கிறிஸ்துமஸ் கேக்குகள்

Spread the love

கேக்குகள் வயது வித்தியாசம், தேச வித்தியாசம் இன்றி அனைவராலும் விரும்பப்படும் உணவு. அதுவும் கிறிஸ்துமஸ்ஸின் போது பல தேசங்களில் பல விதமான கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இலேசான, குறைந்த பழங்கள் (உலர்ந்த பழங்கள்) கொண்ட கேக்குகளிலிருந்து, ஆப்பிள், பல உலர்ந்த திராட்சைகள், கிரீம், முட்டை முதலியன சேர்த்து செய்யப்படும் “பணக்கார” கேக்குகள் வரை பல ரக கேக்குகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென தயார் செய்யப்படுகின்றன.

கேக் செய்ய பொதுவான குறிப்புகள்

கேக் செய்ய தேவையான அடிப்படை பொருட்கள் – மாவு (மைதா), கொழுப்புகள், பேக்கிங் சோடா (உப்ப வைக்கும் பொருட்கள்), முட்டை, பழங்கள்.

அவனில் கேக் வைக்கும் தட்டு, நீங்கள் தயாரிக்கும் கேக்கின் அளவுக்கு சரியாக இருக்க வேண்டும்.

வெண்ணெய், செயற்கை வெண்ணெயுடன் மார்கரீன் – இவை இரண்டும் கேக்கில் வெகுவாக பயன்படுத்தப்படும் கொழுப்புகள்.

சாதாரண மாவு (மைதா) அல்லது “தானே உப்பும்“ மாவு பயன்படுத்தப்படுகிறது. செழிப்பான உயர்தர கேக்குகளில் இந்த இரண்டு மாவுகளும் கலந்த கலவை பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் தயாரிக்கப் போகும் கேக்குகளுக்குத் தேவையான பொருட்களை முன்பே சரியான அளவுகளில் எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.

கேக்குகள் “உப்புவதின்” காரணம், கேக் செய்ய பயன்படுத்தும் கோதுமை மைதாமாவில் ‘ரப்பர்’ போன்ற ‘க்ளூடென்’ என்ற பொருள் உள்ளது. பேக்கிங் பவுடரால் ஏற்படும் கார்பன் – டை – ஆக்ஸைடை, க்ளூடென் ஈரமாகும் போது, சிறு காற்று குமிழ்களாக “மிதக்க” வைக்கிறது – சூடானால் எல்லா காற்றுகளும் மேல் நோக்கி எழும். அதனால் இந்த சிறு குமிழ்கள் பெரிதாகி, கேக் உப்புகிறது. கேக்கை உப்ப வைக்க சோடா பை கார்பனேட்டும், கிரீம் ஆஃப் டார்டர்டும் பயன்படுத்தப்படுகின்றன.

கேக் செய்ய எந்த மாவை பயன்படுத்தினாலும் சரி, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். உப்பு கேக்கை திடமாக்கும்.

முட்டைகள் கேக்கை ‘லேசாக’ ஆக்குகின்றன. சூடாகும் போது முட்டை விரிவடைந்து காற்றை பிடித்துக் கொள்கின்றன. கார்பன் – டை – ஆக்ஸைடைடுக்கு பதில் காற்றே கேக்கை உப்ப வைக்கும். அதிகமாக முட்டை நிறைந்த கேக்குகளும் உப்ப வைக்கும் பொருட்களும் தேவைப்படாது.

கேக்குகளில் உபயோகிக்கப்படும் பழத் தோல்கள், ஆரஞ்சு, எலுமிச்சை பழம் முதலியவற்றின் தோல்களாகும்.

கேக், பிஸ்கட்டுகள் செய்ய வெண்ணெய் தான் சிறந்த கொழுப்புப் பொருள். வெண்ணெய் கொலஸ்ட்ரால் செறிந்தது தான். ஆனால் வெண்ணெய்யை விட்டால் சுவை சேர்ப்பதற்கு வேறு கொழுப்புப் பொருள் இல்லை.

கிறிஸ்துமஸ் கேக் – 1

தேவை

                தானே உப்பும்

                மைதா மாவு –              325 கி

                உப்பு –                                     1/2 டீஸ்பூன்

                கலந்த மசாலாப்

                பொருட்கள்  –              1 டெஸர்ட் ஸ்பூன்

                பொடித்த ஜாதிக்காய் –           1 டீஸ்பூன்

                பொடித்த லவங்கப்பட்டை – 1 டீஸ்பூன்

                பொடித்த லவங்கம் –   1/2 டீஸ்பூன்

                பொடித்த பாதாம் பருப்பு –      110 கி (கால் பவுண்டு)

குறிப்பு

கலந்த மசாலாப்பொருட்கள் என்றால் ரெடிமேடாக தயாரிக்கப்பட்ட வாசனை திரவிய கலவை. இலவங்கப்பட்டை, தனியா, ஜாதிக்காய், லவங்கம் மற்றும் இஞ்சி சேர்ந்தவை.

                உலர்ந்த சிறு திராட்சை –        450 கி

                உலர்ந்த திராட்சை –    450 கி

                சுல்தானா உலர் திராட்சை     450 கி

                                சர்க்கரை செர்ரி பழங்கள் –     225 கி

தோலுரித்த பாதாம் பருப்பு –   110 கி

கலந்த சிட்ரஸ் பழத்தோல்கள் –          225 கி

ஒரு எலுமிச்சைபழத்தின்

தோல் மற்றும் சாறு                 உப்பில்லா                                                                   வெண்ணெய் 450 கி

மிருதுவான பழுப்பு சர்க்கரை –           275 கி               (இல்லாவிட்டால் வெள்ளை சர்க்கரை)

முட்டை –                                 8 – 9

பிராந்தி –                                 8 டே. ஸ்பூன்

இவை தவிர, பாதாம் களிம்பு, ஐசிங் க்ரீம் – தேவைக்கேற்ப

செய்முறை

அவனில் வைக்க 25 செ.மீ (10 அங்குலம்) அகலமுள்ள வட்ட அல்லது சதுர தகர டின்னின் அடியிலும், பக்கவாட்டிலும் வெண்ணெய்யை தடவவும். எண்ணெய் ஊற்றாத கீரிஸ் பேப்பரால் லைனிங் செய்யவும். இந்த பேப்பரில், ப்ரெஷால், உருக்கிய வெண்ணெய்யை பூசவும். தவிர பழுப்பு காகிதத்தால் டின்னின் வெளிபாகத்தை மூடி, இந்த பேப்பர், தட்டின் பக்கவாட்டில் சுவர்களின் மேல் நீட்டி கொண்டிருக்கும் படி சுற்றவும். இதனால் பேக் செய்யும் போது கேக் கருகி போகும் அபாயம் தவிர்க்கப்படும்.

எல்லா உலர்ந்த பொருட்களை எல்லாம் (மாவும், மசாலாக்கள், வாசனை திரவியங்கள், பொடித்த பாதாம்) ஒரு பெரிய கிண்ணத்தில் சலித்துக் கொள்ளவும்.

கூடவே சிறியதாக நறுக்கிய உலர்ந்த பழங்களையும், நறுக்கிய பாதாம் பருப்புகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வேறு பாத்திரத்தில், சர்க்கரை,  வெண்ணெய், துருவிய எலுமிச்சைப் பழத்தோல்  இவற்றைக் கலந்து நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு ஒவ்வொரு முட்டையாக எடுத்து உடைத்து கலவையில் கலக்கவும். இப்போது மாவு, பழக்கலவை, லெமன் சாறு மற்றும் நான்கு டேபிள் ஸ்பூன் பிராந்தியையும், ஒவ்வொன்றாக சேர்த்துக் கலக்கவும். கலவை மிருதுவாக, ஈரமாக இருக்க வேண்டும்.

முன்பே சூடு செய்யப்பட்ட அவனின் மத்தியின் கேக் தட்டை வைத்து, முதலில் ஒன்றரை மணி நேரம் 300 டிகிரி எஃப் வெப்பத்தில் பேக் செய்யவும். பிறகு சூட்டை 250 டிகிரி எஃப்க்கு குறைத்து மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் பேக்  செய்யவும். பக்கவாட்டிலிருந்து கேக் பிரிந்து வந்தால் அது வெந்துவிட்டது என்று அர்த்தம்.

கடைசி சில மணி நேரங்களுக்கு கேக்கை பரப்பி பேப்பரால் மூடி வைக்கவும்.

கேக் ஒன்றாக வெந்தவுடன் அவன்லிருந்து எடுத்து குளிர வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் கேக்கை ஃபாயிலில் சுற்றி, கிறிஸ்துமஸ்க்கு 6 வாரம் முன்பிலிருந்து பாதுகாத்து வைக்கவும்.

பின்பு கேக்கின் அடியில் துளைகளை போட்டு ஒரு சிறு புனல் மூலம், மீதியுள்ள 4 டேபிள் ஸ்பூன் பிராந்தியை ஊற்றி மறுபடியும் ஃபாயில்லில் சுற்றி சீல் செய்து வைக்கவும்.

கிறிஸ்துமஸ்ஸ§க்கு 10 நாட்கள் முன்பு கேக்கை எடுத்து பாதாம் களிம்பால் (1.1 கிலோ 21/2 பவுண்டு) எடுத்து கேக்கின் மேல் பாகம் மற்றும் பக்கவாட்டில் தடவி வைக்கவும்.

இதைச் செய்த மூன்று நாட்கள் கழித்து ஐசிங் செய்யலாம்.

ஐசிங் செய்யும் முறை

தேவை

                                                                                   நான்கு முட்டையின்

                வெள்ளை பாகங்கள் –             900 கி

                ஐசிங் சர்க்கரை –                     1 டே.ஸ்பூன்

                எலுமிச்சைபழச்சாறு –            900 கி

                கிளிசரின் –                  2 டே. ஸ்பூன்

செய்முறை

ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக ஐசிங் சர்க்கரையை சேர்த்து மரக்கரண்டியால் நன்றாகக் கலக்கவும். பாதி சர்க்கரையை சேர்த்தவுடன் எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மறுபடியும் தொடர்ந்து சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக கிளிசரின் சேர்க்கவும். ஒரு நாள் முழுவதும் ஐசிங் கலவையை பாலித்தீனால் மூடி வைக்கவும். இந்தக் கலவை, 10 அங்குல அகலமும், இரண்டு அங்குலம் ஆழமும் உள்ள கேக்குக்கு தடவ சரியாக இருக்கும். ஐசிங்கை கேக்கின் மேல் தடவி அலங்கரிக்கவும்.

கிறிஸ்துமஸ் கேக் – 2

பாதாம் கேக்

தேவை

                மார்கரின் –                  100 கி

                பழுப்பு சர்க்கரை –       50 கி

                முட்டை –                     2

                தானே உப்பும்

                மைதா மாவு –              175 கி

                ஙிணீளீவீஸீரீ சோடா –                      1 டீஸ்பூன்

                பால் –                          4 டே.ஸ்பூன்

                சுத்தமான தேன் –                    2 டே.ஸ்பூன்

                உடைத்த பாதாம் பருப்பு – 50 கி

                சிரஃப்

                தேன் –                                     150 மி.லி.

                எலுமிச்சைபழச்சாறு –            2 டே.ஸ்பூன்

செய்முறை

18 செ.மீ. அல்லது 7 அங்குலமுள்ள மட்டமான கேக் தட்டில் பேக்கிங் பேப்பரை லைனிங் செய்து வைக்கவும்.

ஒரு பெரிய கிண்ணத்தில் மார்கரின், சர்க்கரை, முட்டை, மாவு, பேக்கிங் பவுடர், பால், மற்றும் தேன் – இவற்றை போட்டு நன்றாக நுரை வரும் படி மரக்கரண்டியால் கலக்கவும்.

இந்தக் கலவையை ஒவ்வொரு கரண்டியாக கேக் தட்டிலிட்டு பரவலாக நிரப்பவும். பாதாம் துண்டுகளை தூவவும்.

இந்தக் கலவை உள்ள கேக் தட்டை முன்பே சூடுபடுத்தப்பட்ட அவனில் வைத்து 350 டிகிரி எஃப் சூட்டில் 50 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ஒரு கம்பியை கேக்கில் நுழைத்தால் அது சுலபமாக, சுத்தமாக வெளியே வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம்.

கேக் வேகும் சமயத்தில் சிரப்பை தயார் செய்யவும். ஒரு வாணலியில் தேனையும், எலுமிச்சை பழச்சாறையும் கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

கேக்கை அவனிலிருந்து எடுத்தவுடன் சிரப்பை கேக்கின் மீது ஊற்றவும்.

இரண்டு மணிநேரமாவது கேக்கை பயன்படுத்தும் முன் குளிர வைக்கவும்.


Spread the love