கிளியோபாட்ரா குளித்த பூ

Spread the love

குங்குமப்பூ என்றதுமே ஒருவரது மனதில் தோன்றுவது இரண்டு விஷயங்கள். ஒன்று அதன் அதிக விலை. மற்றொன்று குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கு கர்ப்பிணிப் பெண்கள் உண்பது. – குங்குமப்பூவை அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அது சுத்தமானதா, தரமானதா? போன்ற சந்தேகங்களும் நம் மனதில் எழக்கூடும்.

குங்குமப்பூக்களில் காஷ்மீர் குங்குமப்பூக்கள் பெயர் பெற்றவை. ஆரம்ப காலங்களில் அதாவது கி.மு. 7ஆம் நு£ற்றாண்டில் குங்குமப்பூ பற்றிய சரித்திரக் குறிப்புகள் காணப்படுகின்றன அக்காலத்தில் தென் மேற்கு ஆசிய நாடுகளில் பயிரிடப்பட்டு வந்த குங்குமப்பூ பிற்காலத்தில் காஷ்மீரத்து பள்ளத்தாக்குகளில் பயிரிடப்பட்டு வருகின்றது.

நாம் குங்குமப்பூ என்று கூறும் குங்குமப்பூ ஒரு பூவின் மகரந்த கேசரமாகும் ஒரு பூவில் 3 மகரந்த கேசரம் மட்டுமே இருப்பதால் அந்த மகரந்த கேசரங்களைச் சேர்த்துத் தருவதாலேயே அதன் விலை அதிகமாக உள்ளது. அதிக விலை போகும் மூலிகைகளுள் குங்குமப்பூவும் ஒன்றாகும் அதனை வாயில் போட்டால் ஒரு வித்தியாசமான கசப்பு சுவை வரும் ஒரு வித்தியாசமான மணமும் வரும். இளம் மஞ்சள் நிறத்தை தரக்கூடியது.

எகிப்தியர்கள் அதிகமான குங்குமப்பூவைப் பயன்படுத்தியதாக சரித்திரச் சான்றுகள் உள்ளன அக்காலத்தில் வாழ்ந்த பேரழகி ‘கிளியோபாட்ரா’ தனது காதல் வாழ்க்கை சிறப்பாக அமைத்திட குங்குமப்பூவை தான் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்ததாக சான்றுகளும் உள்ளன. எகிப்திய மருத்துவத்தில் குங்குமப்பூ ஒர் நிலையான இடத்தை வகிக்கின்றது. வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்களுக்கான மருந்துகளில் குங்குமப்பூ உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ரோமானியர்கள் குங்குமப்பூவின் பயன்பாட்டை அறிந்து அதனைத் தாங்கள் குடியேறிய அனைத்து நாடுகளுக்கும் தங்களுடன் எடுத்துச் சென்று பயிரிட்டு வந்துள்ளனர்.

அலெக்சாண்டர் தனது ஆசிய படையெடுப்பின் போது அதிகமாக குங்குமப்பூவை பயன்படுத்தியுள்ளார். தனது போர் காயங்களுக்கு குங்குமப்பூவை அரைத்துப் பூசியுள்ளார் தவிர உணவிலும் பயன்படுத்தியுள்ளார். உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட பயிரிடப்பட்ட குங்குமப்பூ காஷ்மீரிற்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தான் வந்துள்ளது. அதன் பின் மட்டுமே காஷ்மீரில் குங்குமப்பூ பயிரிடப்பட்டுள்ளது.

குங்குமப்பூச் செடிகள் கிழங்கிலிருந்து வளரக் கூடியவை செடி சுமார் 11/2 அடி உயரம் வளரக் கூடியது. ஒரு முறை பூ பூத்தவுடன் செடி காய்ந்து விடும். பின் கிழங்கிலிருந்து புதிய செடி வளரும். பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வண்ண மயமாக இருக்கும். ஒவ்வொரு பூவிலும் மூன்று மகரந்த கேசாகள் இருக்கும். இந்த மகரந்த கேசாகளே குங்குமப்பூ என அழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குங்குமப்பூ மிகவும் செழிப்பான தரைகளில் மட்டுமே வளரக்கூடியது. வெயில் காலங்களில் செடி காய்ந்து விடும் பின்னர் மழைக் காலத்தில் துளிர் விட்டு வளர்ந்து வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாக பூத்து பின் செடி கருகி விடும் வினோதம் கொண்டது.

குங்குமப்பூவில் சுமார் 150ற்கும் மேற்பட்ட எண்ணெய்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் தான் அதன் ருசி, நிறம், மணம் போன்றவற்றிற்குக்காரணம்.

குங்குமப்பூ உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் நாடு ஸ்பெயின் ஆகும் அதனைத் தொடர்ந்து இத்தாலி, கிரீஸ், போன்ற நாடுகள் உள்ளன இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது இந்தியாவின் வருட உற்பத்தி உலக உற்பத்தியில் சுமார் 7 சதவிகிதம்.

மூக்கடைப்பு விலக…

சிறிது குங்குமப்பூவை எடுத்து சிறிது சூடன் சேர்த்து அரைத்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நெற்றியில் பற்று போல போட்டால் தலைவலி விலகும் மூக்கடைப்பு நீங்கும்.


Spread the love