உணவும், வாழ்க்கை முறையும் தான் காரணங்கள். அதிகமாக வெல்லம், சர்க்கரை, புதிய அரிசி, மாவுப் பதார்த்தங்கள், தயிர், மீன், எருமைப் பால் உணவில் சேர்ந்தால் சர்க்கரை வியாதி வரும். சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருத்தல், உடற்பயிற்சி செய்யாமலிருத்தல், உழைப்பின்றியிருத்தல், பகலில் தூங்குதல், மிருதுவான படுக்கை, சோபா போன்றவற்றில் வெகுநேரம் உட்கார்ந்திருத்தல், எதைப் பற்றியும் எண்ணாமல் சாப்பிடுதல், மனதில் கவலை, பீதி, துக்கம் போன்றவை இருத்தல் சர்க்கரை வியாதியை உண்டாக்கும். பரம்பரை வியாதியாகவும் இது வரும்.
மேற்கூறிய காரணங்களால் இனிப்பை ஜீரணிக்காமல் இனிப்பாகவே உடலில் ஊடுவுருவி இவ்வினிப்பின் அம்சம் சிறுநீர் வழியாக வெளிப்படுகிறது. இதை சர்க்கரை வியாதியெனச் சொல்லுகிறோம். இதன் அறிகுறிகள் என்ன? அடிக்கடி தாகமெடுத்தல், சிறுநீர் அடிக்கடி வெளியாதல், கை, கால்களில் எரிச்சல், உடம்பில் தளர்ச்சி, சோர்வு, நாக்கில் மாவு படிதல், தோலில் வறட்சித் தன்மை தோன்றுதல், மலச்சிக்கல் போன்றவைகளாகும்.
இதை எவ்வாறு தடுப்பது? பசி வந்தபின்புதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டபின் சிறிது நேரம் கழித்து கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். சத்து நிறைந்த உணவு தேவை. நொறுக்குத் தீனி தவிர்க்கப்பட வேண்டும். உடற்பயிற்சி மிகவும் அவசியம். இது ஜீரண உறுப்பின் செயல்பாட்டினை மேம்படுத்தும்.
ஆயுர்வேதப்படி இதன் நிவாரணம் மூன்று வகைப்படும் அவை. பத்தியம், நடவடிக்கை, மருந்துகள்.
பத்தியத்தில் புழுங்கலரிசி பழையது, கோதுமை முக்கியமாகச் சாப்பிட வேண்டும்.
கேழ்வரகு, பாசிபயறு, துவரை, கேழ்வரகு, கொள்ளு, கொத்துக் கடலை ஆகியவற்றை மிதமாகச் சேர்க்கலாம்.
கசப்பூ, துவர்ப்புள்ள காய்கறிகள் அதிகமாக சேர வேண்டும்.
புளிப்பு கூடாது. நெய் அதிகம் கூடாது.
முட்டை வேண்டாம். கோழி, புறா மாமிசம் ஓ.கே.
மஞ்சள் கிழங்கு அதிகமாகச் சேர்க்கவும்.
முற்றிய பச்சை நெல்லிக்காய் சாலச் சிறந்தது. துவையல், சாறு, பச்சடியாகவும் நெல்லியைச் சாப்பிடலாம். இவைகளுடன் உடற்பயிற்சி தேவை. இந்நோயை மட்டுப்படுத்த வீல்வபத்ர ஸ்வரசம் நல்லது. 10 மி.கிராம் வில்வ இலையை கெட்டியாக அரைக்கவும். 50 மில்லி பாலில் அல்லது நீரில் குழப்பி, பிசைந்து வடிக்கட்டவும். வடிகட்டின நீரை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். அடுத்தது நிம்ப பத்ர ஸ்வரசம். வேப்பிலை வில்வ இலைக்குச் சொன்னது போல் செய்து சாப்பிட்டால் நல்லது. கடைசியாக நிசா ஆம்லகி சூர்ணம். 3&5 கிராம் வெந்நீருடன் இதைச் சேர்த்து காலை, இரவில் சாப்பிடுமுன் எடுத்துக் கொள்ளவும். உடற்பயிற்சியோடு உணவுப் பழக்கமும் நன்கு சேர்ந்தால் நிவாரணம் உண்டு.