லைமும் லெமனும்

Spread the love

இந்தியா போன்ற உஷ்ண பிரதேசங்களில் விளைவது எலுமிச்சை ஊறுகாய். (Lime) இதன் தாவரவியல் பெயர் – Citrus Aurantifolia குடும்பம் – Rutaceae ஆங்கிலத்தில் ‘லெமன்’ (Lemon.) எனப்படுவது Citrus Limon. இது குளிர் பிரதேசங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. தமிழில் இதை பெரிய எலுமிச்சை என்பார்கள். குணாதிசயங்களில் லெமனும், லைமும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

சிட்ரஸ் வகையில் சிறிய மரம் எலுமிச்சை தான் (Lime). பல கிளைகளுடன் 12 அடி உயரம் வளரும். மிருதுவாக, வழவழப்பாக, எண்ணை தடவினது போல் மிளிரும் பழங்கள் உபயோகிக்க சிறந்தவை. அப்படியே வைத்திருந்தால் 1 வாரமும், ஃபிரிட்ஜில் வைத்தால் 2-3 வாரங்களும், எலுமிச்சை கெடாமல் இருக்கும்.

எலுமிச்சை பழத்திலிருந்து அதிக சாறு பெற, பழத்தை ஃபிரிட்ஜிலிருந்து எடுத்தால், மைக்ரோவேவ் அடுப்பில் சில வினாடிகள் வைத்து எடுக்கலாம். இல்லாவிட்டால் வீட்டின் உள் இருக்கும் உஷ்ண நிலைக்கு, எலுமிச்சம் பழத்தை கொண்டு வர வேண்டும். உள்ளங்கையில் வைத்து உருட்டினால் ஜுஸ் அதிகம் வரும்.

மாதமொரு வைட்டமின்

ஃபோலிக் அமிலம் (பி 9) மற்றும் கோபால்மின் (பி 12) ஃபோலிக் அமிலம் எனப்படும் வைட்டமின் பி 9 மற்றும் கோபால்மின் எனப்படும் வைட்டமின் பி 12 ம் ஒன்றிணைந்து செயல்படும் வைட்டமின்கள்.

குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் மெகாலோபிளாஸ்டிக் சோகையை (Megaloblastic Anaemia) குணப்படுத்துவதில் இந்த இரண்டு வைட்டமின்களும் இணைந்து பணியாற்றுகின்றன. இவை இரண்டும் நீரில் கரைபவை ஃபோலிக் அமிலம் நிதானமாகத்தான் நீரில் கரையும்.

ஃபோலிக் அமிலம் (பி 9)

முன்பெல்லாம் குழந்தைகளில் சில பிறக்கும் போதே சில குறைபாடுகளுடன் பிறப்பதின் காரணங்கள் சரிவர தெரியாமல் இருந்தது. இந்த மாதிரி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மூளை, தண்டுவடத்தின் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டாலும் ஏன் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது புரிபடவில்லை. வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் குறைபாடுகள் பல பாதிப்புகளை உண்டாக்கும் என்று தெரிந்த பின் கர்ப்பிணிகளுக்கு, ஃபோலிக் அமிலத்தை கொடுத்து பிரிட்டனில் நடத்திய ஆய்வில், இந்த வைட்டமின் சத்து குறைபாடே குறைகளுடன் குழந்தைகள் பிறக்கக் காரணம் என்று தெரியவந்தது. தற்போது கர்ப்பிணிகளுக்கு தவறாமல் ஃபோலிக் அமில மாத்திரைகள் தரப்படுகின்றன.

ஃபோலிக் அமிலம் ஃபோலேட் மற்றும் ஃபோலாசின் (Folacin) என்றும் சொல்லப்படுகிறது. இதன் பணிகளும் பயன்களும் மிக முக்கியமான செயல்பாடு – கருவில் உள்ள குழந்தைக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பிறக்கும் குழந்தை நரம்புத்தளர்ச்சியின்றி ஆரோக்கியமாக பிறக்க வழி செய்கிறது.

ரத்தத்தின் சிவப்பணுக்கள் பல்கிப் பெருகவும், முதிர்ச்சியடையவும் உதவுகிறது. வைட்டமின் பி 12 – டன் சேர்ந்து மரபணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.

நரம்பு திசுக்களில் மரபணுக்கள் உற்பத்தியாகவும் அவற்றை பராமரிக்கவும் உதவுகிறது.

உண்ணும் உணவிலிருந்து புரதத்தை பிரித்தெடுத்து உட்கிரகிக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள் சுரக்க உதவுகிறது.

சர்மத்திற்கு நல்லது.

மனச்சோர்வின் சிகிச்சைக்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

ஃபோலிக் அமிலத்தின் தினசரி தேவைகள்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் வயதைப் பொருத்து – 100

மைக்ரோ கிராம் – 400 மைக்ரோ கிராம்

நாட்பட்ட சிகிச்சைக்கு – 100 மைக்ரோ கிராம்

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் – 150 – 400

மைக்ரோ கிராம். 600 மைக்ரோ கிராம் கூட தேவைப்படலாம்.

ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகள் 100 கிராம் உணவுப்பொருள்

கம்பு – 45.5

சோளம் – 20.0

மக்காச்சோளம் – 20.0

கோதுமை மாவு – 35.8

கோதுமை – 36.6

கொத்துக்கடலை – 186.0

கடலைப்பருப்பு – 147.5

பொட்டுக்கடலை – 139.0

உளுத்தம் பருப்பு – 132.0

காராமணி – 133.0

பயத்தம் பருப்பு – 140.0

துவரம்பருப்பு – 103.0

சோயாபீன்ஸ் – 100.0

தண்டுக்கீரை – 149.0

கறிவேப்பிலை – 93.9

புதினா – 114.0

பசலைக்கீரை – 123.01

சேப்பம்கிழங்கு – 54.0

கோவைக்காய் – 59.0

வெண்டைக்காய் – 105

எள் – 134

வெந்தயம் – 84

தக்காளி – 30

கேரட் – 15

கருணைக்கிழங்கு – 17.5

முட்டைக்கோஸ் – 23.0

கத்தரிக்காய் – 34.0

பீன்ஸ் – 45.5

வாழைக்காய் – 164

புடலங்காய் – 15.5

கொப்பரை தேங்காய் – 16.5

தேங்காய் – 12.5

பரங்கிக்காய் – 13.0

வெள்ளரிக்காய் – 14.7

வாத்து முட்டை – 80

கோழி முட்டை – 78.3

ஆட்டு லிவர் – 176.2

செம்மறியாட்டு லிவர் – 188.0

ஃபோலிக் அமிலம் குறைந்தால்

ஜீரண சக்தி பாதிக்கப்படுவதால், ஊட்டச்சத்துக்கள் குறைந்து, ரத்த சோகை, களைப்பு, ஆயாசம் முதலியன உண்டாகும்.

பிறக்கும் குழந்தைகள் நரம்பு மண்டல கோளாறுகளுடன் பிறக்கும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

மன அழுத்தம், சோர்வு, மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.

அதிகம் உட்கொண்டால்

அதிகமானாலும் பெரிய பிரச்சனைகள் வருவதில்லை.

அதிகமானால் வைட்டமின் பி 12 ளின் செயல்பாடுகளை குறைக்கலாம்.

எதனால் அழிகிறது

சூரிய வெளிச்சம், சூடு.

வைட்டமின் பி 12 (கோபால்மின், Cobalmin) இது ஒரு விந்தையான வைட்டமின். முதல் விந்தை இதில் கோபால்ட் (Cobalt) என்ற தாதுப்பொருள் உள்ளது. விட்டமினும், தாதுப்பொருளும் சேர்ந்த அதிசய கலவை இந்த வைட்டமின் தான் இரண்டாவது மற்ற வைட்டமின்கள் போலில்லாமல், கோபால்மின் உள்ள உணவுகள் உடல் ஏற்றுக் கொள்ள ஒரு மணி நேரம் பிடிக்கும். இந்த வைட்டமின, வயிற்றிலுள்ள Intrinsic factor என்ற புரதம் இருந்தால் தான் உட்கிரகிக்கப்படும்.

மற்றொரு அம்சம், இந்த வைட்டமின் மிகக் குறைந்த அளவே தினசரி தேவைப்படும். குறைந்த அளவிலேயே நிறைந்த பலன்களைத் தரும். இந்த வைட்டமின் “சக்தி” வைட்டமின் என்று குறிப்பிடப்படுகிறது. துரதிர்ஷடவசமாக கோபால்மின் சைவ உணவுகளில் காணப்படுவதில்லை. அசைவ உணவுகளிலிருந்து தான் கிடைக்கும். தாவரங்களுக்கு கோபால்மின்னை தயாரிக்கும் திறனில்லை.


Spread the love
error: Content is protected !!