சருமத்திற்கு வயதே ஆகாது இந்த மூலிகை இருந்தால்

Spread the love

பொதுவாக நமது வயதை பாதி முடிவு செய்வதே நமது முகம் தான். இது இயற்கையான விஷயம் தான். ஆனால் சிறு வயதிலேயே நமக்கு வயதான தோற்றத்தை தர கூடிய சருமம் இயற்கை தன்மையை இழந்திருக்கும். அதற்கு சில இயற்கை மூலிகையை வைத்து தயார்செய்ய கூடிய Face Pack பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
இலவங்கம் இயற்கையாகவே Anti-aging நன்மையை கொண்டிருக்கின்றது.

இதற்கு தேவையானது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சில துளி இலவங்க எண்ணெய் இவை இரண்டையும் கலந்து வைக்கவும். முதலில் சுடு நீரால் முகத்தை நன்கு கழுவவும். பின் இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்கு மசாஞ் செய்து ஒரு அரைமணி நேரத்திற்கு முகத்தை உலரவிட்டு குளிர்ந்தநீரில் கழுவவும். அதனால் இலவங்கத்தில் Free Radical துடைத்து அழிக்ககூடிய ஆற்றல்இருக்கின்றது. அதுமட்டுமின்றி இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் வயதாகும் நிகழ்வின் வேகத்தை குறைக்கும்.


தோல் பாதுகாப்பிற்கு இஞ்சியின் பயன்பாடு 1௦௦௦ வருடமாக இருந்து வருகின்றது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி இன்ஃப்லமேட்டரி சருமம்வயதாகும் தூண்டுதலை தடுக்கும். இந்த Face Pack-க்கு தேவையானவை: 2 டீஸ்பூன் ஆலிவ்ஆயில், 2 டீஸ்பூன் Brown சர்க்கரை பின் ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி இதை கலந்துவைக்கவும். பின் முகத்தை நல்ல க்ளென்சரை பயன்படுத்தி கழுவவும்.

இந்த பொருட்களைவைத்து முகத்தை 1௦ நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு நீக்கிவிடவும். இதேமுறையை அஸ்வகந்தா பவுடர், அரை டீஸ்பூன் இஞ்சி பவுடர், எலுமிச்சை சாறு வைத்துசெய்யலாம். இதனால் முகச்சுருக்கம், எண்ணெய் வடியும் பிரட்சனைகள் இவையனைத்தும்நீங்கி முகத்திற்கு டைட்னஸ் கிடைப்பதோடு முகம் பொலிவு பெறும்.



Spread the love