கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்பொருள், மினரல் மற்றும் வைட்டமின் சி, போன்ற அத்தியாவசியமான சத்துக்களை கொண்டதுதான் கிராம்பு. வாசனை பொருளாக உணவில் சேர்க்கப்படும் கிராம்பில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றது. அதை எவ்வாறு சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம். 5 கிராம்பை ஒரு கப் சுடுநீரில் போட்டு டீ யாக குடித்தால், இரத்த ஓட்டம் சீராகி, பற்கள் தொடர்பான எல்லா பிரச்சனைகளையும் தடுக்கும்.
அதனால் பல்வலி இருப்பவர்கள் மிதமான சூட்டில் கிராம்பு டீ-யை குடித்தால் பல்வலி குணமாகும். கிராம்பு டீ-யை குடிப்பதினால் வயிற்று உப்புசமும் உடனே நீங்கும். பொதுவாக நீண்ட தூர பயணம் செய்பவர்களுக்கு குமட்டல், வாந்தி ஏற்படும். அதற்கு புளிப்பு சாக்லெட், எழுமிச்சை இவையெல்லாம் கையிலேயே வைத்திருப்பார்கள். ஆனால் குமட்டும் நேரத்தில் ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கிராம்பு டீ, தலைவலி, உயர் இரத்த அழுத்தம், செரிமான பிரட்சனை, கல்லீரல் குறைபாடு, போன்ற பிரட்சனைகளை தடுத்து, இரத்த ஓட்டத்தையும் சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த டீ குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் எழுந்ததும் ஏற்படும் சோர்வு நீங்க நல்ல பானமாகும். தினமும் காலையில் ஒரு கிராம்பு வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் வாய் துர்நாற்றம் அடியோடு நீங்கும்.