தமிழ் நாட்டை பொறுத்தவரை தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கும், தோலிற்கும்மட்டும் அதிகமாக பயன்படுகிறது. இது பாக்கெட், பாட்டில்களில் இருக்கும் தேங்காய்எண்ணெயின் பயன்பாடு. Extra Virgin தேங்காய் எண்ணெய் என்ற சுத்தமான செக்கு எண்ணெய்நமது ஆரோக்கியத்திற்கு எத்தனை நன்மைகள் என்று தெரியுமா? இதில் கலப்படம்இருப்பதில்லை அதனால் தான் Virgin தேங்காய் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இதில்இருக்கும் லாரிக் அசிட், அதிசிறந்த ஆண்டி ஆக்ஸிடன்டாக தாய் பாலிற்கு நிகரான தன்மையைகொண்டிருக்கின்றது. அதோடு இதில் ௦% கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது.
இதை எந்த வெப்பநிலையில் கொதிக்க வைத்தாலும் இதன் தன்மை மாறுவதில்லை.உடல் எடையை குறைக்க நல்ல உணவாக பயன்படுகின்றது. இதில் இருக்கும் ஆண்டி பாக்டீரியல்தொகுப்பு நச்சுகளோடு போராடி செரிமான சிக்கல்களையும் குணப்படுத்துகின்றது. அதோடுகுடல்களையும் சுத்தப்படுத்துகிறது. குறிப்பாக தேங்காய் எண்ணெயில் இருக்கும் மீடியம்ச்சைன் ட்ரிகிளிசெரிட் ஆசிட், கொழுப்பாக எரிக்க கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. அதிலும்நமக்கு எளிதில் கிடைக்க கூடிய இந்த எண்ணெயில் தான் அதிகமாக காணப்படுகின்றது. இது சர்க்கரைவியாதியை கட்டுபடுத்துவதாகவும் ஆரம்பத்திலேயே இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின்அளவை சரியான அளவில் பராமரிப்பதாகவும் கூறுகின்றனர்.
இதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் இதயத்தை பாதுகாப்பதோடு Cardiovascularநோய் வராமலும் தடுக்கின்றது. அதுமட்டுமின்றி கெட்ட கொழுப்புகளை இரத்தத்தில்இருந்து நீக்கி HDL என கூறக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புகளை உற்பத்தி செய்கின்றது.இதனால் இதயத்திற்கு ஏற்படும் நோய் தடுக்கப்படுகின்றது. தேங்காய் எண்ணெயை உணவில்சேர்க்கும்போது அதில் இருக்கும் லாரிக் ஆசிட் நமது உடலில் ஆண்டிவைரஸ் Agent ஆகமாறுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் நமக்கு அதிகரிக்கும்.
https://www.youtube.com/watch?v=952lnT7Yycc