சர்க்கரை வியாதி சிக்கல்கள் நரம்புகள்

Spread the love

சர்க்கரை வியாதியை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சர்க்கரை வியாதி வந்துவிட்டால் பயப்பட தேவையில்லை. அதே சமயம் பல சிக்கல்களுக்கு சர்க்கரை வியாதி காரணம் என்பதை தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சர்க்கரை வியாதி உண்டாக்கும் சிக்கல்களை சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

அமெரிக்க டாக்டர் ஃபிரடெரி அல்லன் (ஞிக்ஷீ. திக்ஷீமீபீமீக்ஷீவீநீளீ கிறீறீமீஸீ) சொல்வது. சர்க்கரை வியாதி ஒரு குறைபாடுள்ள வளர்சிதை மாற்றம் (திணீuறீtஹ் னீமீtணீதீஷீறீவீsனீ) மட்டுமல்ல; உடலின் உள் இருக்கும் வியாதிகள், கோளாறுகள் இவற்றின் மொத்த பிரதிபலிப்பு. சர்க்கரை வியாதி உடலின் உள்ள எல்லா உறுப்புக்களையும் பாதிக்கும்.

இந்த பாதிப்புகள் சர்க்கரை வியாதி வந்த சில மாதங்களில் கூட ஏற்படலாம் இல்லை சில வருடங்களிலும் உண்டாகலாம். பல சிக்கல்கள் மெதுவாக முன்னேறுபவை. ரத்த சர்க்கரை அளவை மருத்துவம் மூலம் ‘கன்ட்ரோல்’ செய்து கொண்டே வந்தால் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம். அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் 50,000 சர்க்கரை நோயாளிகள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் 1,00,000 என்று கருதப்படுகிறது.

அதிகமாக சர்க்கரை நோயாளிகளை தாக்குவது நரம்பு மண்டல பாதிப்புகளும், இரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளே ஆகும். இவையே, பல பிரச்சினைகளான பாதப்புண்கள், கண் பாதிப்புகள், மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு அடிப்படையாகவும் அமைந்து விடுகின்றது.

ரத்த நாளங்கள் வேறு. நரம்புகள் வேறு. ரத்த நாளங்கள் இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்லும் குழாய்கள். நரம்புகள் மூலம் சக்தி, மூளையின் ஆணைகள், செயல்பாடுகள் எல்லாம் கொண்டு செல்லப்படுகின்றன. நரம்புகள் மூளைக்கு செய்திகளை ஒரு மணிக்கு 290 கி. மீ. வேகத்தில் அனுப்புகின்றன!

சர்க்கரை நோயால் ஏற்படும் ரத்த நாள பாதிப்புகள்

சர்க்கரை வியாதி உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும். இவை சர்க்கரை வியாதி தோன்றிய சில மாதங்களிலேயே ஏற்படலாம் அல்லது சில வருடங்களில் ஏற்படலாம்.

அதிக சர்க்கரை பெரிய, சிறிய ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும். இதற்கு முன்னால் கல்லீரலின் வேலையை சர்க்கரை வியாதி பாதிப்பதால், கொழுப்புகள் அதிகமாகும். இவை ரத்தக் குழாய்களின் படிந்து, இரத்தப் பாதையை சுருக்கும். சிறிய தந்துகிகள் கூட ரத்தம் பெற முடியாமல் பாதிப்படையும். ரத்தக் குழாய்கள் சுருங்கினால், இதயம் அதிகமாக வேலை செய்ய நேரிடும். இரத்த அழுத்தம் ஏறும். மூளை, இதயம் போன்ற மிக முக்கிய உறுப்புகள் பழுதடைந்து போனால் அப்புறம் என்ன? மாரடைப்பு, கை கால் இழுத்துக் கொண்டு பக்கவாதங்கள் வரும் ஆண்மை குறைவு உண்டாகும் சிறுநீரகமும் பாதிக்கப்படும் இந்த மாதிரி தமனிகள் கொழுப்பு படிவதினால் பாதிப்பதை ‘ஆத்ரேஸ்£க்ளோரோசிஸ்’ என்பார்கள். இந்த வியாதி சர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட, இருப்பவர்கள் 2 – 6 தடவை அதிகமாக தாக்கப்படுவார்கள்.

இந்த ரத்தக்குழாய்கள் பாதிப்புகள் முதலில் வெளியே தெரிவதில்லை. சில அறிகுறிகள்.

பாதிப்பு                                              பாதிக்கப்பட்ட அவயம்

1. வாய்குழறல், தலைசுற்றுவது                      மூளை – ரத்தம்

கண்கள் இருட்டிக் கொண்டு            சரியாக

வருவது                                               சென்றடையவில்லை.

2. கை கால் மரத்துப்

போதல், தசைகள்                    கால்களில் ரத்த

பலவீனம், நடக்கும்                             ஒட்டமில்லை.

 போது வலி             

நடப்பது  கடினம்

ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் அவயங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைப்படும். ஆக்சிஜன் இல்லாமல் எந்த செயல்பாடும் இல்லை. திசுக்கள் இறந்து விடும். கழிவுப் பொருட்கள் உடலை விட்டு வெளியேறாது. பல சிக்கல்கள் உருவாகும்.

இரத்தக்குழாய்களின் சுவர்கள் தடிமனடைவது. (பிணீக்ஷீபீமீஸீவீஸீரீ). இரத்தக் குழாய்களின் மீள்திறன் குறைந்து விடுவது. (ணிறீணீstவீநீவீtஹ்). இரத்தக் குழாய்களின் சுவர்களில் கொழுப்பு படிவது (கிtலீமீக்ஷீஷீsநீறீமீக்ஷீஷீsவீs), இவை  ஏற்படும்.

இரத்தக்குழாயின் வழியே செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடுகின்றது. இதனால் உடலின் ஒவ்வொரு செல்லும் தேவையான உயிர்ச்சத்துகளை (ஸீutக்ஷீவீtவீஷீஸீ) யும் பிராண வாய்வையும் (ஷீஜ்ஹ்ரீமீஸீ) பெற முடியாமல் தவிக்கின்றன. அதிகளவு இரத்தத்தை செலுத்திட முயன்று இதயம் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது. இரத்த ஓட்டமும் அதிகமாகின்றது. இதயம் பாதிக்கப்படுகின்றது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.

உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் நரம்புகளுக்கும் தேவையான சத்துக்களும் பிராண வாயுவும் இரத்தம் மூலமாகவே கிடைக்கின்றது. இரத்த ஓட்டம் தடைபடுவதால் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகின்றது. பொதுவாக நரம்புகளை இரு வகையாக பிரிக்கலாம்.

இயக்க நரம்புகள்: இவை மூளையிலிருந்து உடலின் பிற உறுப்புகளுக்கு கட்டளைகளை எடுத்துச்செல்பவை, தசைகளை இயக்குபவை.

உணர்வு நரம்புகள்: இவை உடலின் பிற உறுப்புகளிலிருந்து மூளைக்கு உணர்வுகளை (சூடு, குளிர், அதிர்வு, வலி, அழுத்தம் போன்றவை) எடுத்துச் செல்பவை.   சர்க்கரை வியாதியின் பாதிப்பால் இவ்விரு வகை நரம்புகளும்  பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவே இருப்பதால் இது ஏற்படுகின்றது.  வளர்சிதை மாற்ற கோளாறுகளால் குளுகோஸ் சரியாக உடலில் ஏறாமல் போகும் இரத்த சப்ளையும் குறைந்து போவதால், நரம்புகள் நலிவடைகின்றன. தீடிரென கால்கள் பலவீனமடையும். மரத்துப்போகும். கால்களில் உணர்ச்சி குறையும். நரம்புகள் நாளாக நாளாக மோசமாக பாதிக்கப்படும். நரம்பு பாதிப்புகள் பல வகைகளில் வெளிக்காட்டும். ஒரு நரம்பு பாதித்தால் ஒரு கையோ, காலோ தீடிரென்று பலமிழந்து போகும். கை, கால், பாதம் இவைகள் பாதிக்கப்பட்டால், உணர்ச்சிகள் குறையும். கால் பாதங்களின், விரல்களில் தீ வைத்தால் போல் எரியும். இரவில் இந்த வலிகள் அதிகமாகலாம். ஊசி குத்துவது போல் வலிக்கும்.

வலி, சூடு தெரியாமல் போய், நோயாளிகள் தாங்களாகவே காயங்களை ஏற்படுத்தி கொள்ளும் நிலையும் ஏற்படலாம். மூட்டுகள் காயப்படும். இதற்கு சார்காட் ஜாயின்ட்ஸ் (சிலீணீக்ஷீநீஷீt’s யிஷீவீஸீts) என்பார்கள். மத்திய நரம்பு மண்டலத்தின் தானியங்கி நரம்புகள், ரத்த அழுத்தம், இருதய துடிப்பு, ஜீரணம், உமிழ் நீர் சுரப்பது, சிறுநீர் போவது போன்ற செயல்பாடுகளை நடத்துகின்றன. இவற்றை சர்க்கரை வியாதி தாக்கும்.

நாம் உடலின் ஏற்படும் வலியை உணர உதவும் நரம்புகளை, சர்க்கரை வியாதி சேதப்படுத்தும். மேலே சொன்ன சிலீணீக்ஷீநீஷீt’s ழீஷீவீஸீts க்கும் ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸீக்கும் முதலில் ஏற்படும் அறிகுறிகள் ஒன்றாக காணப்படுவதால், டாக்டர்களுக்கே குழப்பம் வரும்.

இவை வயதிற்கு ஏற்பவும் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க மாறுபடுகின்றது.

சர்க்கரை  நோய் இருக்கும் காலத்தின் அளவைப் பொறுத்தும் இரத்தக்குழாய் மற்றும் நரம்புகளின் பாதிப்பு அதிகமாகின்றன.

இதர அறிகுறிகள்

• கால் விரல்கள் தசைகள் வலுவிழுப்பதால் மடங்கிக் கொள்ளுதல் – சிuக்ஷீறீவீஸீரீ ஷீயீ tஷீமீs. பாதங்கள் வளைவாக இல்லாமல் தட்டையாக ஆவது – கிக்ஷீநீலீ ஷீயீ tஷீமீ.

• எடை அதிகரிப்பதால் தசைகள் வெடித்து புண் ஏற்படுவது – திஷீஷீt uறீநீமீக்ஷீs.

• நரம்பு மண்டலம் பாதிப்படைந்து விந்து விரைந்து வெளிப்படுவது – றிக்ஷீமீனீணீtuக்ஷீமீ மீழீணீநீuறீணீtவீஷீஸீ.

• நரம்பு பாதிப்படைவதால் ஆண்கள் விறைப்புத்தன்மையை அடைய முடியாமல் போவது – ணிக்ஷீமீநீtவீறீமீ பீஹ்sயீuஸீநீtவீஷீஸீ.

• தோள் பட்டை இறுகி வலியை தருவது செயல்பாட்டை இழப்பது – திக்ஷீஷீக்ஷ்மீஸீ sலீஷீuறீபீமீக்ஷீs.

• கை விரல்கள் கால் விரல்கள் சூகை பிடித்தல் – ழிuனீதீஸீமீss ஷீயீ tஷீமீs & யீவீஸீரீமீக்ஷீs.

இவை தவிர இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைகின்றது.

இவற்றிற்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் சிறந்த மருந்துகள் உள்ளன.

அவை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் இத்தகைய நரம்பு மண்டல பாதிப்புகளின் தாக்கத்தை குறைத்து அதிக நாட்கள் அவை தாக்காமல் உடலுக்கு தேவையான சக்தியை அளித்து பாதுகாக்கின்றன. இம்மருந்துகளை தொடர்ந்து அலோபதி மருந்துகளுடன் சேர்த்து உபயோகித்து வர சர்க்கரை அளவும் கட்டுப்படும் பிற பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்திடும்.


Spread the love