சவத்துக்குச் சேர்க்கும் வேதியை மீனுக்குச் சேர்ப்பதா?

Spread the love

சந்தையில் விற்கப்படும் பல வகையான மீன்களில், உலக சுகாதார நிறுவனத்தினால் புற்றுநோய் ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்ட இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இறால்களும் (பிரான்ஸ்) கணவாயும், நண்டும் கூட இதிலிருந்து தப்பவில்லை.

அந்த இரசாயனம் பார்மால்டிஹைடு (Formaldewhyde) எனப்படும். இது பிணங்கள் அழுகி விடாமல் இருப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனமாகும். சட்டப்படி இதை உணவுகளில் பயன்படுத்தக்கூடாது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இது மாத்தா கூச்சிங் பழங்களில் இருப்பதை கண்டுபிடித்தோம். இப்பொழுது நம்முடைய அத்தியாவசிய உணவுகளில் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறோம்.

பினாங்கிலுள்ள வெவ்வேறு மார்கெட்டிலிருந்து 30 மாதிரிகளும் இந்சோதனைக்காக மீன்கள் சேகரிக்கப்பட்டன. அந்த மாதிரிகளின் ஆய்வுக்கூடச் சோதனை அதிர்ச்சியை தருவதாக இருந்தது.

பினாங்கிலிருந்து வாங்கப்பட்ட 30 வித மாதிரிகளிலும் பார்மால்டிஹைடு என்ற இரசாயனம் 9.300 லிருந்து 33,300 பி.பி.எம் எண்ணிக்கையில் இருந்தது. நல்ல வேளையாக கோலாலம்பூரிலிருந்து வாங்கப்பட்ட மாதிரிகளில் இந்த இரசாயனம் சேர்க்கப்படவில்லை.

பார்மால்டிஹைடு என்பது இறந்து போன விலங்குகள், ஆய்வுக்கூட மாதிரிகள் மற்றும் பிணங்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனமாகும். உலக சுகாதார நிறுவனம் இதனைப் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் என்று அடையாளம் காட்டுகிறது. உணவு விதி 1985 ன் கீழ் பார்மால்டிஹைட் இரசாயனம் உணவுகளில் பயன் படுத்தக்கூடாத ஒன்றாகும்.

அனைத்துலக தொழிலாளர் சம்மேளனத்தின் (ஐ.எல்.ஓ) தொழிற்துறைச் சுகாதார பாதுகாப்பு களஞ்சியத்தில் “நாள் ஒன்றுக்கு 220 மி,கி என்ற கணக்கில் 13 வாரங்களுக்கு தொடர்ந்து பார்மால்டிஹைடு சாப்பிடும்போது ஜீரண உறுப்பில் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்றவற்றோடு அளவுக்கு அதிகமாக அதனை உட்கொள்ளும் போது வலிப்பு மற்றும் இறப்பும் கூட ஏற்படலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சாப்பிடும் பழக்கம் பற்றி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஒரு சிறிய ஆய்வின்படி ஒருவர் சராசரி நாள் ஒன்றுக்கு 100 சிராம் மீன் சாப்பிடுகின்றனர். இந்த சாப்பிடும் அளவை வைத்துக் கணக்கிடும் போது நாம் மீனிலிருந்து நாள் ஒன்றுக்கு 5_17 மடங்கு அதிகமாக பார்மால்டிஹைடு இரசாயனத்தையும் விழுங்குகின்றோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் கண்டுபிடிப்புப்படி குடிநீரில் 02_05% பார்மால்டிஹைடு இருந்தால் எலியின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டது. எங்களுடைய சேதனைப்படி பொதுமக்களால் உட்கொள்ளப்படும் மீனில் கிட்டதட்ட 167 மடங்கு ஃபார்மால்டிஹைடு இருக்கின்றது. இது அந்தப் பிராணிக்குப் பின்விளைவை ஏற்படுத்திய அளவை விட அதிகமாகும்.

இறால் மற்றும் கணவாய், நண்டு வகைகளிலும் இதே அளவு தூய்மைக்கேடு இருந்தது. பூலாவ்தீக்குஸ் மார்க்கெட்டிலிருந்து வாங்கப்பட்ட பிரான்ஸ் வகையில் 20,700 பிபிஎம் ஃபார்மால்டிஹைடு இருந்தது. கடல் உணவில் குறிப்பாக இங்கு அநேகரின் அன்றாட உணவில் ஒரு அங்கமாக இருக்கும் மீன்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனம் இருப்பது அபாயகரமான நிலையாகும்.

அபாயகரமான ஒரு இரசாயனம், அதுவும் அனுமதிக்கப்படாத ஒரு இரசாயனம் எவ்வடி இவ்வளவு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பது தான் வியப்பாக உள்ளது.

நன்றி

பயனீட்டாளர் குரல். 


Spread the love
error: Content is protected !!