அண்மைக் காலமாகப் பெண்களிடையேயும் இதயத் தாக்கு (Heart attack) பரவலாக ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதயத் தாக்கு வந்த பின்னர் மருத்துவம் செய்வதை விட வருவதற்கு முன் காப்பது தான் சிறந்தது வழி.
இதோ சில வழி முறைகள்.
1. உங்களது வயது மற்றும் உடல் எடை போன்றவற்றிற்குத் தக்கதான சில எளிய உடற்பயிற்சிகளைத் தோர்ந்தெடுத்து தினமும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை செய்யலாம் கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டுமென்பதில்லை. தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற் கொள்வது நல்லது.
2. பெண்களுக்குப் பல காரணங்களால் எளிதாக உடல் பருமன் கூடுவதற்கு வாய்ப்பு உண்டு. இயன்ற வரை உடல் எடையை ஒரே சீராக வைத்துக் கொள்வது நல்லது.
3. அன்றாட உணவு வகைகளைத் தயாரிக்கும்பொழுது முழுத் தானியங்கள், பல்வகையான காய்கறி வகைகள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
4. ஜங்க்ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் இவைபோன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டதும் அதிக அளவு உப்பும், இனிப்பும் கொழுப்பும் கொண்ட உணவு வகைகளை விலக்க வேண்டும்.
5. சமையலுக்கு எண்ணெயைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, நெய், வெண்ணெய், வனஸ்பதி போன்ற இதயத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய, தாவர எண்ணெய்களான, நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிடு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
6. கருத்தடை மாத்திரை உட்கொள்பவராக இருந்தால் அடிக்கடி உடல் எடையையும் இரத்த அழுத்தத்தையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
7. கடுமையான இறுக்கத்தை தடுக்க, பயனுள்ள இனிமையான பொழுது போக்குகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள். மன இறுக்கத்தைப் போக்க நகைச்சுவை உணர்வுடைய மக்களுடன் பழகுங்கள். மனதிற்கு இதம் தரக்கூடிய யோகா, ஆழ்நிலைத் தியானம் இவற்றில் கொஞ்ம் கவனம் செலுத்துங்கள்.
8. உங்கள் வீட்டில் பெற்றோர்கள் இதய நோய்க்கு ஆளாகியிருந்தால், உங்கள் 20வது வயதிலிருந்து உங்கள் இரத்தத்திலுள்ள கொலஸ்டிராலின் அளவை ஆண்டிற்கு ஒருமுறை சோதித்துக் கொள்ளுங்கள்.
9. 30 வயதிற்கு மேல் ஒவ்வொரு பெண்ணும், இதயநோயின் தன்மையை துல்லியமாக அறிந்து கொள்ள, ‘நீயுகிலியர் ஸ்கேனிங்’ (Nuclear Scanning) என்ற நோய் கண்டுபிடிப்பு முறையைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வகையான கண்டுபிடிப்பு முறை தொடக்க நிலையில் நோயை அறியப்பயன்படும்.