குளிர்ப்பானங்கள்

Spread the love

இளநீர், மோர், பழங்கள், போன்றவை கோடையைச் சமாளிக்க உதவுகின்றன. இவற்றையெல்லாம்விட கோடைத் தொல்லைகளை வெல்ல மிகவும் உதவுவது வெட்டிவேர் ஆகும். வெட்டிவேரானது வெம்மையை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவது மட்டுமின்றி, நறுமணத்தையும் தருகிறது. மேலும், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையுடையது.

வெட்டிவேரில் மணம், குணம் தரும் ஒரு வகையான வேதிப் பொருள் அடங்கியுள்ளது. இதிலிருந்து மணம் தரும் ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் இடம் பெறுகிறது.

எப்படி பயன்படுத்தலாம்?

வெட்டிவேரைத் துண்டுகளாக வெட்டிக் குடிநீரிலிட்டுப் பயன்படுத்தலாம் பொடியாகவோ, கஷாயமாகவோ, எண்ணெய்யாகவோ பயன்படுத்தலாம், விசிறி, பாய், திரை தயாரித்து பயன்படுத்தலாம், வேர்களை நீரிலிட்டு அல்லது சந்தனத்துடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம்.

சிறப்புக் குணங்கள்.

வெட்டிவேர் பல்வேறு சிறப்புக் குணங்களைத் தன்னகத்தே கொண்டது. குளிரூட்டி, பசியூட்டி, சிறு நீர்ப் பெருக்கி போன்ற தன்மைகளைக் கொண்டது. உடல் வெம்மையை நீக்கி குளிர்ச்சியூட்டுகிறது. வேர்க்குரு, வேனல்கட்டிகளைக் குணப்படுத்தும். உடல் சூடு, கண் எரிச்சல், தலைவலி இவற்றைக் குணப்படுத்தும். கோடையில் ஏற்படும் நீர்ச்சுருக்கு, வயிற்றுக் கடுப்பு  போன்றவற்றைக் குணப்படுத்தும்.


Spread the love