Stop Diabetes

Spread the love

நீரிழிவு எனும் சர்க்கரை வியாதி இந்தியாவில் மிக மிக வேகமாக மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதனை சமீப காலமாக வெளிவந்த புள்ளி விவரங்கள் தெரியப்படுத்துகின்றது. உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உடைய நாடும் இந்தியாவாகத்தான் தற்பொழுது உள்ளது. இப்பொழுது சுமார் 4 கோடி மக்கள் இந்தியாவில் மட்டும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் தற்பொழுது சுமார் 25 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஆண்டொன்றிற்கு 60 லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். சுமார் 10 லட்சம் பேர் தங்கள் கால்களை இழக்கின்றனர்.

இந்த சூழ்நிலையை கட்டுக்குள் வைப்பதற்கு நம்மால் என்ன செய்ய முடியும். அமெரிக்க நீரிழிவு சங்கம் எனப்படும் American Diabetes Association – Stop Diabetesஎனும் ஒரு முயற்சியை எடுத்துள்ளது. இதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால் வருமுன் காப்பது. நீரிழிவு வர வாய்ப்புள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது.

நீரிழிவு நோய் பெரும்பாலும் பரம்பரையாகவே வர வாய்ப்புள்ளதால், நீரிழிவு உடைய தாய் தந்தையர் உடையவர்களுக்கு நீரிழிவு வர வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அவர்கள் முதலாவதாக தங்களை நீரிழிவு வர வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் எனக் கொண்டு அதற்கான தற்பாதுகாப்பு முறைகளை அவர்கள் கையாள வேண்டும். தங்கள் குடும்பத்தில் பரம்பரையாக நீரிழிவு உடையவர்கள் மிக மிக கவனமாக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தற்பாதுகாத்துக் கொள்ள விரும்புபவர்கள் ஒரு சில சிறிய முயற்சிகளை எடுத்துக் கொண்டால் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். அவை 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை தங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளவும், மது மற்றும் புகையை தவிர்ப்பது நலம், உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக உணவு கட்டுப்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதத்திற்கு நீரிழிவு ஒன்றும் புதிய வியாதி அல்ல சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அக்கால ஆயுர்வேத வைத்தியர்கள் நீரிழிவு ஒரு நோயல்ல அது உடலின் ஒரு குறைபாடேயாகும் எனவும் அதனை முற்றிலுமாக ஒழித்து குணமாக்க முடியாது கட்டுப்பாட்டினுள்ளேயே வைத்திட முடியும் என தெளிவுபடுத்தியுள்ளனர். நீரிழிவிற்கான பல ஆயுர்வேத மருந்துகள் ஆங்கில மருந்துகளுடனேயே சேர்த்து உபயோகித்து நல்ல பலனைப் பெற முடியும்.

ஆயுர்வேதம்.காம் இனி வரும் காலங்களில் Stop Diabetesஎனும் ஒரு புதிய பகுதியை ஆரம்பித்து அதில் நீரிழிவு வராமல் காத்துக் கொள்வதற்கான கருத்துக்களை வழங்க உள்ளது. இது போக நீரிழிவு நோயாளிகளுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையத் தளத்தில் http: // ayurveda.com எனும் தனது இணையத்தளத்தில் மக்களுக்கு வேண்டிய கருத்துப் பரிமாற்றங்களை வழங்கத் துவங்கியுள்ளது. அனைவரும் இவற்றில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறோம்.

தங்கள் நலன் கருதி

ஆயுர்வேதம் ஷி. செந்தில்குமார்


Spread the love
error: Content is protected !!