குழந்தைகளின் சரியான எடை

Spread the love

எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்

குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய உணவு வகைகளில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.அவர்கள் வயதுக்கேற்ற உயரத்துடனும், எடையுடனும் இருப்பது முக்கியம்.

குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென குண்டாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால், குண்டான குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என்று நினைத்தால், அது தவறானது.

இன்றைய குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் டி.வி, வீடியோ கேம்ஸ், மொபைல் என்று வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள்.ஆகையால் அவர்களிடம் அவர்கள் எடுத்துக்கொண்ட / சாப்பிட்ட உணவுக்கான உடலுழைப்பு (ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ்) இருந்தால் உடல்பருமன் ஏற்படாமல் (ஒபிஸிட்டி) தடுக்க முடியும்.அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் அல்லது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கான விளையாட்டு விளையாட வற்புறுத்த வேண்டும்.இதனால் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் இயக்கம் கிடைத்து, குழந்தை சுறுசுறுப்பாவதுடன் எடையும் அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது.

மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பீட்ஸா, பர்கர், லேஸ், ஃப்ரைடு அயிட்டம்ஸ், க்ரீம் கேக், ஐஸ்க்ரீம் போன்ற உணவுகளை வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.இந்த உணவு வகைகளில் வைட்டமின்கள், புரோடீன்கள், நார்ச்சத்து போன்ற எந்த ஊட்டச்சத்தும் உடலுக்குக் கிடைக்காது.வெறும் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்களை மட்டுமே கொண்ட இந்த உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் பருமன் தவிர்க்க முடியாததாகி பெரும் பின்விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.

சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளைக் கொடுத்து, குழந்தைகளை சாப்பிடச்செய்யும் பழக்கம் மிகவும் முக்கியமானதாகும். காலையில் பள்ளிக்கூடம் கிளம்பும் அவசரத்தில் குழந்தைகள் சாப்பிடாமல் செல்வது மிகவும் பெருந்தவறாகும். காலை வேளைகளில் உடலுக்கு அதிகமான சத்துக்கள்  தேவைப்படும். எனவே, காலை 8 மணிக்குள்  அவர்களை சாப்பிடவைத்துவிட வேண்டும். இல்லை என்றால் செல்களும், உடலும் பலவீனமாகிவிடும் (Energy metabolism).

பெப்சி, கோலா, பாட்டில் ஜூஸ், பாக்கெட்  ஜூஸ் என கண்டதையும் சாப்பிடப் பழக்காமல், குழந்தைகளிடம் பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை வளர்ப்பது நல்லது. உணவு வேளைகள் தவிர்த்து, காலை, மாலை மற்றும் உறங்கச் செல்லும் முன் பழங்களைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய மிகவும் முக்கியமான விஷயம்…

குழந்தைக்கு பசி எடுப்பதற்கு முன், சாப்பாட்டை வைத்துத் திணிக்கக் கூடாது.அதேபோல பசி எடுக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனி கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

கி. ராஜகோபாலன்


Spread the love