இந்த காலத்தில் முலாம்பழம் ஜுஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்….

Spread the love

தமிழ்நாட்டில்குறிப்பாக வெயில் காலத்தில் தள்ளு வண்டியில் கூட முலாம்பழம் ஜுஸ் விற்கபடுவதை பார்த்திருப்போம். இந்த ஜூஸ் மட்டும் அதே சுவையில் நம் வீட்டில் செய்துகுடிக்கலாம். ஆனால் அதற்கு சில காலம் காத்திருக்க வேண்டும். ஏனென்றால்? இப்போது மழைக்காலம். முலாம்பழத்தில் விட்டமின் சி, பி, மினரல்ஸ் ஆகியவை அடங்கியுள்ளது. இதில்இருக்கும் கரையக்கூடிய நார்சத்து உடலில் இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை குறைத்துவிடும்.

அதோடு கெட்ட LDL கொலஸ்ட்ராலையும் இரத்தத்தில் சேரவிடாது. இதனால்உடல் பருமனையும் குறைக்கலாம். முலாம்பழத்தில் இருக்கும் கால்சியம் நம்முடைய எலும்புகள் மற்றும் பற்களையும் உறுதியாக்க உதவுகின்றது. முலாம்பழம் நீர்சத்து நிறைந்த பழம் அதனால்தான் வெப்ப காலத்தில் இது அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஜுஸ் குடிப்பதனால் நமது உடலிற்கு essential மினரல்ஸ் ஆன பொட்டாசியம், மெக்னீஷியம்,இரும்புசத்து, சிங்க் போன்றவற்றை வழங்கும். நீரேற்றம் தடைபட்டு உடல்குளிர்ச்சியும் பெறும்.

மேலும் இதில் இருக்கும் நார்சத்து, செரிமானத்தை எளிதாக்கும். அதோடு மலச்சிக்கலுக்கும் உடனடிதீர்வு கிடைக்கும். மேலும் தொடர்ந்து ஏழு நாள் முலாம்பழம் ஜுஸ் குடித்து வந்தால் உயர்இரத்த அழுத்தம் குறைவதாகவும் கூறப்படுகின்றது. அதனால் உயர் இரத்த அழுத்தத்திற்குஎதிராக போராடகூடிய பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது. அதனால் அடுத்து நமக்கு தேவைபடகூடியமற்றொரு முக்கிய அம்சம், இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.

ஒரு டம்ளர் முலாம்பழம் சாற்றில் விட்டமின் சி 34% அடங்கியுள்ளது. இது நமக்கு சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. முலாம்பழத்தில் இருக்கும் ஊட்டசத்து மற்றும் மினரல்ஸ் கர்பமான பெண்களுக்கு மிகவும் நல்லது. இது கருவை ஆரோக்கியமாகவும் மேலும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜுரணம் மற்றும் வாயுதொல்லைக்கும் நிவாரணம் அளிக்க கூடியதாக உள்ளது. மேலும் தோல் பிரச்சனைகள் உருவாவதையும் தடுக்கும். 


Spread the love