கட்டிகளை குணமாக்கும் கழற்சிக்காய்

Spread the love

ஊமத்தங்காய் போல் முட்கள் கொண்ட கழற்சிக்காய் ஒரு கொடியினத்தைச் சேர்ந்ததாகும். இந்தக் கழற்சிக் காயானது,   கோழி முட்டையின் வடிவிலும், விதைகள் மிகவும் கடினமாகவும் இருக்கும். இதன் விதையானது  முந்திரியைப் போல வழுவழுப்பாகவும், கசப்புத் தன்மை நிறைந்துமிருக்கும். இது  பலவகையான மருத்துவ குணங்களைக் கொண்டது.

இதன் காய்கள், இலைகள், விதைகள், வேர் என இதன் அனைத்து பாகங்களும் பலவிதமான நோய்களைத் தீர்க்கும் அரும் மருந்தாகப் பயன்படுகிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதை பயன்படுத்தி நோய்களை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

கட்டிகள் குணமாக :

அதிக உடல் சூட்டினால்  தோன்றும் கட்டிகளைக் குணப்படுத்தவும், இந்தக் காயின் சூரணத்தை, புண்கள் மற்றும் கட்டிகள் மீது பற்று  போட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதன் வேர்களும், பட்டைகளும் எல்லா விதமான கட்டிகளையும் போக்குவதற்கு உதவுகின்றன. இதன் இலைகளை கசக்கி புண்கள் மீது பூசினால் எரிச்சல் தீரும். உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு இதன் இலையை விழுதாக அறைத்து பற்று போட வேண்டும். இதன்  வேரை தண்ணீர் சேர்த்து சூடாக்கிப் பருகி வந்தால் உடல் சூடு தணியும்.

இதன் விதைகள் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியவை, அனைத்து வயிற்று சம்பந்தப்பட்ட  கோளாறுகளுக்கும் இதை பயன்படுத்தலாம். மேலும், இது மலமிளக்கியாகவும், உடல் சோர்வைப்   போக்கவும் பயன்படுகிறது.

பிற மருத்துவ குணங்கள்

இதன் விதைகள் கருப்பை செயல்பாட்டைத் தூண்டும். காயின் சூரணம் அடிவயிற்று வலியை போக்கும். பெண்களின் மாதவிலக்கை எளிதாக்குகிறது. பால் சுரப்பிகளை தூண்டி பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. விளக்கெண்ணெயில், கழற்சிக் காய் தைலம் செய்து  ஆண்களின் விதைப் பையின் மேல் தடவி வந்தால் விதை வீக்கம், விதைகளின் வலி, சுரப்பிகளின் வீக்கம் போன்றவை குணமாகும். வேரை சூரணம் செய்து பால்வினை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். இதன் துளிர் இலைகள் ஈரல் நோய்களைக் குணமாக்க பயன்படுகிறது.

இதன் விதைகளை (கொட்டைகளை) அதன் பச்சை வாசனை போகுமாறு வறுத்து, பொடியாக்கி தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் விரை வாதம் மற்றும் தொழு நோய் முதலியவை குணமாகும்.  மேலும் சிறுவர்களுக்கு வரும் முறைக்காய்ச்சலை குணமாக்குகிறது. இதன் விதைகளை சூரணம் செய்து, சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தலாம். மற்றும் இதன் விதைகளை பொடிசெய்து,  வறுத்து சாப்பிட்டு வந்தால் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்றவையும் குணமாகும். இதன் இலைச் சாற்றினை உட்கொண்டால் யானைக் கால் நோய் கட்டுக்குள் வரும். இது வலிப்பு நோயைத்  தணிக்கும். பாரிச வாயுவை எதிர்க்கும்.  மூளையில் ஏற்படும் இரத்த கசிவை தற்காலிகமாக போக்க இலை விழுதை உள்ளுக்குள் சாப்பிடலாம். இதன் இலையை பிழிந்து சரும நோய்கள் அனைத்திற்கும் மருந்தாகக் கொள்ளலாம். மேலும். இதன் இளந்தளிர்களை கசக்க்கிப் பிழிந்து  பற்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம். சொத்தை விழுந்த பற்களின் அருகில் இளந்தளிர்களை வைக்க சிறிது நேரத்தில் பற் கூச்சம் மறையயும். இலைகளை கொதிக்கும் நீரிலிட்டு வாய்க் கொப்பளிக்கவு, தொண்டைக் கட்டுகளை நீக்கவும் இது பயன்படுகிறது.  இதிலிருந்து தயாரிக்கப்படும் ஃப்ண்டுசின் என்ற பொருள் மலேரியாநோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் விதைச்சூரணமானது விரை வாதம், ஆஸ்துமா, வெண்குட்டம், இருமல், மூட்டுவலி, பசியின்மையை நீக்கும் மருந்தாக உபயோகப்படுகிறது. மேலும் ஈரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தி ஆரம்ப கால சர்க்கரை நோயை குணமாக்குகிறது


Spread the love