ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்பனவாகும். தினசரி காலை, மாலை இரு வேளை மூன்று மி.லி. அளவு உள்ளுக்கு கொடுக்க நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலக்கட்டு, மூட்டுவலி போன்றவை மறையும். ஹெர்னியா, வயிற்றுப் பூச்சிகள், அஜீர்ணம், போன்றவற்றிற்கும் மூன்று மில்லி எண்ணெய்யை தினசரி காலை மாலை உள்ளுக்கு கொடுக்கலாம். சிறுநீர் கோளாறுகள், எரிச்சல், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம். தீராத மூட்டு வலி, மூட்டு பிடிப்பு, மூட்டு வாதம், எலும்பு தேய்வு, மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கும் 2 – 3 மி. லி. தினசரி எண்ணெய்யை உள்ளுக்கு கொடுக்கலாம். வீக்கம், உடல் வலி, போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்க நல்ல பலன் தெரியும்.
பச்சை எண்ணெய்:
ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகடிள அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும்.
ஊற்றின எண்ணெய்:
ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்புகளை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந்துள்ள நீரை, அனலில் வைத்து போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும்.
இதைக் கைக்குழந்தை, இளவயதுடையவர்கள் சூல் கொண்டவர்கள், பிள்ளை பெற்றவர், சீதக் குருதிப் பேதியால் வருந்துபவர் முதலானோர்க்கு அச்சமின்றி வயிறு கழியக் கொடுக்கலாம். தற்போது இம்முறை வழக்கொழிந்து வருகிறது. மலக்கட்டு உள்ளவர்கள் ஆமணக்கெண்ணையை மல வாயின் உட்புறத்தில் தடவ மலம் இளகி வெளிப்படும் வயிற்று வலியினால் அவதியுறும் குழந்தைகளுக்கு அடிவயிற்றிலும், பெரியவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் ஆமணக்கெண்ணை¬த் தடவி, ஒற்றடம் இட வயிற்று வலி குறைந்து, மலம் வெளிப்படும். உடம்பில் மேல்தோல் உராய்ந்து, எரிச்சல் ஏற்பட்டால் அவ்விடத்தில் விளக்கெண்ணையைத் தடவ எரிச்சல் நீங்கி முன்பிருந்த நிலையை அடையும். கண்கள் மருந்துகளின் வேகத்தாலும், தூசுகள் விழுவதாலும் அருகிச் சிவந்தால் ஆமணக்கெண்ணையும், தாய்ப்பாலும் சேர்த்துக் குழைத்துக் கண்ணிலிடச் சிவப்பு மாறிக் குணமாகும். முலைக்காம்பு புண், வெடிப்பு இவற்றிற்கு இதைத் தடவி வரலாம். முக்கூட்டு நெய்யில் இதுவும் ஒன்று. பலவகையான உள், வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் முறைகளில் ஆமணக்கெண்ணெய் சேர்க்கப்படுகிறது.