கோவக்காய் சர்க்கரை நோயை கட்டுபடுத்துவதாக பல ஆய்வுகளில்கூறப்படுகின்றது. ஆனால் பழங்காலத்தில் இருந்தே, சர்க்கரை நோயை கட்டுபடுத்துவதில்கோவக்காய் நல்ல பலனை தருகின்றதாம். கோவக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குளுக்கோஸ்அளவு சீராகி சில வாரத்திலேயே இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுபடுத்தபடுகின்றது. இதில்இருக்கும் ஆண்டி ஒபேசிட்டி தொகுப்பு கொலஸ்ட்ராலை கரைக்க கூடியதாக இருக்கின்றது.எனவே உடல் எடை குறைவிற்கு இது நல்ல ஒரு உணவு என்று தான் சொல்லவேண்டும்.
கோவக்காயில் இரும்புசத்து அதிகம். இது உடலிற்கு பலத்தை கொடுப்பதோடுஹீமோகுளோபின் அளவையும் மேம்படுத்தி, அனேமியா வராமலும் தடுக்கும். தர்பூசணியில் இருக்கும்முக்கிய ஊட்டசத்தான வைட்டமின் பி-2, கோவக்காயில் இருக்கின்றது. இது மனிதர்களின் ஆற்றல்அளவை பாதுகாப்பதில் முக்கிய பங்காக இருக்கின்றது.
அதிகமான மினரல்ஸ் மற்றும் ஊட்டசத்து நிறைந்திருக்கும் கோவக்காயில் உள்ளஆண்டி-ஆக்ஸிடன்ட் நரம்பு மண்டலத்தை வலுவாக்கும். மேலும் இதில் இருக்கும்கார்போஹைட்ரேட், நமது உடலில் அதிசிறந்த குளுக்கோஸ் மாற்றமாகும். அதனால் உடல்சோர்வு இல்லாமல் இயங்கும் அதோடு உடல் வளர்ச்சிக்கான வளர்சிதை மாற்றம் சரியான கட்டுப்பாடாகஉதவுகின்றது. குறிப்பாக மற்ற காய்கறிகளை போலவே இதில் இருக்கும் நார்சத்து செரிமானத்தைசீராக்கும்.
எனவே கோவக்காய் எந்தஅளவிற்கு எடுத்துக்கொண்டாலும் அது நமக்கு எளிதில் செரிமானமாகும். மலச்சிக்கலை தடுத்துகழிவுகள் சிரமம் இல்லாமல் வெளியேறும். அதோடு அல்சர் மற்றும் வாய்புன்னையும் குணப்படுத்தும்.இதில் இருக்கும் கால்சியம் மற்றும் மினரல்ஸ் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவியாகஇருக்கின்றது. சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லையும் சரிசெய்யும் ஆற்றல் இதில்உள்ளது. தொடர்ந்து கோவக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படாமலும்பாதுகாக்கலாம்
https://www.youtube.com/embed/_8tQ-xUZdnU