உணவில் கலப்படம்

Spread the love

சமீபத்திய பத்திரிக்கை செய்திகள், உணவில் செய்யப்படும் கலப்படத்தை வெளிச்சம் போட்டு காட்டின. பெட்டி கடைகளிலிருந்து சூப்பர் மார்க்கெட் வரை கிடைக்கும் காரச் சிற்றூண்டிகளில் 50% உண்ணத் தகாதவை. நாம் வாங்கும் எண்ணெய்களில் 17% கலப்படம் செய்யப்பட்டவை. தவிர காஃபி, டீ, மென்பானங்களில் நெய், சீஸ் 2% சதவிகிதம் கலப்படம் செய்யப்படுகின்றன.

இந்த விவரங்கள் அரசாங்கத்தின் சுகாதாரத்துறை நடத்திய சோதனைகளிலிருந்து தெரிய வந்தது. கலப்படம் செய்தவர்களை பிடித்தாலும் அவர்களுக்கு பெரிதாக தண்டனை ஏதும் தரப்படுவதில்லை. அதிக பட்சம் ரூ. 20000/- அபராதம் விதிக்கப்படுகிறது.

பாலில் நீர் சேர்ப்பது தான் மனிதன் செய்த முதல் கலப்படமாக இருக்கும். தமிழ்நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கைப்பற்றிய உணவு பானங்களில் பல வேதிப்பொருட்கள் காணப்பட்டன. இவை புற்று நோயை உண்டாக்கும் பொருட்கள்.

ரெடிமேடாக கிடைக்கும் மிக்சர், முறுக்கு, சிப்ஸ் முதலியவை தரக்குறைவான எண்ணெய்யில் சமைக்கப்பட்டவை.

பரிசோதிக்கப்பட்ட 147 மாதிரிகளில் (காப்பி, டீ, மென்பானங்கள்) 33 மாதிரிகள் கலப்படமானவை. சோதித்த 100 எண்ணெய் மாதிரிகளில் 17 கலப்படம் செய்யப்பட்டவை. தவிர லேபிள்களும் சரியான விவரங்களை தெரிவிக்கவில்லை.

காஃபி, தேநீர், மென்பானங்களில் ஏற்கனவே பயன்படுத்திய தேயிலைகளும், வறுத்த வேர்க்கடலை, கோதுமை போன்றவை கலக்கப்படுகின்றன. நல்லெண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களில், பாமாயில் கலக்கப்படுகிறது. முறுக்கு, மிக்சர், சிப்ஸ், பகோடா முதலியவற்றில் தடுக்கப்பட்ட, தரக்குறைவான நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய்யும் தரக்குறைவானது.

எனவே தெரிந்த கடைகளில், தரத்தைப்பார்த்து ரெடிமேட் உணவுகளை வாங்கவும் இல்லாவிட்டால் காசைக் கொடுத்து வியாதியை வாங்கிக் கொள்வதாக ஆகிவிடும்.

உணவு நலம் டிசம்பர் 2010

உணவில், கலப்படம், பத்திரிக்கை செய்திகள், உணவில், பெட்டி கடைகள், சூப்பர் மார்க்கெட், காரச் சிற்றூண்டிகள், எண்ணெய், காஃபி, டீ, மென்பானங்கள், பால், அரசாங்கம், தமிழ்நாடு, உணவு பானங்கள், புற்றுநோய், தேயிலை, நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், வியாதி, உணவில் கலப்படம், உணவு, கலப்படம், உணவுகள்


Spread the love