ஒரு குழந்தை உருவாவதில் இருந்து வளரும் வரைக்கும் கால்சியத்தின் பங்கானது மிகவும் அவசியம். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் இத்தனை கிராம் கால்சியம் தேவை என்று ஒரு அட்டவணையே உள்ளது. இது நம்முடைய எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது. அதோடு இரத்த ஓட்டம்,தசைகள் வளர்ச்சி, மூட்டு நெகிழ்வு, ஹார்மோன் வளர்ச்சி, விந்தணு வலிமை, பிரசவத்தை எளிமையாக்குகின்றது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய துடிப்பை சமநிலைப்படுத்துகின்றது.கேன்சர் செல்களில் இருந்து பாதுகாக்கின்றது. ஆரோக்கியமான உடல் எடை வரைக்கும் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்கு நாம் முறையாக என்னென்ன? உணவுகளை எடுத்து வரவேண்டும் என பார்ப்போம். இந்த அட்டவணையில் முதலில் இருப்பது நம் அனைவருக்கும் பிடித்தமானபால். ஒரு தம்ளர் பாலில், 276Mg கால்சியமும், வைட்டமின் A மற்றும் Dஅடங்கியுள்ளது. தயிரில் கால்சியத்தின் பங்கு 296 கிராம் உள்ளது. இது மட்டுமின்றிவைட்டமின் A மற்றும் C, புரோட்டீன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மற்றும் நல்லகொழுப்புகளும் அடங்கியுள்ளது.
இதில் இருக்கும் அமிலங்கள் செரிமானத்திற்கும் நல்லது. அதோடு டயாரியாபோன்ற நோய் வாராமலும் தடுக்கும். அடுத்து க்ரூசிபெரஸ் காய் கறிகளில் கால்சியம்அதிகம் உள்ளது. அதாவது ஒரு கப் புரோக்கோலில் 42.8mg கால்சியமும், காலிஃப்ளவர் 22.mg கால்சியமும், முட்டைகோஸில் 427 Mg கால்சியமும்,முள்ளங்கியில் 29mg கால்சியமும், வசாபில் 166mg கால்சியமும், அடங்கியுள்ளது. இந்தகுறிப்பிட்ட குடும்ப வகை காய்களில் அதிகபட்சமாக கால்சியம் Content இருக்கின்றது.
அதோடு பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் கால்சியம் அதிகமாகவே உள்ளது.குறிப்பாக இந்த உணவில் கால்சியத்தோடு புரோட்டீன், இரும்பு, சிங்க், பொட்டாசியம், ஃபோலட்,மெக்னீசியம், மற்றும் நார்சத்து அடங்கியுள்ளது. சோயா பீன்ஸில் 515mg, பீன்ஸில்153mg, பருப்புகளில்108mg, சுண்டலில் 210 mg –ம் அடங்கியுள்ளது. கீரை வகைகளில் குறிப்பாக கடுகு கீரை, புதினாமற்றும் பழுப்பு நிற கீரைகளில் கால்சியம் குறைவில்லாமல் கிடைக்கும்.
https://www.youtube.com/watch?v=94ml9T7AHSE