மலச்சிக்கல்

Spread the love

இந்த காலத்தில் மலச்சிக்கல் இல்லாத மனிதரை பார்ப்பது அரிது. மலச்சிக்கல் அவ்வளவு சாதாரண கோளாறு. உண்மையில் மலச்சிக்கல் என்றால் என்ன? ஒரு நாளுக்கு ஒரு தடவையாவது. அதாவது 24 மணி நேரத்தில் ஒரு தடவையாவது, மலம் கழிக்காவிட்டால், அந்தக் கோளாறு மலச்சிக்கல் என்கிறது ஆயுர்வேதம். முறை தவறாமல், கஷ்டப்படாமல், மலம் கெட்டியாகி, கல் போல் ஆகாமல், சீராக மலம் கழிப்பது, (ஒரு நாளில் ஒரு தடவையாவது) நல்ல அடிப்படை ஆரோக்கியத்திற்கு அறிகுறி.

மலச்சிக்கல் ஏற்பட்டால் வாரத்திற்கு 3 முறை தான் மலம் வெளியேறும். மலம் ‘கல்போல்’ கெட்டியாகி, மலம் கழிக்கையில் வேதனையும் வலியும் தோன்றும். வயிறு உப்புசத்தால் பானை போல் பெருகும். பசியின்மை, வாந்தி, பிரட்டல் தலைவலி உண்டாகும்.

உணவு உண்ட நேரத்திலிருந்து 16 லிருந்து 24 மணி நேரத்துக்குள், அது ஜீரணமாகி, மீந்த கழிவு வெளியேற வேண்டும். கழிவை பெருங்குடல், மலக்குடலுக்கு ‘தள்ளி’ அது மலத்தை வெளியேற்ற வேண்டும். இந்த கழிவை “ஆமா” என்கிறது ஆயுர்வேதம். மலச்சிக்கல் இருப்பதை கண்டறிய, சிறிய அளவு கரிப்பொடியை உட்கொள்ள வேண்டும். பிறகு வரும் மலத்தை கவனிக்க வேண்டும். 24 மணிநேரத்தில் கருமை நிறமாக மலம் வராவிட்டால், மலச்சிக்கல் என்று அர்த்தம். அனைத்து நோய்களின் காரணம் மலச்சிக்கலே என்று இயற்கை சிகிச்சை முறை கூறுகிறது.

காரணங்கள்

ஒவ்வொருவரின உடல் வாகை பொறுத்தது. (பிரகிருதி)

இயற்கை ‘வேகங்களை’ தடை செய்வது. நம்மில் பலர் இந்த தவறை செய்கிறார்கள். தற்போதைய அவசர உலகில் மலம் கழிப்பது ஒரு தொல்லையாக தோன்றுகிறது. இயற்கை உந்துதலை அடக்கிவிடுவது மட்டுமல்ல; மலம் கழிக்கும் போது, தேவையான நேரத்தையும் நாம் கொடுப்பதில்லை.

உணவில் போதிய அளவு பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள் இல்லாமல் போதல். தவறான உணவுகள். போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது. “டிஹைடிரேஷன்” எனும் நீர்மச்சத்துகளின் இழப்பு, வேறு நோய்களால் ஏற்பட்டிருக்கலாம். நிறைய தண்ணீர் திரவங்கள் குடிப்பது அவசியம். அதற்கென்று காப்பி, கோலா பானங்கள், மதுபானங்களை குடிக்க வேண்டாம்! இவை மலச்சிக்கலை அதிகரிக்கும்.

மலமிளக்கிகளை அடிக்கடி உபயோகிப்பது.

பெருங்குடல் தசை அசைவுகளால் மலத்தை வெளியே தள்ளும். ஜுரம், ஷயரோகம், சோகை இவற்றால் இந்த இயக்கம் பாதிக்கபடலாம். இதனால் மலம் மலக்குடலை அடைவது தடைப்படும்.

மருந்துகள் – வயிற்றுவலி, உயர்ரத்த அழுத்தம், தலைவலி, பார்க்கின்ஸன் வியாதி இவற்றுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மலச்சிக்கலை உண்டாக்கும்.

மனநோய்கள், ஸ்ட்ரெஸ் இவைகளும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இவற்றுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் மலச்சிக்கலை ஏற்படுத்ம்.

சில தூண்டுதல்களை உபயோகிப்பது. உதாரணமாக சிகரெட், டீ இவற்றை குடிக்கும் பழக்கத்தை உபயோகிப்பது மலம் கழிக்கப் போவது.

உணவின் மூலம்

கோதுமை ரொட்டிகளை உண்ணவும். அரிசி உணவை குறைக்க வேண்டும்.

நிறைய பச்சை காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு இயற்கையான நல்ல உணவு மருந்து.

நிறைய தண்ணீர் குடிக்கவும்.

பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.

வாத பிரகிருதிகளுக்கு நெய்யும், எண்ணையும் நன்மை செய்யும். பெருங்குடலுக்கு எண்ணை பசையை அளித்து, மலம் நகர உதவும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள் – ‘பாட்டில்’ பானங்கள், ஜாம், பிரெட், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம், சீஸ், ‘சமோசா’ இவைகளை குறைக்கவும்.

சேர்க்க வேண்டியவை

முழுகோதுமை, பாலிஷ் செய்யப்படாத அரிசி உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை. பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ், வெங்காயம், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள்.

ஜீரகம், மிளகு, மஞ்சள், தனியா, பெருங்காயம் – இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

மருந்துகள், மூலிகைகள்

ஆயுர்வேதம் கிட்டத்தட்ட 600 மூலிகைகளை பரிந்துரைக்கிறது. மலச்சிக்கலுக்கு விரிவான மருத்துவம் ஆயுர்வேதத்தில் கிடைக்கும். நீங்களாகவே வைத்தியம் செய்து கொள்ளாமல் ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

வீட்டு வைத்தியம்

அத்திப்பழத்தை (உலர்ந்தவை) தண்ணீரில், இரவில ஊறவைத்து, காலையில் உட்கொள்ளவும்.

சாப்பிடும் முன்னும் அல்லது பின்னும் பப்பாளி பழத்தை உண்பது மலச்சிக்கலை கண்டிக்கும்.

காலையில் உப்பு சேர்த்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடிக்கவும்.

காலையில் எழுந்திருப்பதற்கு ஒரு மணி முன்பாக விழித்து, 1 – 2 கப் உப்பு கலந்த வெந்நீரை குடித்து மீண்டும் படுக்கச் செல்லவும். இது சுலபமாக மலம் கழிக்க உதவும்.

மூலிகை மருந்துகள்

இசப்கோல் – இசப்கோல் என்ற தாவரத்தின் விதைகளிலிருந்து கிடைக்கும். ஆயுர்வேதம், இசப்கோலை மிருதுவான மலமிளக்கி என்பதால் மலச்சிக்கலுக்கு நல்ல இயற்கை மருந்து என்கிறது.

சென்னா

அதிமதுரம்

சரக்கொன்றை

வசம்பு

ஆயுர்வேத மருந்துகள்

திரிபால சூரணம்

அபயாரிஷ்டம்

திராக்ஷாரிஷ்டம்

பஞ்சஸகார சூர்ணம்

த்ரு விருத்சூர்ணம்

வைச்வாரை சூர்ணம்

பாஹு சாலகுடம்

சுகுமாரக்ருதம்

தாத்ரீ தைலம்

கல்யாணக் கஷாயம்

சந்திரவரபாவடீ

மேலும் சில குறிப்புகள்

உணவை வாயில் அதிகமாக மென்று அரைத்தால் ஜீரணமாவது சுலபமாகும். உண்ணும் போது நிதானமாக வாயில் மென்றிடவும்.

உடற்பயிற்சி மலச்சிக்கலை போக்கும்.

தீவிரமான நாட்பட்ட மலச்சிக்கலுக்கு ஆயுர்வேதத்தை நாடுங்கள். வஸ்தி கர்மா, விரேசனா கர்மா, உத்வர்த்தன மசாஜ் சிகிச்சை என்ற “ஸ்பெஷல்” சிகிச்சை முறைகளால் உடலின் நச்சுப் பொருட்கள் நீக்கப்பட்டு, நிரந்தர நிவாரணத்தை அடையலாம்.

மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள்

பொதுவாகவே பழங்களை உண்பது நல்லது. மலச்சிக்கலை போக்க கீழ்க்கண்ட பழங்கள் உதவுகின்றன.

வாழைப்பழம் – இது நம் அனைவருக்கும் தெரிந்த மலச்சிக்கலை நீக்கும் பழம். பூவன் பழம் ‘பெஸ்ட்’

கொய்யா பழங்கள்– வாழைப்பழத்தை போலவே குணமளிக்கும்

வில்வப் பழங்கள்– ஆகாரத்திற்கு முன்பு, வில்வப் பழத்தை (கோந்து பகுதி, விதைகளை நீக்கிவிட்டு) உண்டால், எளிதாக மலம் பிரியும்.

முலாம் பழம்

அத்திப் பழம்

பப்பாளி

மலச்சிக்கல் தீர மேலும் சில குறிப்புகள்

இரவு படுக்கைக்குச் செல்லும் போது பழுத்த வாழைப்பழம் ஒன்றும் சூடான பால் ஒரு குவளையும் அருந்துவது.

மாவடு இரண்டு அல்லது மூன்றினை தேனுடனும் உப்புடனும் கலந்து தின்பது.

பச்சை மாங்காயை நறுக்கி உப்பிட்டுத் தின்பது.

2 தேக்கரண்டி இஞ்சிச் சாற்றுடன் 25 மி.லி. தயிரும் 50 மி.லி. மாம்பழச்சாறும் சேர்த்துப் பருகுவது.

சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறும் சிறிதளவு உப்பும் தேனும் கலந்து பருகுவது.

ஒன்று அல்லது இரண்டு வெள்ளைப் பூண்டைச் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி உண்பது.

ஒரு குவளை தக்காளிச் சாற்றில் சிறிதளவு உப்பும் அரைத் தேக்கரண்டி மிளகுத்தூளும் கலந்து பருகுவது.

ஒரு கண்ணாடிக் குவளை தண்ணீர் ஒரு இரண்டு மேஜைக் கரண்டி அளவு கிஸ்மிஸ் பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்துக் காலையில் உண்பது.

காலையில் எழுந்ததும் ஒரு பெரிய குவளை பால் சேர்க்காத சூடான கடுங்காப்பி அருந்துவது.

காலை எழுந்ததும் இரண்டு பெரிய குவளை தண்ணீர் அருந்துவது.

மலச்சிக்கல் பலவிதம்

வெப்பச்சிக்கல்

உணவின் இறைச்சி, உப்பு போன்றவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதாலும் வலியடக்கி, அமில எதிர்ப்பி போன்ற பல வகை மருந்துகளை உட்கொள்வதாலும் இது ஏற்படலாம். கவலை, கோபம், மனஇறுக்கம் போன்ற மனநிலை வேறுபாடுகளும் இதற்குக் காரணமாகலாம். கொய்யா, வாழை, மா, பப்பாளி, மற்றும் புளிப்பான ஆப்பிள் போன்ற பழங்களும், உடற்பயிற்சியும் இதிலிருந்து விரைவாக நிவாரணம் பெற உதவும்.

குளிர்ச்சிக்கல் அதிக அளவில் சர்க்கரை, வெண்ணெய், தேன் போன்ற உணவுகளை உண்பவர்களுக்கும் இதர பானங்கள், பழச்சாறுகள் மற்றும் இதர நீர்ம உணவுகளில் வாழ்பவர்களுக்கும் இது போன்று குளிர்ச்சிக்கல் உண்டாகலாம். இது போன்று உள்ளவர்களது குடலில் போதிய அளவு வலிவும் அலைச் சுருக்கமும் இருப்பதில்லை. இவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்டு சூடான காபி, சுக்கு நீர் போன்ற பானங்களைப் பருகுவதுண்டு வயிற்றைக் கசக்கக் கூடிய உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.

வாயுச்சிக்கல் இது எளிதில் ஜீரணிக்க முடியாத பட்டாணி, கொண்டைக் கடலை, புலால் சோறு, பொறித்த பண்டங்களை உண்டு அவை உணவுக் குடலால் செரிக்கமாட்டாது பதனிழிவுற்று மலம் கல்லைப் போல் ஆகிப் பெருங்குடலில் தங்குதலாகும். பச்சைக் காய்கறிகள், முளைவிட்ட பயறுகள், சாலடுகள் போன்றவற்றை உட்கொள்ளக் குணம் தெரியும்.

உணவு நலம் மார்ச் 2011

மலச்சிக்கல், காரணங்கள், உணவின் மூலம், சேர்க்க வேண்டியவை, மருந்துகள், மூலிகைகள், வீட்டு வைத்தியம், மூலிகை மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், மேலும் சில குறிப்புகள், மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள், மலச்சிக்கல் தீர மேலும் சில குறிப்புகள், மலச்சிக்கல் பலவிதம், வெப்பச்சிக்கல், குளிர்ச்சிக்கல்,  

வாயுச்சிக்கல், கோளாறு, ஆயுர்வேதம், பசியின்மை, வாந்தி, பிரட்டல், தலைவலி, பெருங்குடல், சிகிச்சை, டிஹைடிரேஷன், நீர்மச்சத்து, மதுபானங்கள், ஜுரம், ஷயரோகம், சோகை, மருந்துகள், வயிற்றுவலி, உயர் ரத்த அழுத்தம், பார்க்கின்ஸன் வியாதி, மனநோய்கள், ஸ்ட்ரெஸ், சிகரெட், மருந்து, முழுகோதுமை, அத்தி, மாதுளை, வாழைப்பழம், ஆயுர்வேதம், மருத்துவம், ஆயுர்வேதா, வைத்தியம், ஆயுர்வேத மருத்துவம், இசப்கோல், ஆயுர்வேத, அதிமதுரம்,

சரக்கொன்றை, வசம்பு, திரிபால சூரணம், அபயாரிஷ்டம், திராக்ஷாரிஷ்டம்,

பஞ்சஸகார சூர்ணம், த்ரு விருத்சூர்ணம், வைச்வாரை சூர்ணம், பாஹு சாலகுடம்,

சுகுமாரக்ருதம், தாத்ரீ தைலம், கல்யாணக் கஷாயம், சந்திரவரபாவடீ, உடற்பயிற்சி, வஸ்தி கர்மா, விரேசனா கர்மா, உத்வர்த்தன மசாஜ் சிகிச்சை, சிகிச்சை முறை, நச்சுப்பொருட்கள், வாழைப்பழம், கொய்யாபழம், வில்வப் பழங்கள், கவலை, கோபம், மனஇறுக்கம், மனநிலை,


Spread the love