கால்சிய தேவைகள்

Spread the love

எலும்புகளுக்கும் பற்களுக்கும் கால்சியம் தேவை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் மூட்டு நோய்கள் வந்துவிட்ட பின் அல்லது எலும்பு முறிவு நேர்ந்தால் தான் நாம் கால்சியத்தைப் பற்றி நினைக்கிறோம்.

ஏனென்றால் இந்த விளைவுகளை தவிர, கால்சியம் குறைபாடுகளுக்கான வேறு அறிகுறிகள் தென்படுவதில்லை.

கால்சியம் எலும்புகள், பற்களுக்கு மட்டுமல்ல, தசை இயக்கத்திற்கு நரம்புகள் இயக்கத்திற்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தாதுப்பொருள்.

உடலுக்கு கால்சியம் வாழ் நாள் முழுவதும் தேவை. ஆனால் வளரும் பருவத்திலும், கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், அதிக அளவில் அவசியம் தேவை.

உடலில் அதிகம் உள்ள தாதுப் பொருள் கால்சியம். ஒரு நன்கு வளர்ந்த ஆணிடம் 1200 கிராம் கால்சியமும், பெண்ணிடம் 1000 கிராமும் உள்ளது. உடல் எடையில் 1.5 லிருந்து 2.0 சதவிகிதம் கால்சியம் உடலில் உள்ள எல்லா தாதுப் பொருட்களில் 39% கால்சியம் தான். இதில் 99% எலும்பில் தான் (பற்களை சேர்த்து) இருக்கிறது. மீதி 1% ரத்தத்திலும், சில திசுக்களிலும் இருக்கும்.

கால்சியத்தின் உற்ற தோழன் பாஸ்பரஸ். இவை இரண்டும் இணைந்து தான் கால்சியம் பாஸ்பேட்டாக (கால்சியம் கார்பனேட்டுடன்) எலும்புகளில், பற்களிலும் அமைந்திருக்கின்றன.

கால்சியம் குறைபாடு

உணவிலிருந்து, உடல் 10 லிருந்து 30 சதவிகிதம் தான் கால்சியத்தை கிரகிக்க வல்லது. இரத்தத்தில் கால்சியம் அளவு குறைந்தால் உடல் எலும்பிலிருந்து “கடனாக” கால்சியத்தை பெற்றுக் கொள்கிறது. சாதாரணமாக 400  லிருந்து 500 மி.கி. கால்சிய இழப்பு உடலில் ஏற்படுகிறது. எனவே கால்சியம் குறைய, குறைய, உடல் கடன் வாங்கிய கால்சியத்தை எலும்புக்கு திருப்பித் தர முடியாமல் போகும்.

கால்சியத்தை உடல் கிரகிக்க உதவுபவை

விட்டமின் “டி” (D)” – கால்சியத்தை கிரகிக்க இந்த விட்டமின் அவசியம் தேவை. இது எவ்வாறு இதை செய்கிறது என்பது சிக்கலான விஷயம். இரத்த கால்சியம் அளவை கட்டுப்படுத்துவது. தைராய்டு ஹார்மோனும், கால்சிடோன்னும், ஆகும். பார – தைராய்டு ஹார்மோன் ஜீரண மண்டலம் அதிக கால்சியத்தை கிரகிக்க உதவுகிறது. தவிர, விட்டமின் டிசெயலாற்ற சிறுநீரகத்தை தூண்டுகிறது. எனவே விட்டமின் “டி” குறைந்தால் கால்சிய கட்டுப்பாடு போய்விடும். இதனால் தான் சில கால்சியம் மாத்திரைகளில் விட்டமின் “டி”யும் சேர்க்கப்படுகிறது. பார – தைராய்டு ஹார்மோன் அளவு குறைந்தாலும் கால்சியம் குறைபாடு ஏற்படும்.

கால்சியம் தண்ணீரில் கரையாது. அதை கரைக்க அமிலம் தேவை. ஜீரண சாறுகளில் உள்ள ஹைடிரோகுளோரிக் அமிலம், கால்சியத்தை கரைத்து, ஜீரணமாக உதவுகிறது.

பாலில் உள்ள லாக்டோஸ் (Lactose) ஜீரணிக்க லாக்டேஸ்‘ (Lactase) என்ற என்ஜைம் உதவுகிறது. இது சரியான அளவில் இருக்க வேண்டும். பலருக்கு, பால் ஒவ்வாமல் போகலாம். லாக்டேஸ் குறைந்தால் கால்சியம் ஜீரணம் தடைப்படும்.

உடலில் கொழுப்பு சரியான அளவில் இருந்தால், கால்சியம் சுலபமாக ஜீரணமாகும்.

புரதச்சத்தும் கால்சியத்தை கிரகிக்க உதவும்.

ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) கால்சியம் கிரகிக்கப்படுவதை குறைத்து, அதிக கால்சியம் வெளியேறுமாறு செய்யும். சில மருந்துகளின் உபயோகமும் கால்சியத்தை ஜீரணிக்க தடை செய்யும்.

கால்சியம் குறைபாட்டுக்கு மற்றொரு காரணம் விட்டமின் டிகுறைவு. இதனால் ஆஸ்டியோ – மலாசியா‘ (Osteomalacia) ஏற்படுகிறது. எலும்புகளில் வலி தோன்றும் – அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் எலும்பு சரிவர அமையாமல் போகலாம்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்.

கால்சியம் கார்பனேட்- இது தான் கிட்டத்தட்ட எல்லா உணவுகளில் இருக்கும் எளிமையான கால்சியம். சிலருக்கு இந்த கார்பனேட் வயிற்றுக் கோளாறுகளை விளைவிக்கும். கால்சியம் கார்பனேட்டில் 40% கால்சியம் உள்ளது. 1000 I.A. 400 I.A. கால்சியத்தை தரும்.

பவழப் பாறைகளிலிருந்து கிடைக்கும் பவழக் கால்சியம்.

கால்சியம் சிட்ரேட் (Calcium Citrate) ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்றது வயிற்றில் வாய்வு கோளாறுகளை உண்டாக்காது. இந்த கால்சியத்தால் சிறுநீரக கற்கள் ஏற்படாது. இதன் விலை அதிகம். தவிர ஒரு 210 I.A. கால்சியத்தை பெற, 1000 I.A. கால்சியம் சிட்ரேட்டை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

கால்சியம் பாஸ்பேட்:

இது சிக்கிரமாக ஜீரணமாகும். வாய்வை உண்டாக்காது. ஆனால் கால்சியம் கார்பனேட்டை விட விலை அதிகம்.இவை தவிர செயற்கை முறையில் சில வகை கால்சியம் தயாரிக்கப்படுகிறது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், “வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு” போடும் பழக்கம் உள்ளது. இது எல்லா தர மக்களிடமும் பரவியுள்ள பழக்கம் அதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வெற்றிலையில், சுட்டசுண்ணாம்பில் தண்ணீர் விட்டு தயாரிக்கப்பட்ட சுண்ணாம்பை (Calcium hydroxide) தடவி கொடுக்கப்படுகிறது. பாலூட்டும் தாய்களுக்கும் இந்த தாம்பூலம், ஒரு நாளில் 3 வேளையாவது கொடுக்கப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக, இந்த பழக்கம் சரியானது. எளிய மக்களுக்கு ஏற்ற, கால்சியம் தரும் முறை.

கால்சியம் குறைந்தால்

எலும்புகள் வலிவிழந்து பின்னமடையும்.

ஆஸ்டியோ போரோஸிஸ் ஏற்படும். எலும்புகள் முறியும் வாய்ப்புகள் அதிகமாகும்.

தசை இறுக்கம், இழப்பு உண்டாகும்

பற்கள் நிறமழிந்து, பற் சொத்தைகள்ஏற்படும்.

அடிபட்டால் ரத்தம் உறைவது தாமதமாகும்.

கால்சியம் அதிகமானால்

சிறுநீரகம், பித்தப் பைகளில் “கற்கள்” உண்டாகலாம்.

அதிகமாக பால் சாப்பிடுவதாலும், அன்டாசிட் (Antacid, அமில எதிர்ப்பிகளை) சாப்பிடுவதாலும் கால்சியம் அளவு அதிகமாகலாம். மலச்சிக்கல், அதிக சிறுநீர் போதல், தலை சுற்றல், வாந்தி, போன்றவை ஏற்படும்.

இதர தாதுப் பொருட்களை இரும்பு, துத்தநாகம் இவைகள் ஜீரணிக்கப்படுவது தடைப்படும்.

அரிசியில் கால்சியம் குறைவு. 100 கிராம் பச்சரிசியில் 10 I.A. தான் கால்சியம் இருக்கிறது. எனவே அரிசியை பிரதான உணவு உட்கொள்ளுபவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கால்சியம் பல பணிகளை செய்வதால், கால்சியம் இழப்பு ஏற்படுவது சகஜம். நாம் சொன்னபடி, பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில், குழந்தைக்கு பால்  கொடுக்கும் போதும், அதிக பட்ச கால்சியம் தேவை. சரியான அளவில் கால்சியத்தை உணவு மூலமாக எடுத்துக் கொள்வது நல்லது. வேறு மாத்திரை மருந்துகள் வேண்டுமென்றால், உங்கள் டாக்டரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு உட்கொள்ளவும்.

மேலும் கால்சியத்தைப் பற்றி

பால், பால் சார்ந்த உணவுகள் தான் இன்றும் நமது கால்சிய தேவைகளை பூர்த்தி செய்கின்றன. பால் போல கால்சியம் தருவது “சோயா” பால் என்கின்றனர் உணவு நிபுணர்கள்.

பழங்கள், காய்கறிகள் அதுவும் பச்சை காய்கறிகள் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கால்சியம் தருவது மட்டுமல்ல, உடலில் இருக்கும் கால்சியத்தை தக்க வைத்துக் கொள்ள இவை உதவும். நமது புதிய தலைமுறை உணவுகள் புரதம், சர்க்கரை, உப்பு அதிகமாகவும், பழங்கள், காய்கறிகள் குறைவாகவும் உள்ளவை. அமிலத்தன்மை கொண்டவை. இந்த அமிலத்தை குறைக்க, உடல், எலும்புகளிலிருந்து கால்சியத்தை எடுத்து, இந்த உணவின் ஊட்டச்சத்தை அல்க¬லினாகமாற்றும். எனவே இதை தவிர்க்க சமச்சீர் உணவு அவசியம். அல்கைலின் தன்மை கொண்ட காய்கறிகள், பழங்கள், பொட்டாசியம் உள்ளவை. இதனால் எலும்பிலுள்ள கால்சியம் காப்பாற்றப்படுகிறது.

உங்கள் எலும்புகள் பலவீனமாக இருந்தால் சில “ஆரோக்கிய உணவு” களை நீங்கள் தவிர்க்க வேண்டியிருக்கலாம். அவை – கோதுமை தவிடு (Bran), நார்ச்சத்துள்ள பருப்புகள். இவற்றில் பைடோஸ் (Phytates) உள்ளன. அதே போல் ஆக்ஸலேட் (Oxalate)உள்ள பசலை கீரை, காலிஃபிளவர் இவற்றை தள்ள வேண்டும். பைடேட்ஸும், ஆக்ஸலேட்ஸும், உடல் கால்சியத்தை கிரகிக்கும் திறமையை குறைக்கும்.


Spread the love