குடைமிளகாய்

Spread the love

கடைகளில்  இருக்கும் குடைமிளகாயை கண்காட்சி பொருளாக மட்டுமே  பார்த்து விட்டு, மற்ற  காய்கறிகளின்  மீது கவனம்  செலுத்துவதுதான் பெரும்பாலானோர்களின் நடைமுறை. உண்¬மையில் குடைமிளகாயின் நன்மைகள் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அப்படி தெரியாதவர்கள் முதலில் வாங்குவது  குடை மிளகாயாகத் தான் இருக்கும். ஆரோக்கியம் விஷயத்தில் குடைமிளகாயின் பங்கு அளப்பரியது  இந்த குடைமிளகாய் மஞ்சள் பச்சை சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

காரத்திற்காக பச்சை மிளகாய்  சேர்க்கப்படுவது உண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய். குடைமிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு பொதுப்பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘ சில்லி பெப்பர்’ என்றும் அமெரிக்கா மற்றும் கனடாவில்’பெல் பெப்பர் என்றும்’ஆசிய நாடுகளில்’ காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். சுவிட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு.

இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள்  அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளன.

குடை மிளகாய் உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது வாய்புண் தோன்றும் . அவைகளை குடை மிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் காப்ஸேயில் இருக்கிறது. காப்ஸேயில் புராஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை  மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

கொலஸ்ட்ராலையும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின்சி நிறைய உள்ளது. இவை இரண்டில் சக்தி மிக்க ஆன்டி& ஆக்சிடன்டாக செயல்பட்டு , உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.  குடை மிளகாய் மஞ்சள் , சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்த நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.


Spread the love