குடலை சுத்தமாக்க விருப்பம் உள்ளதா…?

Spread the love

குடல் சுத்தமாக இல்லையென்றால் செரிமான பிரட்சனைகள் தானாக வந்துவிடும். இப்படி பிரட்சனை ஏற்படும்போது, என்ன சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் எந்த பயனும் இல்லை.சுவைக்காக எத்தனையோ Junk உணவுவகைகளை உட்கொள்ளுகிறோம். அது குடலுக்கு எத்தனையோ பிரட்சனைகளை  உண்டாக்குகின்றது. அவ்வித பாதிப்பு ஏதும் வராமல் இருக்க சில உணவு வகைகளை பார்க்கலாம்.


குடலில் இருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும் ஆற்றல் பூசணிக்காயில் இருக்கின்றது. அதோடு நீர்சத்தும் அதிகம். உணவில் அடிக்கடி பூசணிக்காய் சேர்த்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி வேறு வீடியோவில் பார்க்கலாம். அடுத்து ஆப்பிள்.ஆப்பிளில் இருக்கும் “பெக்டீன்” குடலில் தேங்கி இருக்கும் டாக்ஸின்ஸ்சில் அழுத்தம் கொடுத்து வெளியேற்றிவிடும். இதற்கு ஆப்பிளில் காணப்படும் நார்சத்தும் ஒரு காரணமாக இருக்கின்றது.

நெல்லிக்காய் உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரிந்ததாகும். இதில் இருக்கும் உயிர்சத்தான வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. 
குடலில் இருக்கும் நச்சுகளையும், பாக்டீரியாக்களையும் மீதம் வைக்காமல் அழித்துவிடும்.மலச்சிக்கலுக்கு காரணமே, செரிமான கோளாறுதான். அதை போக்குகிற வல்லமை வாழைப்பழத்தில் இருக்கின்றது. 


இதில் இருக்கும் நார்சத்து குடலை சுத்தம் செய்து, உபாதைகளை வெளியேற்றுவதில் எந்த பிரட்சனையும் இருக்காது. குறிப்பாக குடலை சுத்தம் செய்வதில் ஆரஞ்சு சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரிமான உறுப்புகளை பலப்படுத்தி மலச்சிக்களையும் போக்கும். கழிவுகளை சீராக வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சு சாறு கொடுக்கலாம்.



Spread the love
error: Content is protected !!