உங்கள் வீட்டிலேயே சைனீஸ் உணவு

Spread the love

சைனீஸ் உணவுகள் என்பவை ஆரம்பகாலத்தில் சீனா நாட்டில் தோன்றிய ஒரு வகை உணவு தயாரிப்பு முறையைக் குறிக்கும். சீனாவில் தோன்றிய இவ்வகை உணவுகள் உலகம் முழுவதும் பரவி தற்பொழுது உலகில் அதிகமாக தயாரிக்கப்பட்டு உண்ணப்படும் உணவுகளும் சைனீஸ் உணவுகளே ஆகும். இவ்வகை உணவுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் கூட தற்பொழுது அதிகம் புகழ் பெற்ற உணவுகளாகத் திகழ்கின்றன.                                                           சைனீஸ் உணவுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவாக விளங்குவதால் பல உணவு வகைகள் சீன உணவு தயாரிப்பு நுணுக்கங்களை தன்னகத்தே கொண்ட உணவுகளாகவும் விளங்கின. பல நாட்டு மக்களும் சீன உணவு முறைகளைத் தங்கள் உணவு தயாரிப்பு முறைகளில் கலந்து தயாரிக்க ஆரம்பித்ததன் விளைவே; அமெரிக்க சீன உணவு வகைகளும் இந்திய சீன உணவு வகைகளும் இவை இரண்டு நாட்டு உணவு ருசியின் கலவையே ஆகும். இத்தகைய உணவுகள் எங்கு தயாரிக்கப்படுகின்றதோ அங்கு உள்ள தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும்.                                                            சீன உணவுகளில் உணவுப் பதார்த்தங்கள் எளிதாக எடுத்து வாயில் போட்டு சுவைக்கக் கூடிய வகையில் சிறு சிறு துண்டுகளாக இருக்கும். அனேகமாக சீன உணவுகள் எதிரும் புதிருமான சுவைகளை உள்ளடக்கியவை காரம் – இனிப்பு, புளிப்பு, இனிப்பு, சூடு -குளிர்ச்சி என எதிர் மறை ருசிகளை பல சீன உணவுகளில் காண முடியும்.                                                                                               சீனாவில் உணவு “சாப் ஸ்டிக்” என சொல்லப்படும் இரு நீள குச்சிகளின் உதவியுடன் தான் உட்கொள்ளப்படுகின்றது. இந்த இரு குச்சிகளை வைத்துக் கொண்டு ஒரு பருக்கை சோறைக் கூட விடாமல் எடுத்துச் சாப்பிடக் கூடியவர்கள் சீனர்கள்.                                                                சீன உணவு உலகம் முழுவதும் பரவி புகழ் பெற்றுத் திகழ்ந்தாலும் இன்றும் சீனாவில் 13% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே போதுமான உணவு கிடைக்காமல் அல்லல்பட்டு சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள், வீட்டிலேயே, சைனீஸ், உணவு, சைனீஸ் உணவுகள், சீனா, உணவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, உணவுப் பதார்த்தங்கள், காரம், இனிப்பு, புளிப்பு, சூடு, குளிர்ச்சி, சாப் ஸ்டிக், உணவு, உலகம், சத்து, பற்றாக் குறையால், பாதிக்கப்பட்டுள்ளனர்.                                 


Spread the love