பெரும்பாலான இதய நோய்களுக்கு காரணமாக இருப்பது மஞ்சள் நிறத்தில் மெழுகு போல இருக்கும் கொழுப்பு. இதனைத் தான் ஆங்கிலத்தில் கொலஸ்ட்ரால் என அழைக்கின்றோம். இது இரத்த நாளங்களின் குறுக்களவைக் குறைத்து நமக்கும் இதயத்தாக்குதலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து விடுகின்றது. இதனைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொண்டால் இதனால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம்.
கொலஸ்ட்ரால் எனும் கொழுப்புச் சத்து உடலுக்கு மிக முக்கியமானது. அத்தியாவசியமானது இதனால் ஹார்மோன் உற்பத்தி, செல்கள் உற்பத்தி போன்ற முக்கிய செயல்களும் உணவில் உள்ள கொழுப்பை ஜீரணிக்க அன்றாடமும் தேவைப்படுகின்றது.
அதே சமயத்தில் கொழுப்பால் பல கேடுகளும் ஏற்படுகின்றது. அவை செல்களிலிருந்து இரத்த ஒட்டத்திற்கு லிபோ புரோட்டீன் எனும் ஒரு வகை புரதத்தால் கொண்டு வரப்பட்டு இரத்தத்தில் சுற்ற ஆரம்பிக்கின்றது. இதனால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக இதயத்தில் உள்ள இரத்த நாளங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
இந்த லிபோ புரோட்டீன் இரு வகைப்படும். ஒன்று எல்.டி.எல் எனும் லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன் மற்றும் ஹெச்.டி.எல் எனும் ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன் இவை இரண்டிலும் ஹெச்.டி.எல் அதிகரிப்பதால் இரத்த நாளங்கள் மற்றும் இதயத்திற்கு வலுவையும் பாதுகாப்பையும் தருகின்றது. ஆனால் எல்.டி.எல் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளையும் இதயத்திற்கு பல கேடுகளையும் ஏற்படுத்துகின்றது.
மனிதனின் கல்லீரல் மனிதனின் தேவைகளுக்கேற்ப இக்கொலஸ்ட்ராலை தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும் எனவே, வெளியிலிருந்து கொழுப்பு தேவைப்படாது. அசைவ உணவு உண்பவர்களுக்கு இரட்டிப்பு அளவு கொலஸ்ட்ரால் வெளியிலிருந்து உடலினுள் புகுகின்றது. இதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சில வகை உணவுகளை நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம். கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இயற்கையில் நமக்கு பல வித உணவுகள் உள்ளன. அவை
வெள்ளைப் பூண்டு
தினசரி பூண்டு பல உணவில் சேர்த்து வந்தால் அது 10-15% கொலஸ்ட்ரால் அளவை தானாகவே நாளடைவில் குறைத்து விடும்.
வெங்காயம் பெரியது
தினசரி உண்டு வர அது ஹெச்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை கூட்டுகின்றது.
ஆப்பிள் போன்ற நார்ச்சத்து அதிகமாக உள்ள பழங்கள் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு வெகுவாகக் குறைகின்றது.
கேரட் போன்றவற்றில் உள்ள பீடா கரோடின் ஹெச்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்துகின்றது. இவை தவிர ஓட்ஸ் ஆரஞ்சு பீன்ஸ் போன்றவையும் ஹெச்.டி.எல் அளவை பெருக்குகின்றது. மேலும் உங்கள் உணவை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சோதனை செய்து கொள்ளுங்கள்.
உணவைக் கட்டுப்படுத்தி உடல் எடைய கட்டுப்படுத்துங்கள்.
எண்ணெய்யையும் எண்ணெய்ப்பதார்த்தங்களையும் தவிர்த்திடுங்கள்.
புகை பிடிப்பதை நிறுத்துங்கள்.
உணவு நலம் மார்ச் 2011
கொலஸ்ட்ராலைக், கட்டுப்படுத்தும், உணவுகள், இதயநோய், கொலஸ்ட்ரால், இரத்த நாளங்கள், இதயத்தாக்குதல், கொழுப்புச் சத்து, ஹார்மோன், லிபோ புரோட்டீன், எல்,டி,எல், லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன், ஹெச்,டி,எல், ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன், இதயம், கல்லீரல், கொலஸ்ட்ரால்அளவு, நார்ச்சத்து, பீடா கரோடின், உடல் எடை, புகை பிடிப்பது, கொலஸ்ட்ராலின் அளவுகள், கொலஸ்ட்ரால் அளவு, கொழுப்புகள், கொழுப்புச் சத்துக்கள், சத்துக்கள், கொழுப்பு,