கோடையில் சிக்கன் ஆபத்தா?

Spread the love

சிக்கன் சாப்பிடுவது நல்லதா? இல்லையா? என்ற விவாதம் நமது ஊரில் இன்றும் இருந்து கொண்டு தான் உள்ளது. மற்ற வகையான அசைவ  உணவுகளை விட அனைவருக்கும் அதிகமாக பிடித்தது சிக்கன் தான். ஆனால் சிக்கனில் அதிக கொழுப்புகள் உள்ளது. இதை பொறித்து சாப்பிடாமல், குழம்பு வைத்து சாப்பிடுவது நல்லது. சிக்கன்  ஆரோக்கியமா? இல்லையா! சிக்கனில் அப்படி என்ன தான் உள்ளது. என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

சிக்கன் பற்றி

சிக்கனில் அதிகளவு நியூட்ரியேஷன், புரதம், வைட்டமின் B, A, D, இரும்புச்சத்து,  பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளது. ஆனால் சிக்கனை பொறித்து சாப்பிடுவது நம் உடலிற்கு நல்லது இல்லை. இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகளினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிக்கனை தவிர்ப்பது நல்லது.

சிக்கனில் டிரிப்தோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. அது நமது மன அழுத்தத்தை குறைக்கிறது. சிக்கன் சாப்பிடுவதால் நரம்பியல் பிரச்சனை வராமல் தடுக்கிறது என்று கூறுகின்றனர்.

சிக்கனில் உள்ள வைட்டமின் B 3 நமது உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி பாதிக்கிறது. சிக்கன் உடலுக்கு அதிக சூட்டை கொடுப்பதால், போதுமான அளவு உட்கொள்வது நல்லது.

சிக்கன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான செலினியம் அதிகம் சுரக்கிறது. இதனால் மூட்டு வலிகள் மற்றும் மூட்டு சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்குகிறது. சிக்கன் பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, வயிற்று வலிகள் அனைத்தையும் நீக்குகிறது. குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சிக்கன் அவர்களுக்கு நல்ல உடல் வளர்ச்சியையும், உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது.

நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஆனால், அதையும் கோடையில் தவிர்ப்பது நல்லது. கோடை காலத்தில் அதிகமான வெயிலால் நமது உடல் தவித்துக்கொண்டிருக்கும், இந்த நேரத்தில் சூடு நிறைந்த கோழிக்கறியை சாப்பிட்டால் செரிமானமாவதில் சிக்கல்கள் ஏற்படும். இதனால் வயிற்றுவலி, கழிச்சல், மூலம் மற்றும் வேறு சில  வயிற்று உபாதைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஹார்மோன் ஊசி மற்றும் தீவனங்களைப்போட்டு குறுகியகாலத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை கோடைகாலத்தில் மட்டுமின்றி, எந்தக் காலத்திலும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.


Spread the love