தாய்ப்பால் கொடுப்பது தான் சாலச்சிறந்தது முதல் 6 மாதங்களுக்காவது கட்டாயமாக கொடுக்க வேண்டும். அதுவும் தாய்ப்பாலை குழந்தை பிறந்தவுடன் கொடுக்க வேண்டும். ‘சீம்பால்’ என்று ஒதுக்கி 2, 3 நாள் கழித்து கொடுப்பது தவறு.
பால் புட்டிகளை உபயோகிப்பது கடினம். சுத்தம் செய்வது கடினம். தொற்றுவியாதிகள் வரும் வாய்ப்பு அதிகம்.
முதல் ஒரு வயதிலிருந்து மூன்று வயது வரை குழந்தைகளுக்கு 2, 3 டம்ளர் பால், பருப்பு, தானியங்கள் தினம் இரண்டு வேளை, முட்டை வாரத்திற்கு நான்கு இவைகளை கொடுக்க வேண்டும். வேக வைத்த காய்கறிகள், கீரைகள், சீஸனுக்கு ஏற்ப பழங்கள் இவை நாளொன்றுக்கு 2 வேளை தர வேண்டும்.
குழந்தைகள் நான்கு அல்லது ஆறு மாதம் வந்தவுடன் பாதி கன உணவைக் (Semi Solid) கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணெய் கலந்து கொடுக்கவும்.
குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு வருட வயது வந்தவுடன் தாயார் சாப்பிடும் உணவின் பாதி அளவு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.