தேங்காய் எண்ணெய் – நன்மையா தீமையா?

Spread the love

மிகுதியான பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும் உணவுப் பொருட்களில் தேங்காய் எண்ணெய்யும் ஒன்று. இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களிலிருந்து தேங்காய் எண்ணெய் பயன்பட்டு வந்திருக்கின்றது. ஆயுர்வேத ஆசான்களில் ஒருவரானவரும், ஆயுர்வேத அறுவை சிகிச்சை நிபுணருமான சுஸ்ருதாவின் காலத்திலிருந்தே (அதாவது 2000 வருடங்கள்) தேங்காய் எண்ணெய் உபயோகம் வழக்கத்தில் இருந்திருக்கின்றது. ஆனால் சமீபத்தில் அமெரிக்க உணவு வழிகாட்டில் தேங்காய் எண்ணெய்யை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்த சர்ச்சைகளை தீர்க்க முழுமையான விவாதம் தேவை.

தேங்காய் எண்ணெய் – ஆயுர்வேத விவரங்கள்

தேங்காயும் அதன் எண்ணெய்யும் ஆயுர்வேதத்தில் பரவலாக, கீழ்க்கண்ட வகையில் உபயோகிக்கப்படுகின்றது.

உணவு பொருட்களில் ஒன்றாக

வெளி உபயோகத்திற்காக

உள்ளுக்கு மருந்தாக

சுஸ்ருதா தேங்காய் எண்ணெய்யின் ஆரோக்கிய பயன்களை கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

தேங்காய் எண்ணெய் இயற்கையான குளிர்ச்சி தரும் பொருள்.

ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றது.

முடியை பளபளப்பாக்கி அதன் வளர்ச்சி, பலத்தை மேம்படுத்துகின்றது.

பாலுணர்வை தூண்டும் இயற்கை பொருள்.

ஊட்டச்சத்து குறைந்த திசுக்களை மீண்டும் வலிமையாக்குகின்றது.

உடல் இளைப்பு, பலவீனம், சுவாச மண்டல கோளாறுகள், நீரிழிவு, சிறுநீரக மண்டல கோளாறுகள் போன்றவற்றுக்கு அளிக்கும் சிகிச்சைக்கு உதவுகின்றது.

தேங்காய் எண்ணெய் காயங்களை சீக்கிரம் குணமடைய உதவுகின்றது. தோலில் காயங்களினால் ஏற்படும் குழிகளை சமனாக்குகின்றது.

வாத, பித்தங்களை அமைதிப்படுத்தி, கபத்துக்கு உதவுகின்றது.

தேங்காய் எண்ணெய் அடிப்படையாக இருக்கும் ஆயுர்வேத மருந்துகள்

முடி செழிப்பாக வளர உதவும். ஹேர் ஆயில்களில் தேங்காய் எண்ணெய் தான் பரவலாக பயனாகின்றது.

முடி மற்றும் சர்ம கோளாறுகளுக்கான சிகிச்சையில் உதவுகின்றது.

பொடுகு, தலை அரிப்பு, எக்சிமாக்கு கொடுக்கப்படும் தைலங்களில் தேங்காய் எண்ணெய் இருக்கும்.

வலி, தசை இழுப்பு, சுளுக்கு, ஆமவாதம் முதலியவற்றுக்கு தரப்படும் கர்ப்பூரம் கலந்த தைலங்களின் மூலப்பொருள் தேங்காய் எண்ணெய்.

முடி செழிக்கவும், தலைவலி நீங்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகின்றது.

தேங்காய் எண்ணெய்யைப் பற்றி தற்கால கருத்துகள்

தேங்காய் எண்ணெய் முழுமையான பூரித கரைசலான கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. அதனால் இதயத்திற்கு நல்லது அல்ல கொலஸ்ட்ராலும் அதிகமாகும். தேங்காய் எண்ணெய் திட ரூபமான வஸ்து – திரவமல்ல. வேறு திரவ எண்ணெய்களை உபயோகிப்பது நல்லது.

பூரித கொழுப்பு அமில கரைசல் தேங்காய் எண்ணெய்யில் அதிகம் இருந்தாலும், இரண்டிற்கும் சில வித்யாசங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் மத்திம அளவு உள்ள டிரைக்ளைசிரைடுகள் (Triglycerides  ) செறிந்தது.

இரு மருத்துவ ஆய்வுகள்

பிலிப்பைன்ஸின் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆய்வுகளின் படி, தேங்காய் எண்ணெய், நியுமோனியா உள்ள குழந்தைகளுக்கு துரிதமாக சுவாசத்தை சீராக்கியது.

40 அதி-பருமனான பெண்களை வைத்து நடத்திய ஆய்வில், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டதால் பக்க விளைளவுகளின்றி, உடல் எடை குறைந்திருக்கின்றது.

சரி, தீர்ப்பு என்ன? தேங்காய் எண்ணெய் நன்மையா தீமையா

ஆயுர்வேதத்தின் படி இயற்கையாக தேங்காய் எண்ணெய் உள்ளுக்கு எடுத்துக் கொண்டால் உடலை போஷிக்கும். எனவே உடல் இளைப்பு, பலவீனம் போன்றவற்றுக்கு மருந்தாக உபயோகமாகின்றது.

நியுமோனியா போன்ற சுவாச மண்டல கோளாறுகளில் தேங்காய் எண்ணெய் மருந்தாக பயனாகின்றது. இது மேற்சொன்ன ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

முடி வளர்ச்சி, காயங்களை ஆற்றுதல், எக்சிமா மருந்தாக, இயற்கையான குளுமை குணம் முதலியவற்றுக்கு வெளிப்பூச்சாக நல்ல பலன் தரும் என்று ஆயுர்வேதம் தேங்காய் எண்ணெய்யை புகழ்கின்றது.

ஆராய்ச்சிகள், தேங்காய் எண்ணெய் அதிக உடல் பருமனையும், அதிக அளவு கொலஸ்ட்ராலையும் உண்டுபண்ணுவதில்லை என்று தெரிவிக்கின்றன. கேரளாவில் எல்லா வித உணவு தயாரிப்புகளிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. தேங்காய் எண்ணெய் தான் அதிக உடல் பருமனுக்கு காரணம் என்றால் ஏன் கேரள மக்கள் அனைவரும் அதிக உடல் எடை கொண்டவர்களாக இல்லை?

இருந்தாலும் அதிக உடல் எடை உள்ளவர்கள் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்.

முடி தைலங்களுக்கு தேங்காய் எண்ணெய் போன்ற நல்ல முக்கிய மூலப்பொருள் வேறேதும் இல்லை.

தேங்காய் எண்ணெய் சர்மத்திற்கு ஈரப்பசை ஊட்டவும், மிருதுவாக்கவும் பயன்படுகின்றது.

ஆரோக்கியமான மனிதனின் உணவில் அளவாக தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அது மிகவும் நல்லது. அளவாக உபயோகித்தால் தேங்காய் எண்ணெய்யின் பலன்களைப் பெறலாம்.


Spread the love