அம்மை நோய் மருந்துவம்

Spread the love

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதோ, என்று என்னும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. பொதுவாக, வெயில் காலம் தொடங்கிய உடனே பல நோய்கள் நம்மை நோக்கி படையெடுக்க தொடங்கிவிடும். அதிலும், அம்மை (chicken pox) நோய் தான் விரைவில் வரக்கூடிய நோயாகும். ஏனென்றால் அது விரைவில் பரவக் கூடிய தொற்றுநோய் ஆகும். அதனால், அம்மை நோயினால்  பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதால் (தொட்டு பேசுவது) இந்நோய் எளிதில் பரவுகிறது.

அம்மை நோய் ஏற்பட காரணம் என்ன ?

வெயில் காலங்களில் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக தான் அம்மை நோய் ஏற்படுகிறது, என்று நம்மில் பலரும் நினைக்கின்றோம். ஆனால் அது உண்மை அல்ல, கோடைக் காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் பூமி சூடாகும் போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகளில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்றில் கலந்து நோயை ஏற்படுத்துகிறது.

இதுவே உண்மையான காரணம். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் நாம் வாழும் வேட்டையும், வீட்டை சுற்றி உள்ள இடங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அம்மையின் வகைகள்

அம்மை நோய் பலவகைப் படுகின்றன. அவற்றை நாம் கீழே காண்போம்.

· சின்னம்மை

· பெரியம்மை, இந்த இரண்டு அம்மைகளும் அனைவருக்கும் தெரிய கூடிய அம்மைகள் ஆகும்.

· விளையாட்டம்மை

· தட்டம்மை

· பாலம்மை

· தவளையம்மை

· கல்லம்மை

· மிளகம்மை

· கடுகம்மை

· பாசிப்பயறறம்மை

· வெந்தயம்மை

· கொள்ளயம்மை

· ஒரு குரு அம்மை

· கொப்புள்ளி அம்மன்.

அம்மை நோயின் அறிகுறிகள்

முதலில் சிறிய காய்ச்சல் தான் வரும், பின் ஓரிரு நாட்களில் கடுமையான காய்ச்சலாக மாறும். அது மட்டுமல்லாமல் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு, பின்பு சிறிய சிறிய கொப்பளங்கள் தோன்றும்.

அம்மை நோய் நீங்க

அம்மை நோய் விரைவில் குணமாக, வேப்பிலையை படுக்கையாக தயார் செய்து அதன் மேல் படுத்தால் அம்மையின் தாக்கம் குறையும். அம்மை நோய் உள்ளவர்கள் மெல்லிய ஆடைகளை அணிவது நல்லது.

அம்மை நோய் உள்ளவர்களின் உடலில் ஏற்படும் கொப்பளங்கள் எளிதில் மறைய வேப்பிலை உதவுகிறது. அம்மை நோய் உள்ள காலங்களில் உடலில் உள்ள கொப்பளங்களின் காரணமாக அரிப்பு ஏற்படும். அப்போது கைகளை கொண்டு சொறியக் கூடாது. அதற்கு பதிலாக வேப்பிலையை கொண்டு தடவி விட வேண்டும். இதன் முலம் அந்த கொப்பளங்களில் இருந்து வடியும் நீர் வேறெங்கும் பரவாமல் இருக்கும்.

மலை வாழைப்பழத்தை சாப்பிட கொடுக்க வேண்டும், இதன் மூலம் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும். இது மட்டுமல்லாமல், சிறிது வேப்பிலை இலைகளை எடுத்து அதனுடன் மஞ்சள் மற்றும் ஒரு டம்ளர் நீரை சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். இதன் மூலம் அம்மை நோய் விரைவில் குணமாகும்.

அம்மை நோய் இறங்கும் நேரத்தில் குளிக்கும் போது, வேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்த்து அரைக்க வேண்டும். அதை உடல் முழுவதும் பூசிக் கொள்ள வேண்டும். பின்பு, குளிர்ந்த நீரில் சிறிது வேப்பிலை மற்றும் மஞ்சளை கலந்து ஊற வைத்து குளிப்பதன் மூலம் அம்மை நோய் விரைவில் குறைந்து விடும்.

அம்மை நோய் பரவுவதற்கான முக்கியமான காரணம், தொற்றின் மூலமாக தான் என்பதை நாம் முன்பே பார்த்தோம். இந்நோய் உள்ளவர்கள் பயன்ப்படுத்திய ஆடை, போர்வை மற்றும் துண்டு போன்றவற்றை முடிந்தவரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால், அதன் மூலமும் அம்மை நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. அல்லது அவர்கள் பயன்படுத்தியவற்றை நன்கு துவைத்து, அந்த துணிகளை சிறிது மஞ்சள் பொடி நீரில் இட்டு துவைக்கலாம். அந்த துணிகளை நன்கு வெயில் வரும் இடத்தில் காய வைக்க வேண்டும். உடலை மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைப்பதின் மூலம் அம்மை வராமல் தடுக்கலாம்.

நாம் வாழும் வீட்டின் சுற்றுப்பகுதியை தினமும் பெருக்கி, சாணத்தை வாரத்திற்கு இரு முறைத் தெளித்து விட வேண்டும். வாசலின் இரு பக்கங்களின் அடி பகுதியில் மஞ்சளை பூசி விட வேண்டும். இதன் மூலம் நம் வீட்டிற்குள் கிருமிகள் வராமல் தடுத்து விடலாம்.

இவை அனைத்துமே நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றவை தான். அதுமட்டும் அல்லாமல் தினமும் வெயில் காலங்களில் இருவேளை குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதன் மூலமும் அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

அம்மைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் https://shop.annamsrecipes.com/product/amla-powder/

· அம்மை நோய் உள்ளவர்கள் அதிக நீர் ஆகாரங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், கஞ்சி, பழச்சாறுகள் மற்றும் பால் போன்றவற்றை குடிக்கலாம்.

· காய்ச்சலுக்கு பிறகு மசித்த உணவையே கொடுக்க வேண்டும்.

· மாதுளை, கருப்பு திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழச் சாறுகளை அருந்தலாம்.

· ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கொடுக்கலாம். அரிசி, வெள்ளை உப்புமா போன்ற மாவு சத்துள்ள பொருட்களை கொடுப்பது மிகவும் நல்லது.

· ஒரு நாளைக்கு குறைந்த அளவு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அம்மைக்கு கொடுக்க கூடாத உணவுகள்

· சமைக்கும் போது எண்ணெய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவு உப்பை தான் சேர்க்க வேண்டும்.

· தேங்காய் மற்றும் மசாலா உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.

· அசைவ உணவு வகைகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· அதிகம் புளிப்பு மற்றும் காரம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மாம்பழம், அன்னாச்சிபழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

· சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது.

நம்மையும், நம்மை சுற்றி உள்ள பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே, எந்த நோயும் நம்மை அண்டாது. அதுமட்டும் அல்லாமல், செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான பொருட்களை பன்படுத்தினாலே நம்மை எந்த தொற்று நோயும் அண்டாது.


Spread the love