திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள், அங்க கோமாவுல படுத்திருக்காங்க என்கிற வசனத்தை. ஒரு கிண்டல் செய்தவதற்கு கூட இந்த கோமா என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மையில் கோமா என்பது, மனிதர்களுக்கு நீண்டகால நினைவு இழந்து போதல் அல்லது பாதிக்கப்படுதல் என்று சொல்லலாம்.இவ்வாறு கோமா நிலை ஏற்படுவதற்கு குறிப்பிடத்தகுந்த காரணம், மூளையில் அடிபடுவதால், ஏற்படும் விளைவுகள்.கோமா நிலையில் உள்ளவர்கள் எந்தவித நினைவும் அசுவும் அற்றவர்களாக கிடப்பார்கள்.இந்த நிலை யாருக்கும் வந்து விடக்கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.
விபத்தின் போதோ அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் மூலம், மூளையில் சேதம் ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட நேரங்களில், மூளையில் சேதமானது குறைந்தளவு மட்டுமே ஏற்பட்டிருந்தால், கோமாவில் இருப்பவர்களை மீட்பது மிக மிக சுலபம்.
ஆண்டுக்கணக்கில் படுக்கையிலேயே கோமா நிலையில் படுத்திருப்பவர்களும் உண்டு. விபத்து ஏற்பட்ட சில மணிநேரங்களில் மீண்டு வருபவர்களும் உண்டு. அது விபத்துகளின் தன்மையும், சேதத்தின் அடிப்படையிலும் நடக்கின்றது.
நம்மில் பலபேருக்கு கோமா வருவதற்கான காரணங்கள் குறித்து தெளிவாக தெரியும்.கோமா ஏன் ஏற்படுகின்றது. கோமாவில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து, தெரிந்திருந்தாலும் கடைபிடிப்பதில் மட்டுமே நாம் கோட்டை விடுகின்றோம். இருசக்கர வாகனம் ஓட்டும் போதும் சரி, உயரமான இடங்களில் நின்று பணிபுரியும் போதும் சரி, தலையை பாதுகாக்கும் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், இதை பயணங்களின் போதும், வேலை செய்யும் போதும், தலைக்கவசம், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த மறந்து விடுகின்றனர். சிறு அலட்சியத்தால் அவர்கள் செய்யும் செயலால் விபத்துகள் ஏற்பட்டு, கோமாவில் படுக்கும் நிலை ஏற்படுகின்றது. இதற்கு, வெளியில் எவ்வளவு தான் விழிப்புணர்வு செய்யப்பட்டாலும், சுயமாக விழிப்புணர்வு அடைதல் ஒன்றே தீர்வாகும்.
கோமாவில் சிக்காமல் இருக்க, நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருப்பது அவசியம். இதை உங்களது நண்பர்களிடமும், குழந்தைகளிடமும் எடுத்து சொல்லுங்கள்.