நீரிழிவு புள்ளிவிவரம்

Spread the love

· சர்வதேச நீரிழிவு ஐக்கிய ஸ்தாபனம் வெளியிட்டுள்ள விவரங்களின் படி இந்தியாவில் தான் அதிக பட்ச நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள். ப்ரீ -டயாபடிக் ஸ்டேஜ் எனப்படும் நீரிழிவின் முதல் கட்டம் நிலையில் உள்ளவர்கள் மற்றும் குளுக்கோஸ்ஸை ஏற்க முடியாத நிலையில் உள்ளவர்கள் சீனாவில் அதிகம்.

· இந்த வெளியீட்டின் படி இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகள் 40 . 9 மில்லியன். ( 4 கோடி 9 லட்சம்). பின்னாலேயே ஒடி வருவது சீனா இங்கு 39 . 8 மில்லியன் நோயாளிகள்.

· 2025 வருடங்களில் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 69 . 9. மில்லியனாக உயரக் கூடும்.

· வருடத்தில் உலகில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் நீரிழிவு நோயாளிகளாக ஆகின்றனர்.

· வருடத்தில் 10,000 நபர்கள் தங்கள் கை. கால்களை நீரிழிவு வியாதியால் இழக்கிறார்கள்.

· இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் வருடங்களில் அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இரண்டு மடங்கு ஆகும். இப்பொழுதே பஞ்சாபின் ஜனத்தொகையில் 10% டைப் 2 நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

· உலகத்தில் உள்ள 5 நீரிழிவு நோயாளிகளில் ஒருவர் இந்தியர் இந்தியாவில் உள்ள சர்க்கரை வியாதி உள்ளவர்களில் 30% மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். தவிர 30% இதய நோயாளிகள் நீரிழிவு வியாதியும் உள்ளவர்கள்.

நீரிழிவு நோயாளிகளில் 5.6 மில்லியன் நோயாளிகள் டயாபடீஸினால் வரும் கண் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். 20 லிருந்து 74 வயது வரை உள்ளவர்கள் கண்பார்வையை இழப்பதற்கு நீரிழிவு வியாதி ஒரு காரணம். இதற்கு இப்போது அறுவை சிகிச்சை தான் நிவாரணம். புது மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love