட் – 1
  பீன்ஸ் – 10
  சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
  வொர்செஸ்டர்ஷையர் சாஸ் – 1 டீஸ்பூன்
  அஜினமோட்டோ – 1 சிட்டிகை
  சீனி – 1 டீஸ்பூன்
  கார்ன் ப்ளார் – 1 டீஸ்பூன்
  உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு முதலியவற்றை பொடியாக வட்டமாக நறுக்கவும். முழு மீனாக எடுத்துக் கொண்டு செவிள், குடல் முதலியவற்றை மட்டும் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். மீனின் இரு புறமும் கத்தியினால் மூன்று நான்கு கீறல்கள் போடவும். நம்பர் 1-ல் கொடுத்துள்ள பொருள்களையெல்லாம் கலந்து மீனின் மீது தடவி அரை மணி நேரம் ஊற விட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். சோயா சாஸ், வொர்செஸ்டர்ஷையர் சாஸ், உப்பு, சீனி, அஜினமோட்டோ ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். கார்ன் ப்ளாரில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றி கிரேவி கெட்டியானவுடன் இறக்கவும். ஒரு ப்ளேட்டில் பொரித்து வைத்துள்ள மீனை வைத்து அதன் மேல் கிரேவியை ஊற்றிப் பரப்பி அதன் மேல் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

புக்கிட் ஃபிஷ்

தேவையான பொருட்கள்

முள் இல்லாத மீன் – 300 கிராம்
மைதா – 3 டீஸ்பூன்
கார்ன் ப்ளார் – 2 டீஸ்பூன்
முட்டை – 1
பெரிய வெங்காயம் – 1
தண்ணீர் – 1/2 கப்
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 10 பல்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன் – 2

செய்முறை

 பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை நன்கு அடித்துக் கொண்டு அத்துடன் மைதா, கார்ன் ப்ளார், மிளகாய் பொடி, உப்பு சேர்த்துக் கலந்த மீன் துண்டுகள் மேல் பூசி அரை மணி நேரம் காய விடவும். பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, மிளகுபொடி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை இதில் போட்டு ஸ்பிரிங் ஆனியன் தூவி சப்பாத்தி, நாணுடன் பரிமாறவும்.

சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள்

பொரிக்க

சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
கார்ன்ப்ளார் – 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
முட்டை – 1
தயிர் – 2 டீஸ்பூன்
வினிகர் – 1/2 டேபிள் ஸ்பூன்
ரெட்பவுடர் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

வதக்க

பச்சை மிளகாய் – 3
குடமிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
ரெட் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை

பொரிக்க கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் ஒரு கலவையாக கலக்கி, அதில் சிக்கனைப் போட்டு பிசறி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கவும். குடமிளகாய், வெங்காயத்தை சதுரங்களாக நறுக்கவும். பூண்டை சிறியதாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய், சதுரங்களாக நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி தேவையான உப்பு போட்டு சாஸ்களையும் ஊற்றி வதக்கி, பொரித்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு சிறிது நேரம் கிளறி ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

சிக்கன் ஹக்கா நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்

சிக்கன் – 100 கிராம்
ஸ்பிரிங் ஆனியன் – 2
மஷ்ரூம் – 5
குடமிளகாய் – 1
கேரட் – 1
பெரிய வெங்காயம் – 1
முட்டை கோஸ் – 100 கிராம்
மிளகாய் பொடி – 1/4 டீஸ்பூன்
வினிகர் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் வேக வைத்த நீர் – 1/2 கப்
அஜினமோட்டோ – 2 சிட்டிகை
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
சீனி – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
சிவப்பு மிளகாய் – 2
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நூடுல்ஸ் – 200 கிராம்

செய்முறை

சிக்கனை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். மஷ்ரூம், குடமிளகாய், கேரட், பெரிய வெங்காயம், முட்டைகோஸ் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கவும். ஸ்பிரிங் ஆனியன், பூண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு மிளகாயை உடைத்துக் கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்துக் கொள்ளவும். 

ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் உடைத்த மிளகாய், பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பின் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து காய்கறிகளையும் போட்டு வதக்கவும். கடைசியாக மிளகாய் பொடியையும், சிக்கனையும் சேர்த்துக் கிளறவும். பின் சிக்கன் வேக வைத்த நீர் அரை கப் மட்டும் ஊற்றி உப்பு, சீனி போட்டு அதிகமான தீயில் வேக விடவும். காய்கறிகள் எல்லாம் நன்கு வெந்தவுடன் வினிகர், சோயா சாஸ், அஜினமோட்டோ போட்டு நன்கு கிளறவும். வேக வைத்த நூடுல்ஸையும் அதில் போட்டு அடுப்பைக் குறைத்து நூடுல்ஸ் சூடு ஏறும் வரை கிளறி மிளகுத்தூள் தூவி, ஸ்பிரிங் ஆனியனால் அலங்கரித்துப் பரிமாறவும்.

சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்

வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்ஸிற்க்கு உபயோகித்த பொருள்கள் எல்லாம் இதற்கும் தேவைப்படும். இந்த ரைஸில் காய்கறிகளுக்கு பதில் வேக வைத்து உதிர்த்த சிக்கனை உபயோகிக்கிறோம். சிக்கனை வேக வைக்கும் போது சிறிது இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வேகவைக்கவும்.
பாஸ்மதி அரிசி – 1 கப்
சிக்கன் – 250 கிராம்
வேண்டுமென்றால் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை

வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் செய்வது போல செய்து வெஜிடபிள் வதக்கும் சமயத்தில் வேக வைத்து உதிர்த்த சிக்கனைப் போட்டு வதக்கவும்.

Spread the love