குடமிளகாய்

Spread the love

குடமிளகாய் சோளனேசி குடும்பத்தை சேர்ந்தது. இந்த குடும்பத்தில் கேப்சிகம் என்ற பிரிவில் மிளகாயும், குடமிளகாயும் வருகின்றன. நீளமான காரம் செறிந்த மிளகாய் எனப்படுகிறது. காரமற்ற, குண்டான வடிவமுள்ள குடமிளகாய் எனப்படுகிறது. மிளகாய் போன்ற கேப்சிகம் குடும்பத்தை சேர்ந்தவை வாசனை ஊட்டும் ஸ்பைசஸ் ஆகவும், காய்கறியாகவும், மருந்துகளாகவும் பயனாகின்றன. இந்தியாவில் குடமிளகாய் கேப்சிகம் என இந்திய ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. சிம்லா மிர்ச்சி (சிம்லா மிளகாய் என்றும் சொல்லப்படுகிறது).

கேப்சிகம் செடியின் பழங்கள் ஆங்கிலத்தில் சில்லி பெப்பர், பெப்பர் என்று கூறப்படுகின்றன. உண்மையிலேயே தாவிரவியலில் இந்த மிளகாய், குடமிளகாயின் பெயர்கள் சிறிது குழப்பத்தை உண்டாக்கும். ஆக்ஸ்ஃபோர்டு புக் ஆஃப் புட் ப்ளாண்ட்டில் இனிமையான பெப்பர் என்றும் காரமிளகு என்றும் குறிப்பிடப்படுகிறது. குடமிளகாய் ரகங்கள் மெக்ஸிகோவில் தோன்றியதாக கருதப்படுகிறது. மெக்ஸிகன் மொழி வார்த்தையான சில்லிபழங்குடி மொழியின ஆனால் இந்திய சிஎஸ்ஐஆர் ன் க்ளாசரி ஆஃப் இந்தியன் மெடிக்கல் ப்ளாண்ட் மிளகாய் என்றே குறிப்பிடப்படுகிறது. எக்ஸ்லி அல்லது சில்லி என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். இந்த வார்த்தை கி.மு. 3000 ஆண்டில் பயிரிடப்பட்ட காப்சிகம் தாவிரங்களை குறிப்பிடும். இது ப்யூபெல்லா மற்றும் ஒயாசகா இடங்களில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மிளகாய் வகைகளில் காரமூட்டும் குணமுண்டு. இதற்கு காரணம் அவற்றில் உள்ள கேப்சிகம்  என்ற பொருள். இது இல்லாத, (அ) குறைந்த அளவில் உள்ளவை குடமிளகாய் வகைகள். இவற்றை சமைத்தும் உண்ணலாம். சமைக்காமலும் உண்ணலாம். சமையலில் பெரும்பான்மையாக பயனவாது மிளகாயும், குடமிளகாயும் தான். மேலும் சில ரகங்களும் சமையலும் பயனாகின்றன.

குடமிளகாயின் வடிவத்தினால் அதில் உட்குடைந்து சீஸ், மாமிசம், சாதம் இவற்றை நிரப்பி, சமைக்கலாம். பிற காய்கறிகளுடன் (உதாரணம் : உருளைக்கிழங்கு) சேர்த்துக் சமைக்கலாம். நீளவாக்கில் நறுக்கி வறுக்கலாம். சாஸ்களில், சலாடுகளில் சேர்க்கலாம்.

ஊறுகாயாக குடமிளகாயை பயன்படுத்தலாம். சிவப்பு, பச்சை வண்ணங்களில் குடமிளகாய் கிடைக்கும். பீன்ஸ், ப்ரோகிலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு இவற்றுடன் சேர்ந்து சமைக்க, சுவை கூடும். இவற்றை நீராவியில் வேக வைக்க வேண்டும். வேர்க்கடவை வெண்ணெய்யில், குடமிளகாயின் நீள துண்டுகளை தோய்த்து சாப்பிட்டால் நல்ல சத்துக்கள் கிடைக்கும். குடமிளகாய் விட்டமின் ஏ மற்றும் C அதிகம் உள்ள காய்கறி

குடமிளகாய் சூப்

தேவை

குடமிளகாய்      2 (பெரியது)

பரங்கிக்காய்      1 சிறிய கீற்று

பூண்டு             2 பல்

சீரகம்             – 3/4 டீஸ்பூன்

எண்ணெய்          2 டீஸ்பூன்

பச்சைமிளகாய்    1

உப்பு                – தேவைக்கேற்ப

கொத்தமல்லி      – சிறிது

மிளகுத்தூள்        1/2 டீஸ்பூன்

செய்முறை

குடமிளாய், பரங்கிக்காய் முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி அதோடு பூண்டு, பச்சைமிளகாய், சீரகம், குடமிளகாய், பரங்கிக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தணலில் வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும் பச்சை மிளகாயை நீக்கி விட்டு நன்கு அரைக்கவும். அரைத்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்.

100 கிராம் குடமிளகாயில் உள்ள சத்துக்கள்

ஈரப்பசை       92.4 கி

புரதம்          1.3 கி

கொழுப்பு      0.3 கி

நார்ச்சத்து     – 1.0 கி

கார்போஹைடிரேட் – 4.3 கி

கலோரி        24 கி.க

100 கிராம் குடமிளகாயில் உள்ள தாதுப்பொருட்கள்

கால்சியம்      10 மி.கி.

பாஸ்பரஸ்     – 30 மி.கி.

இரும்புச்சத்து  0.567 மி.கி.

மக்னீசியம்     – 12 மி.கி.

செம்பு          0.12 மி.கி.

மங்கனீஸ்     – 0.06 மி.கி.

ஜிங்க்          0.13 மி.கி.

குரோமியம்   0.006 மி.கி.

100 கிராம் குடமிளகாயில் உள்ள விட்டமின்கள்

கரோடீன்      427 ம்யூ.கி

தியாமின் (விட்டமின் H 1) – 0.55 மி.கி.

ரிபோஃப்ளேவின் (H 2) – 0.05 மி.கி.

நியாசின்      0.1 மி.கி.

விட்டமின் சி – 137 மி.கி.

உணவு நலம் நவம்பர் 2010

குடமிளகாய், சோளனேசி, கேப்சிகம், மிளகாய், காரம் செறிந்த மிளகாய், காரமற்ற, ஸ்பைசஸ், காய்கறியாகவும், மருந்துகளாகவும், சிம்லா மிர்ச்சி, சிம்லா மிளகாய், சில்லி பெப்பர், பெப்பர், ஆக்ஸ்ஃபோர்டு, புக், ஆஃப், புட், ப்ளாண்ட், காரமிளகு, மெக்ஸிகோ, மெக்ஸிகன், சில்லி, க்ளாசரி, ஆஃப், இந்தியன், மெடிக்கல், ப்ளாண்ட், எக்ஸ்லி, ப்யூபெல்லா, ஒயாசகா, தொல்பொருள், ஆய்வுகளின், சமையலில், மிளகாயும், குடமிளகாயும், சீஸ், மாமிசம், சாதம், சாஸ்களில், சலாடுகளில், பீன்ஸ், ப்ரோகிலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, வெண்ணெய்யில், சத்துக்கள், விட்டமின், , குடமிளகாய் சூப், செய்முறை, குடமிளகாய், பரங்கிக்காய், பூண்டு, சீரகம், எண்ணெய், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி, மிளகுத்தூள், 100, கிராம், குடமிளகாயில், சத்துக்கள், ஈரப்பசை, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைடிரேட், கலோரி, 100, கிராம், குடமிளகாயில், தாதுப்பொருட்கள்,

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், செம்பு, மங்கனீஸ், ஜிங்க், குரோமியம், 100, கிராம், குடமிளகாயில், விட்டமின்கள், கரோடீன், தியாமின், விட்டமின், H, 1, ரிபோஃப்ளேவின், H, 2, நியாசின், விட்டமின், சி,


Spread the love