செட்டிநாட்டு சூப்
தேவை
துவரம் பருப்பு 1/2 கப்
மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
பட்டை சிறிது
சோம்பு 1/4 டீஸ்பூன்
மிளகு 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை,
கொத்தமல்லி – சிறிது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2 டீஸ்பூன்
செய்முறை
துவரம் பருப்பை கழுவி மஞ்சள் பொடி போட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த பருப்பை தண்ணீர் ஊற்றி மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, சோம்பு, மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் பருப்புத் தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு வேக விடவும். நன்கு வெந்த பின் கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.
தேங்காய் சாதம்
தேவை
பொன்னி புழுங்கலரிசி 1 கப்
தேங்காய் 1 மூடி
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 3
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
முந்திரி 10
கறிவேப்பிலை சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கடலைப் பருப்பு, முந்திரி, உடைத்த சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, உப்பு என்று ஒன்றன் பின் ஒன்றாகப் சேர்த்து வதக்கி கடைசியாக சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
உருளைக்கிழங்கு ரோஸ்ட்
தேவை
சிறிய உருளைக்கிழங்கு 1/4 கிலோ
மசாலாப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்- 2, 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
உருளைக்கிழங்கை தண்ணீரில் ஊற வைத்து மண் போக கழுவிக் கொள்ளவும். இதனை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு வதக்கி, பின் மசாலாப் பொடி, உப்பு சேர்க்கவும். நன்கு கிளறி வாணலியை ஒரு மூடியால் மூடவும். நன்கு வெந்தவுடன் மூடியைத் திறந்து கிளறி இறக்கவும்.
சிவப்பரிசி பாயசம்
தேவை
சிவப்பரிசி ரவை -1 கப்
சீனி -2 கப்
பால் (அ) தேங்காய் பால் -3 கப்
நெய் -2 டீஸ்பூன்
முந்திரி 10
கிஸ்மிஸ் -10
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை
சிவப்பரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் ரவை போல் அரைத்துக் கொள்ளவும். பின் அதனை நன்கு தண்ணீர் விட்டு அல்லது கடைசி தேங்காய்ப்பாலில் வேக வைத்துக் கொள்ளவும். நன்கு வெந்த பின் சீனியை சேர்த்து வேக விடவும். சீனி கரைந்த பின் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்க்கவும். ஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து தூள் செய்து போடவும். கடைசியாக கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.