காற்றில் கலந்துள்ள நச்சு வாயுக்களை உள்வாங்கி சுற்றுச் சூழல் பாதுகாப்பு தரும் ஒரு மரம் சரக்கொன்றை ஆகும். நிலத்தில், என்றைக்கும் வாடாத, கடுமையான வறட்சி நிலையிலும் நிலைத்து நிற்கும். ஒரு மரம் உண்டென்றால் அது சரக்கொண்றை மரம் மட்டும்தான். சரக்கொன்றை மரங்கள் உள்ள இடமெல்லாம் அழகாய் காணப்படும். இந்திய மருத்துவத்தில், ஆயுர்வேத சிகிச்சையில் சரக்கொன்றையின் வேர் முதல் பூக்கள் வரை, அனைத்துமே பெரும் உபயோகமாக உள்ளது.
இந்தியன் லேபர்னம், கோல்டன் ஷவர், குரங்கு குச்சி மரம் என்று ஆங்கில மொழியில் அழைக்கப்படும் சரக்கொன்றையானது இந்தியில் அமல் தாஸ்; மலையாளம்_Moகொன்னை மராத்தி_பகாவா பெங்கால்_ சோனாலி பண்டார்ஸட்டி; உருது_அமல்தாஸ் என்று அழைக்கப்படுகிறது. சரக்கொன்றையின் தாவரக் குடும்பம்_சிசால் பினியேசி. டயஸ் கோரிடிஸ் என்ற கிரேக்க அறிவியல் அறிஞரால் சூட்டப்பட்ட பெயரே இது காசியா பிஸ்டுலா என்றால் நீண்ட குழலைப்போன்று என பொருள்படும். இப்பெயர் சரக்கொன்றையின் நெற்றைக் குறிக்கிறது ஐரோப்பாவில் காணப்படும் லெபர்னம் மரத்தை போன்று காணப்படுவதால் இந்தியன் லெபர்னம் என்று அழைக்கப்படுகிறது. பூக்கள் பூத்துச் சொரியும் அழகினால், கோல்டன் ஷவர் என்றும் ஆங்கிலத்தில் பெயரிபட்டுள்ளனர். இந்தியாவின் மிக அழகான மரமான சரக்கொன்றை, மஞ்சள் நிற (தங்க நிறமாக) வாசனை தரும் பூக்களைத் திராட்சைக் கொத்து தொங்குவது போல இரண்டு அடி நீளத்திற்கு கூம்பு வடிவில் தொங்கும். 20 ரூபாய் மதிப்புள்ள தபால் தலையாக இந்திய அரசு சரக்கொன்றையை வெளியிட்டுள்ளது.
கேராளவில் கணிக்கொன்றை கொன்றை பூ என்று கூறப்படுகிறது. கேரளா மாநில மலராகவும் உள்ளது. கொன்றைப் பூக்கள் விஷீ பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. விஷீவின் போது கிருஷ்ணன் வழிபாட்டில் முழுவதுமாக இந்தப் பூக்களைத் து£வி அதிகாலையில் எழுந்து கண்களை மூடிய படி சென்று, இந்தப் பூக்களையும், சிரவளனையும் கண் விழித்துக் காண்பதால் (கன்பார்வை) இதன் பெயர் கணிக்கொன்றை என்று அழைக்கப்படுகிறது.
இதன் பூக்கள் சிவவழிபாட்டில் அதிகம் பயன்படுகிறது புத்தாண்டுகளில் இது மகிழ்ச்சி மற்றும் யோகம் கொண்டு வரும் என்று லாவோஸ் மக்கள் நம்புவதுடன், கோவில் வழிபாடுகளிலும் வீடுகளிலும் புத்தாண்டு தினத்தன்று மலர்களை தொங்க விடுகின்றனர். இந்துக்கள் கொன்றை மலர்கள் மூலம் சிவனை அர்ச்சிக்கின்றனர. சிவ பெருமான் கொன்றைப் பூவைச் சூடியுள்ளார் என்று “மின்னார் செஞ்சடை மேல், மிளிர் கொன்றை அணிந்தவனே” என்று சமய இலக்கியங்கள் கூறுகின்றன. பழங்கால தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் கொன்றையினை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. “பைங்காற் கொன்றை மெல் பிணி அவிடி” என்று அகநானு£றில் குறுங்குடி மருதனார் பாடியுள்ளார். முல்லைத் திணையில் தோழி தலைவியிடம் கூறியதாக வருகிறது. “காயாங் குன்றத்துக் கொன்றை போல” என்று நற்றிணையில் அவ்வையார் பாடியுள்ளார். முல்லைத் திணையில் தலைவன் கூறியதாக…
மருத்துவத்தில் சரக்கொன்றை:
மலம் எளிதாக கழிய வில்லையா? கவலையை விடுங்கள் சரக்கொன்றையின் இலைகளை துவையல் செய்தோ, கீரை போல கடைந்தோ உட்கொள்ள பலன் கிட்டும் இலைக் கொழுந்தை அரைத்து எடுக்கப்படும் சாற்றை, சர்க்கரை கலந்து உட்கொள்ள, குடலில் காணப்படும் கிருமி, திமிர்ப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறும் இலையை அரைத்து, படர்தாமரைக்குப் பூசி வர குணம் பெறலாம் கீல்வாதம், முக வலிப்பு நோய் உள்ள இடங்களில் இதன் இலையை தேய்க்கலாம். கொன்றை மரத்தின் இலைகள், பச்சை மஞ்சள,¢ வேப்பிலை, கருநொச்சி இலைகளை எடுத்துக் கொண்டு
நீரில் கொதிக்க வைத்து, அதனை குளிக்கப் பயன்படுத்திவர, சோரியாசிஸ் தோல் நோய் குணமாகும்.
சரக்கொன்றைப்புளி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சரக்கொன்றை காயின் உள்ளே காணப்படும் சதைப்பற்றுள்ள உள் பகுதியைத்தான் புளி என்கிறோம் சமையலில் சேர்க்கும் புளி போல இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் பித்தம் குணமாகும். குழந்தைகள், கர்ப்பிணிகள் சாப்பிட்டு வர, மலம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும். நெல்லிக்காய் அளவுக்கு சரகர்கொன்றைப் புளி எடுத்துக்கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் அளவு திரிபலா சூரணம் எடுத்து ஒன்றாக கலந்து கொண்டபின் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பின்பு, வடிகட்டி அருந்தி வர வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, வயிற்றை இயற்கையாக சுத்தம் செய்யும். அதிக வயிற்றுப்போக்கு இருக்கும் பொழுது மோரில் உப்பு சேர்த்து, கலந்து அருந்தி வர, சரியாகிவிடும். வயிறு சுத்தமடைவதால், மலச்சிக்கல் ஏற்படாது புற்று நோய் ஏற்படாது.
வெள்ளைப் போக்கு குணம் பெற உதவும் சரக்கொன்றைப் பூக்கள்:-
சரக்கொன்றைப் பூக்கள் சுமார் 10 எண்ணம் எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது பனங் கற்கண்டு, சேர்த்து, அவை தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஆறியபின்பு வடிகட்டிய பின்பு, நீரை காய்ச்சிய பால் சேர்த்து அருந்திவர வௌ¢ளைப் போக்கு குணமாகும். மேலும் இதனால் மஞ்சள் காமாலை நோய்க்கும் சிறந்த மருந்தாக மேற்கூறிய கஷாயம் அமைந்துள்ளது.
சரக்கொன்றைப் பூக்களின் மென்மையான இதழ்களை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். இதனுடன் தேன் சேர்த்து, இதழ்களை நன்கு உலர வைக்க வேண்டும். இதன் மீது மெல்லிய துணி கட்டி நான்கு நாட்கள் வரை வெயிலில் காய வைக்க வேண்டும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொண்டு, தினசரி இரவு நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வர, மறுநாள் மலச்சிக்கல் இன்றி மலம் வெளியேறும். சரக்கொன்றைப் பூவையும், இளம் கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம். பூக்களைக் கசாயம் செய்து அருந்தி வரலாம். இதன் மூலம் சர்க்கரை நோய், வயிற்றுக் கோளாறு மேதக் கோளாறு குணமாகும். பூக்களை குடி நீர் செய்து அருந்தி வருவதால், வயிறு வலி, குடல் சார்ந்த நோய்கள் குணமாகின்றன. பூக்களுக்கு வயிறு, குடலில் உள்ள புழுக்களை அழித்து, வெளியேற்றும் திறன் அதிகம் உள்ளது. சரக்கொன்றைப் பூவை, பால் சேர்த்துக் காய்ச்சி அருந்திவர உடலின் உள்ளுறுப்புகள் வலிமை பெறும். உடல் மெலிவாக காணப்படுபவர்கள். பலம் தேறுவார்கள் முன்னர் கூறியது போல, சரக்கொன்றைப் பூக்களை கொண்டு குல்கந்து செய்து தினசரி இரவு உட்கொண்டுவர உடல் சூடு தணியும்.
பல நோய்களுக்கு மருந்து சரக்கொன்றைப் பிசின்:
காசியா பல்ப் என்று கூறப்படும் சரக்கொன்றை மரத்தின் பிசின் மிகச் சிறந்த மலமிளக்கியாக பயன்படுகிறது. நீரில் பிசினைக் கரைத்து, குறைந்த அழுத்தத்தில் காய்ச்சிக் கிடைப்பது காசியா பல்ப் என்ற குழம்பு ஆகும். பிசினைக் குடிநீர் செய்து அருந்தலாம் அல்லது உப்பு, சமையல் புளி, மிளகாய், இஞ்சி சேர்த்து பிசினும் கலந்து துவையலாக செய்து உணவாக எடுத்துக் கொள்ளலாம். மிளகு சேர்த்து மிளகு நீராகவும் அருந்தி வரலாம்.
சிறு குழந்தைகள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், உடல் மெலிவு கொண்டவர்கள் இதனை மலமிளக்கியாக பயன்படுத்தலாம். ஆனால் இதை அளவுடன் பயன்படுத்த வேண்டும். நிலவாகை அல்லது சிவதைப் பொடியுடன் கலந்து பயன்படுத்துவது நல்லது.
பிசினை நீரில் அரைத்தும் கொதிக்க வைத்தும் கீல்ப்பிடிப்பு மற்றும் இதர பிடிப்புகளுக்கு மேல் உபயோகமாக பூசி வரலாம். வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, வாய் குமட்டல் போன்றவைகளை குணப்படுத்த மற்ற மருந்-துகளுடன் கலந்து தரலாம். குழந்தைகளின் வயிற்றுப் பொருமல் நீங்க, தொப்புளைச் சுற்றிப் பற்றுப் போடலாம். இதன் மரப்பட்டை மற்றும் இலையையும் எண்ணெய்விட்டு அரைத்துப் பூசினால் சில்லிடுதல் (கை, கால்), கட்டி, படர்தாமரை நீங்கும்.
தமிழகத்தில் ‘வன்னி’ மரத்திற்குப்பின்பு அதிக அளவு திருக்கோவில்களில் ஸ்தல விருஷமாக சரக்கொன்றை தான் அமைந்துள்ளது என்பது இதன் முக்கிய சிறப்பாகும்.