ஒரு வாரம் கேரட் ஜூஸ் சாப்பிட்டு வாங்க… முகம் ஜொலிப்பதை உணருவீங்க!

Spread the love

சரும பிரச்சனைக்கு பயனளிக்க கூடிய கேரட் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கேன்சர் செல்களை அழிக்கின்றது. இது நமது சருமத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்ககூடியதாக இருக்கின்றது என தெரிந்து கொள்ளலாம்..

தோல் பிரச்சனைகளான அரிப்பு, சொறி, சிரங்கு இவையெல்லாவற்றையும் குணமாக்க தொடர்ந்து கேரட் ஜூஸ் குடித்து வருவது மிகவும் நல்லது… இதில் உடலிற்கு தேவையான நன்மைகள் அதிகமாக உள்ளது. பொதுவாக தோல் அழற்சி, வியாதி குணமடைய அதிக நாள் தேவைப்படும்.. இது சீக்கிரம் குணமாக தோல் மருந்துகளை எடுத்து வருவது மட்டும் போதாது… பாக்டீரியாக்களை  அழிப்பதன் மூலம் மட்டுமே முழுமையாக குணப்படுத்த முடியும்… அந்த ஆற்றல் கேரட்டில் உள்ளது. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் சி, தோலிற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழித்து முழுமையாக குணமாக்குகிறது.

செயலிழந்து காணப்படக்கூடிய செல்களால் முகம் மிகவும் வற்றி காணப்படும்.. அதற்கு இரண்டு கேரட்டை எடுத்து வேக வைத்து  அதை நன்கு மசித்து முகத்தில் இருந்து தாடை வரைக்கும் நன்கு பூசி, 20 நிமிஷம் கழித்து, குளிர்ந்த நீர் மூலமாக அந்த பேக்கை நீக்க வேண்டும். அதற்கு பின் லேசான சூட்டில் தண்ணீரை கொண்டு ஒத்தடம் கொடுத்து வர, முகம் புத்துணர்ச்சி அடைந்து,நிறம் மாறி வருவதையும் உணரமுடியும்…
தினமும் ஒரு கேரட் ஜூஸ் குடித்து வருவதனால் எந்த விதமான சரும பிரச்சனைகளும் வராது… தண்ணீர் சேர்க்காத கேரட்டை, முகத்தில் தடவி கழுவி வர, முகத்தில் தங்கி இருக்கும் கறைகள் நீங்கும்..


கேரட்டில் இருக்கும் பீட்டாகரோடீன் தோலிற்கு மிக சிறந்த பொருளாக இருக்கின்றது… இது நமது உடலில் விட்டமின் ஏ-வாக மாறி, நமது தோலை, சூரியனில் இருந்து வரக்கூடிய அதிகப்படியான rays-ல் இருந்து, நமது தோலிற்கு எந்த பிரட்சனையும் வராமல் பாதுகாக்கும்..
கேரட்டில் இருக்கும் உயர்வகை பொட்டாசியம் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு நல்ல ஆற்றலை தரக்கூடிய பொருளாக இருக்கின்றது. இது உடலில் ஏற்படும் அதிகப்படியான நீரேற்றத்தில் இருந்து பாதுகாக்கும். 

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மற்றொரு விஷயம் என்னவென்றால்? கேரட்டை வைத்து ஒருMoisturizing Facial மாஸ்க் தயாரிக்கலாம்.. அதற்கு தேவையான பொருட்கள், துருவிய கேரட் இரண்டு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் மில்க் கிரீம், ஆலிவ் ஆயில் சில துளி.  துருவிய கேரட்டை மிக்சியில் அரைத்து, அதில் மற்ற இன்க்ரீடியன்ஸ சேர்த்து நன்கு கலக்கவும். இந்தmoisturizer ah முகத்தை சுத்தமாக கழுவிய பின், முகத்தில் பூசி உலர்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் உங்கள் முகம் மிருதுவாகி நல்ல பொலிவை தரும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love