சக்க பாயாசம்

Spread the love

தேவையான பொருட்கள்:-

பலாப்பழ ஜாம் (ஏற்கனவே செய்து வைத்தது) – அரை கப்

வெல்லம் – 2 மேஜைக்கரண்டி

தண்ணீர் – கால் கப்

தேங்காய்ப் பால் – 2 கப்

ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்

முந்திரி (அ) தேங்காய்த்துண்டுகள், நெய்யில் வறுத்தது – 2 மேஜைக்கரண்டி

செய்முறை:-

  1. வெல்லத்தை தண்ணீரில் விட்டு சுட வைத்து கரைக்கவும். அழுக்கை நீக்கவும்.
  • இத்துடன் பலாப்பழ ஜாமை சேர்த்து கலக்கவும்.
  • இந்த கலவை கொதித்தவுடன் தீயை குறைத்து தேங்காய்ப்பாலில் சேர்க்கவும்.
  • குறைந்த தீயில் இந்த கலவையை வேக வைக்கவும். அடிக்கடி கிளறவும். இல்லாவிட்டால் தேங்காய்ப்பால் திரிந்து விடும்.
  • தீயை அணைத்து ஏலக்காய்ப் பொடி முந்திரி அல்லது தேங்காய்த் துண்டுகளை சேர்க்கவும்.

சக்க அவியல்

தேவையான பொருட்கள்:-

பலாக்காய் பிஞ்சு – 1 கப்

மஞ்சள் பொடி – 1 சிட்டிகை

மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி

துருவிய தேங்காய் – 1/2 கப்

சீரகம் – 1/2 தேக்கரண்டி

பூண்டு – 1 பல்

புளி (களிம்பு) – 1/2 தேக்கரண்டி

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கருவேப்பிலை, உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:-

  1. பலாக்காய் சுளைகளை மெல்லிய நீண்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதை தண்ணீரில் மஞ்சள் பொடி, உப்பு போட்டு வேக வைக்கவும்.
  • தேங்காய் துருவல், மிளகாய் பொடி, சீரகம், பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலை இவற்றை குறைந்த தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • பலா சுளைகள் வெந்தவுடன் இந்த கலவையையும், புளியையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும். அடிக்கடி கிளறவும்.
  • தேங்காய் எண்ணெய் சேர்த்து மீதியுள்ள கருவேப்பிலையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். 

Spread the love
error: Content is protected !!