மழை என்னதான் அழகான நிகழ்வாக இருந்தாலும் பருவ நிலை மாற்றத்தால் நமக்கு எதிர் வினையும் ஏற்படும். மழை இயற்கையின் எல்லா உயிர்க்கும் ஊட்டத்தை கொடுக்கும். அதில் நுண்கிருமிகளும் அடங்கும். இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அதனால் அதிக பிரட்சனைகள் நமக்கு ஏற்படும். பூண்டில் நுண்கிருமிகள், பூஞ்சை மற்றும் அல்லிசினில் பாக்டீரியாக்களை எதிர்க்க கூடிய ஆண்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் இருக்கின்றது.
தினமும் காலையில் இரண்டு, மூன்று பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால்,தொற்று நோயில் இருந்து தப்பிக்கலாம். அதே பூண்டு பற்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டுவர சளி மற்றும் காய்ச்சல் குணமாகும். காய்ச்சல் வருவதற்கு முன்பாகவோ அல்லது வரும் மாதிரி இருந்தாலோ ஒரு டீஸ்பூன் மிளகு, அறை துண்டு இஞ்சி இரண்டையும் நன்கு அரைத்து இதனோடு கருவேப்பிலையும் சேர்த்து அரைத்து திடமாக வைத்து கொள்ளுங்கள். இதை ஒரு நாளில் காலை,மாலை என இரண்டு வேலைக்கும், உருண்டை செய்து விழுங்கி வந்தால் காய்ச்சலில் இருந்துதப்பிக்கலாம். இது உடலிற்கு மிகவும் நல்லது.
மற்றொரு எளிய மருந்து காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் எடுத்து அரை தம்ளர் தினமும் குடித்துவந்தால் காய்ச்சல் தீரும். சளியோடு சேர்ந்து இருமலும் உள்ளவர்கள், இஞ்சியை துண்டுதுண்டாக நறுக்கி, அதில் உப்பை தூவி, நன்கு கலக்கவும். இதில் சிறிது துளசி இலையும்சேர்த்து வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், வறண்ட இருமலோடு சளியும் குணமாகும்.இது பலன் தரும் வரைக்கும் சாப்பிட்டு வாருங்கள். ஒரு கப் வெந்நீரில், ஒரு டீஸ்பூன்தேன் கலந்து, அரை டீஸ்பூன் மிளகு போட்டு 15 நிமிடம் கழித்து ஊரவைத்து குடித்து வர இருமல் மற்றும் சளி தீரும்.
மருந்து காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் எடுத்து அரை தம்ளர் தினமும் குடித்துவந்தால் காய்ச்சல் தீரும். சளியோடு சேர்ந்து இருமலும் உள்ளவர்கள், இஞ்சியை துண்டுதுண்டாக நறுக்கி, அதில் உப்பை தூவி, நன்கு கலக்கவும். இதில் சிறிது துளசி இலையும்சேர்த்து வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், வறண்ட இருமலோடு சளியும் குணமாகும்.இது பலன் தரும் வரைக்கும் சாப்பிட்டு வாருங்கள். ஒரு கப் வெந்நீரில், ஒரு டீஸ்பூன்தேன் கலந்து, அரை டீஸ்பூன் மிளகு போட்டு 15 நிமிடம் கழித்து ஊரவைத்து குடித்து வரஇருமல் மற்றும் சளி தீரும்.