பெருங்குடல் கோளாறுகள்

Spread the love

பெருங்குடலில் ஏற்படும் தசை அசைவுகளால்தான் கழிவுப்பொருட்கள் வெளியே தள்ளப்படுகின்றன. இதில் பாதிப்பு ஏற்பட்டால் வருவது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் இவையாகும். தசை அசைவுகள் சரியாக இல்லாவிட்டால் வாயு உற்பத்தியாகும். இதர காரணங்களும் உள்ளன. ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே கவனிக்க வேண்டும். மூலநோயாக இருக்கலாம். அதே சமயம் பெருங்குடலில் சுவர்களில் ஏற்படும் Polyps எனப்படும் கட்டிகளில் புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம். எனவே ரத்தக்கசிவை அலட்சியம் செய்யாதீர்கள். மலச்சிக்கலை தவிர்க்க சிறந்த வழி அதிக நார்ச்சத்து உள்ள பொருட்களை சாப்பிட வேண்டும்.

(Ulcerative Colitis)

இந்த U.colitis ஒரு Inflammatory Bowel Disease – கோலன் (பெருங்குடலின் பாகம்) சுவற்றில் உள்ள செல்களை அழித்து விடும். இதற்கும் Crohns diseasesக்கு இருக்கும் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரு மாதிரி இருக்கும். இது வரும் காரணம் தெரியவில்லை. பரம்பரை அல்லது வைரஸ், பாக்டீரியா தாக்குதல்கள் காரணமாகலாம். சாதாரணமாக 30 – 40 வயதுள்ளவர்களை தாக்குகிறது.

அறிகுறிகள்

கீழ் வயிறு வலி

ரத்த பேதி

உடல் எடைகுறைதல்

பசியின்மை

மலக்குடல்

ரத்தக்கசிவு

நீர்மச்சத்து இழப்பு

ஜுரம்

பிரட்டல்

இதை தவிர்க்க முறையான உணவு முறைகளை மாற்ற வேண்டும். பெருங்குடலை பாதிக்கும் உணவுப் பொருட்களை தவிர்க்கவும். அநேகமாக பால் காரணமாகலாம். குறைந்த கொழுப்புள்ள, புரதம் செறிந்த சத்தான உணவை எடுத்துக் கொள்ளவும்.

நேரம் கழித்து உண்பது, நொறுக்கு தீனிகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது, மசாலா அதிகமுள்ள உணவை தவிர்க்கவும்.

சமச்சீர் உணவு அவசியம். ஒவ்வாமையை உண்டாக்கும் உணவை தவிர்க்கவும். அவசர அவசரமாக உணவை அள்ளிப்போட்டுக் கொள்ளாதீர்கள். இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். அளவுக்கு மீறி சாப்பிடாதீர்கள்.

வலியை குறைக்கும் மருந்துகள் சாப்பிடுவதை கூடியமட்டும் தவிர்க்கவும். மருத்துவர் அறிவுரையின்றி இவைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சிகரெட், மதுபானங்கள், லாகிரி வஸ்துக்கள், இவை கூடவே கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்காதீர்கள்.

உடற்பயிற்சி, தியானம், யோகா இவற்றை பயிலுங்கள்.

மனசஞ்சலம், அழுத்தம், டென்ஷன் இவற்றை யோகா மூலமாக அல்லது மனநல மருத்துவத்தால் சரி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் முன் சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் அடுத்த உணவை உட்கொள்ளாதீர்கள். இதை வலியுறுத்துகிறார் திருவள்ளுவர் பெருமான்.

ஜீரண மண்டலம் ஓய்வின்றி உங்களுக்காக உழைக்கும் அவயங்களை கொண்டது. இரப்பை இல்லாமல் கூட வாழலாம். ஆனால் பெருங்குடல் இல்லாமல் நீங்கள் உயிர் வாழ்வது கடினம். இரப்பையில் புற்றுநோய் வந்தால் அதை அறுவை சிகிச்சையால் எடுத்துவிட்டு, உணவுக்குழாயை நேரடியாக பெருங்குடலுடன் சேர்த்து விடுவார்கள்! அப்போது ஜீரணம் கஷ்டம் தான். இருந்தாலும் நீங்கள் உயிருடன் இருப்பீர்கள்! இந்த நிலை உங்களுக்கு வர வேண்டாம். அதனால், உணவு முறையில் கவனம் செலுத்துங்கள்.


Spread the love