சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் விரும்புகின்ற சுவையான சாக்லேட்டுகள் பற்றிச் சில சந்தேகங்கள் எழுகின்றன. ஆண்டொன்றிற்கு ரூ. 300 கோடி விற்பனையைக் கொண்டிருக்கும் சாக்லேட்டுகள் பற்றிச் சூடான சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
“இந்தியாவில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளில் அனுமதிக்கப்படக்கூடிய அளவை விட 400 மடங்கு அதிகமாக நிக்கல் காணப்படுகிறது” என்று லக்னோவில் அரசு அங்கீகாரம் பெற்ற சுற்றுச் சூழல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த டி.எம்.சக்ஸேனா என்பவர் தெரிவித்துள்ளார். 40 கிராம் சாக்லேட் சாப்பிடும் ஒருவர் அதன் மூலம் 600 முதல் 1380 மைக்ரோ கிராம்கள் வரை நிக்கல் உட்கொள்கிறார். ஆனால் 4 மைக்ரோ கிராம்களுக்கு மேல் உட்கொண்டால் ஆபத்து என்கிறார் சக்ஸேனா.
“கோக்கோவில் இயல்பாகவே நிக்கல் காணப்படுகிறது. ஆனால் சாக்லேட்டில் நிக்கல் இருப்பதற்கு அது காரணமல்ல. தயாரிப்பாளர்கள் விலை உயர்ந்த கோக்கோ வெண்ணெய்க்கு பதிலாக ஹைட்ரோஜனேட்டு வெஜிடபிள் ஆயிலை பயன்படுத்தக் கூடும்” என்கிறார் சக்ஸேனா. இது இந்திய உணவுச் சட்டத்தை மீறிய செயல்.
வனஸ்பதி எண்ணெய்யைத் திட்டப்படுத்துவதற்காக நிக்கல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்ன அளவு தான் நிக்கலைப் பயன்படுத்தலாம் என்ற அளவுகோல் எதுவும் இதுவரை இல்லை. இப்போது தான் இது பற்றி ஆராயப்படுகிறது.
இது போன்ற அறிவிப்புகளை அடுத்து பெற்றோர்கள் மட்டுமன்றி சாக்லேட் தயாரிப்பாளர்களும் பீதியடைந்திருப்பது நியாயம் தான்.
ஆனால் சமீப காலத்தில் அமெரிக்காவில் நடந்து வரும் சர்ச்சை இதுவல்ல. அது குழந்தைகள் அதிகம் சாக்லேட் சாப்பிடுவதால் அவர்கள் ஹைபர் ஆக்டிவாக ஆகிவிடுகிறார்கள் என்பது. அதாவது சாக்லேட்டில் அதிக அளவு கொகொ சேர்க்க்கப்படுவதால் அதன் மூலம் குழந்தைகளுக்கு அதிக கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) கிடைக்கின்றது.
இதனால் குழந்தைகளின் எடை அதிகரித்து குழந்தைகள் குண்டாகி விடுகிறார்கள். மேலும் அவர்களது மூளை அதிகமாக செயல்பட ஆரம்பிக்கின்றது. எனவே அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மூளைக்கு அதிக வேலை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதனால் ஹைபர் ஆக்டிவாக ஆகி சாமான்களை உடைப்பது, எப்பொழுதும் ஏதாவது செய்வது கைகள் துருதுருவென செயல்பட்டுக் கொண்டேயிருக்க ஆரம்பிக்கின்றன.
உணவு நலம் டிசம்பர் 2010
சாக்லேட்டுகள், கெடுதலா, இந்தியா, டி,எம், சக்ஸேனா, சாக்லேட், மைக்ரோ கிராம், ஹைட்ரேஜனேட்டு, இந்திய, உணவுச், சட்டம், வனஸ்பதி, குழந்தைகள், ஹைபர், ஆக்டிவாக, கொலஸ்ட்ரால், எடை, மூளை, வேலை, கட்டாயம், கைகள், சாக்லட்.