பொதுவாக திருமணமான உடனேயே, பெரும்பாலானோர் தனிக் குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர் வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை பிரித்து வாழ்கின்றனர். வயதான காலத்தில் தனிமையில் வாடும் பெற்றோர் மிகவும் வேதனையடைகின்றனர். இந்த வேதனை அவர்களை மன உளைச்சலில் கொண்டு போய் விடுகிறது.
வயதான உங்கள் பெற்றோர் பிள்ளைகள், நண்பர்கள் உறவினர் என அனைவரையும் சார்ந்து, அவர்களுடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர். அவர்கள் தனியாக இருந்தாலும் முடிந்த வரை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது உங்கள் கடமை. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இரவு உணவை பெற்றோருடன் உண்ணுங்கள்.
வயதான காலத்தில், தனிமையாக இருப்பதாக உங்கள் பெற்றோர் உணர்வர். இது உங்கள் பெற்றோர கவலையடைச் செய்யும்.நாளடைவில் அந்த கவலை மன உளைச்சல் அபாயத்தில் கொண்டு போய் சேர்த்து விடும்.
தனிமையாக உணர்வதால், அவர்களால் சரியாக சாப்பிட முடியாது. சிறு பிரச்சனை கூட பெரிதாக தெரியும். எனவே, உங்கள் பெற்றோர்களுக்காக நிங்கள் நேரம் ஒதுக்குங்கள். பெற்றோர் வீட்டின் அருகில் வசிப்பவராக நீங்கள் இருந்தால் இரவு உணவை அவர்களுடன் உண்ணுங்கள்., இது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.