அசைவ பிரியர்களின் நல்ல ஒரு நண்பன் தான் இந்த சிக்கன் காரணம் இதில் ஒளிந்திருக்கும் அதிகமான சுவைகளும், வகைகளும் தான். இதை செய்து சாப்பிடுவது மிகவும் சுலபம். சிக்கனில் கொழுப்பு குறைவினால் சர்க்கரை நோயாளிகூட இதை சாப்பிடலாம். இதில் இருக்கும் புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி கொழுப்பு குறைவாக உள்ளதால் உடல் மெலிந்து இருப்பவர்கள் உடல் எடையை கூட்டவும், குண்டாக இருப்பவர்கள் சரியான அளவில் வைக்கவும் உதவுகிறது. குறிப்பாக கோழியின் மார்பு பகுதியை சாப்பிட்டு வர மனித இருதயத்தை தாக்ககூடிய ஹோமோசைஸ்டீன் அமினோ அமிலம் கட்டுபடுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் இதய நோய் ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.
சிக்கனில் உயர் வகை கனிமங்கள் நிறைந்திருக்கின்றது. குறிப்பாக இதில் இருக்கும் பாஸ்பரஸ் பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் உதவியாக இருகின்றது. அதுமட்டுமின்றி நம்முடைய கல்லீரல், சிறுநீரகம், மற்றும் நரம்பு மண்டலங்கள் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. சிக்கனில் இருக்கும் செலீனியம், வளர்சிதை மாற்றத்தின், செயல் திறனை சீராக்கும், இதனால் சம்மந்தப்பட்டிருக்க, தைராய்டு, உயிரணுக்கள், இதில் பிரட்சனைகள் ஏற்படாமல் பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு செயல்பாட்டையும் காக்கின்றது.
சிக்கனில் இருக்கும் B6 இரத்த நாளங்களை தளர விடாமல், உடலில் இருக்கும் கலோரிகளை எரித்துவிடும். இதனால் உடல் எடையை சீராக வைக்க முடிகிறது. மற்றொரு மினரல்ஸ் ஆக இருக்கும் நியாசின், கேன்சர் செல்களை அழிக்க கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, செல்களுக்கு ஏற்படும் ஆபத்தையும் தடுக்கின்றது. எல்லாவற்றையும் தாண்டி சிக்கன் ஒரு இயற்கையான Anti-depressant ஆக இருக்கின்றது. இதற்கு நீங்கள் மனசோர்வாக இருக்கும் போது சிக்கன் சாப்பிடுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் இதனால் நமது மூளையில் செரோடோனின் அமினோ ஆசிட் அளவு அதிகமாகும்.
இது நம்முடைய மனஅழுத்தத்தை குறைத்து நிம்மதியை கொடுக்கின்றது. சிக்கனில் இருக்கும் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. பொதுவாக வயதாகும் போது எலும்புகளின் பலத்தை இழக்க நேரிடும் இதனால் அதிகமானோருக்கு ஒஸ்டியோபோரோசிஸ் பிரட்சனை ஏற்படும். இந்த பிரட்சனை சிக்கன் சாப்பிட்டால் வராது என சொல்லப்படுகிறது. இவையெல்லாவற்றிற்கும் காரணம் சிக்கனில் இருக்கும் புரோடீன்.