இலவங்கம்

Spread the love

Cinnamomum Zeylanica

பசுமையான இலவங்கச் செடி இதன் உலர்ந்த இலைகளும், பட்டைகளும், வாசனை திரவியங்களில் முக்கியமானவை. நல்ல வேறுபட்ட நறுமணமுடையவை. ஸ்ரீலங்கா இலவங்க செடிக்கு பெயர் பெற்றது. இந்த செடியை 2 . 5 மீ. உயரத்திற்கு மேல் வளர விடாமல், பராமரித்து, பட்டைகள் எடுக்கப்படுகின்றன.

பிற பெயர்கள்

சமஸ்கிருதம் – த்வாக், ஆங்கிலம் -Cinnamom Bark, தெலுங்கு – லவங்கப்பட்டி,  ஹிந்தி – தால்சினி, கன்னடம் – லவங்கப்பட்டி, மலையாளம் – லவங்கப்பட்டா.

முக்கிய பயன்

நீரிழிவு வியாதிக்கு அருமருந்து.

பயன்கள்

நீரிழிவு வியாதியை தவிர பல் வலி, வாய்துர்நாற்றம், அஜீரணம், ஜலதோஷம், பேதி, வாந்தி, போன்றவற்றையும் குணப்படுத்தும். உணவுக்கு மணமும் சுவையும் சேர்க்க பயன்படும்.

சிறப்பு அம்சம்

இன்சுலின் எதிர்ப்பை உண்டாக்கும் ‘என்ஸைம்களை’ செயலிழக்க செய்யும். இதனால் டைப் – 2 நீரிழிவு வியாதிக்கு நல்ல மருந்து. இதை உட்கொண்டால் இன்சுலின் உடல் முழுவதும் சீராக பரவ உதவும். இதற்கு முன் தெரியாத உண்மை – இலவங்கப்பட்டை ரத்த சர்க்கரையை கணிசமாக குறைக்கிறது. உடலின் கொழுப்பு செல்கள் இன்சுலினை ஏற்றுக் கொள்ளும் படி செய்கிறது. இதனால் சர்க்கரை ஜீரணம் சுலபமாகிறது. ரத்தத்தில் எவ்வளவு குளுகோஸ் இருக்க வேண்டுமென்பதை நிலை நாட்டுகிறது. முக்கியமாக, இலவங்கப்பட்டை – செல்கள் குளுக்கோஸை சக்தியாக மாற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

இதில் உள்ள Methyhydroxy Chalcone Polyme‚o (MHCP) என்னும் பொருள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை 20 மடங்கு அதிகரிக்கிறது! பரிசோதிக்கப்பட்ட 50 மூலிகைகளில், எந்த மூலிகையும் இலவங்கப்பட்டை போல் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவில்லை. எனவே இலவங்கப்பட்டை குளுக்கோஸை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி 20 மடங்கு சக்தியை உண்டாக்கும் திறன் உடையது. இலவங்கப்பட்டையை உபயோகித்தவர்களுக்கு சர்க்கரை ட்ரைகிளைசிரைட்ஸ், கொலஸ்ட்ரால் மற்றும் எல் . டி . எல். கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்திருந்தன.

விஞ்ஞான ரீதியாக எழுதப்பட்ட குறிப்பு ஒன்று, இலவங்கப்பட்டையின் அருமை பெருமைகளை பறை சாற்றுகின்றது. இலவங்கப்பட்டை இன்சுலினை போன்றது – இன்சுலினில் செயல்பாடுகளை தானும் செய்ய வல்லது. இன்சுலினை போலவே வேலை செய்வதில் இலவங்கப்பட்டையை மிஞ்சின பொருள் இல்லை.

பயன்படுத்தும் முறை

ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை தண்ணீரில் கலந்து காலை, மாலை இரு வேளை உட்கொண்டு வர நீரிழிவு வியாதி மறையும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love