தேங்காய் பால் ரசம்

Spread the love

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு -தலா1ஸ்பூன்

பச்சரிசி                         –1ஸ்பூன்

மிளகு                           –2ஸ்பூன்

பாசிப்பருப்பு                      –2ஸ்பூன்

மஞ்சள்தூள்                      –1/4ஸ்பூன்

உப்பு                             -ருசிக்கேற்ப

கறிவேப்பிலை                    –2ஆர்க்குகள்

கெட்டி தேங்காய்பால்              –1/2கப்

செய்முறை

வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி, மிளகு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள், தேவையான தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும். இத்துடன் 1 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கரகரப்பான பொடி சேர்க்கவும். கொதித்து வரும் போது தேங்காய் பால் சேர்க்கவும். மேலாக நுரைத்து வரும் போது அடுப்பை அணைக்கவும். கறிவேப்பிலையை கிள்ளி மேலாக சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

கொய்யா தோசை

தேவையான பொருட்கள்

கெட்டியான கொய்யா காய்கள்-4

புழுங்கலரிசி         –1கப்

பச்சரிசி              –1கப்

உளுந்து             –1/4கப்

வெந்தயம்           –1/2ஸ்பூன்

துருவின தேங்காய்   –1கப்

உப்பு, எண்ணெய்      -தேவைக்கேற்ப

செய்முறை

புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை தனித்தனியே ஊற வைக்கவும். புழுங்கலரிசி, பச்சரிசியை ஒன்றாகவும், உளுந்து வெந்தயத்தை ஒன்றாகவும் போட்டு அரைக்கவும். கொய்யாவின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக்கவும். இத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அரைத்தவற்றை ஒன்றாகப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். 2 மணி நேரங்கள் கழித்து வார்க்கவும்.

உணவு நலம் மார்ச் 2011

தேங்காய் பால் ரசம், செய்முறை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி, –மிளகு, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை, கெட்டி தேங்காய்பால்,

கொய்யா தோசை, செய்முறை, கொய்யா காய்கள், புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம், துருவின தேங்காய்,


Spread the love
error: Content is protected !!