முழு உடலுக்கும் மருந்து முட்டைக்கோஸ்

Spread the love

முழு உடலுக்கும் மருந்து முட்டைக்கோஸ்

வித்தியாசமான  மிக வித்தியாசமான  அமைப்பு கொண்ட பிரபலமான, காய்கறி முட்டைக்கோஸ். இது அதிக  ஊட்டச்சத்துக்களை கொண்ட, ஒரு இலை காய்கறி ஆகும்.  இதை அதிகம் சமைக்காமல், அல்லது ஓரளவு சமைத்து உண்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை நாம் முழுவதுமாகப்  பெறலாம். இந்த முட்டைக்கோஸ் பல நிறங்களிலும் கிடைக்கின்றது. இவ்வகை முட்டைகோஸின் சுவை  வித்தியாசமானதாக இருக்கும்; இவைகளின் நிறங்களுக்கு ஏற்ப சத்துக்கள் மாறுபடுகின்றன.

சமீபத்தில் முட்டைகோஸ் குறித்த ஆய்வுகளில் அதில் அடங்கியுள்ள பல நன்மைகள் மற்றும் பலன்கள் வெளியாகி உள்ளன.

முட்டைக்கோஸ் ஏன் நல்லது?

முட்டைகோஸில் முக்கிய ஆன்டி ஆக்சிடென்ட்டுகளான கோலைன், பீட்டா கரோட்டின், லூடெய்ன் மற்றும் கொயர்செட்டின் நிறைந்து உள்ளன.

கோலைன் எனும் ஆன்டி ஆக்சிடென்ட்டு, நினைவாற்றல் மற்றும் அழற்சிக்கு எதிராக போராடும் திறன் கொண்டது; மேலும் கர்ப்பிணி பெண்களில் ஏற்படும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

பீட்டா கரோட்டின் எனும் ஆன்டி ஆக்சிடென்ட்டு, புகை பிடிப்பதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மரபணுக்களை காக்க உதவுகிறது.

லூடெய்ன் எனும் ஆன்டி ஆக்சிடென்ட்டு, மூப்படைவதால் ஏற்படும் பிரச்சனைகளைத்  தடுக்க உதவுகிறது.

கொயர்செட்டின் எனும் ஆன்டி ஆக்சிடென்ட்டு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.

முட்டைகோஸில் வைட்டமின்கள் சி, கே, பி ஆகியவை அதிகம் உள்ளன; இதில் உடலுக்குத் தேவையான பல நன்மைகள் இருக்கின்றன.

முட்டைக்கோஸின் நன்மைகள்

முட்டைக்கோஸ் அதிகமான ஆன்டி ஆக்சிடெண்ட்டுகளான, ஆந்தோசையனின்கள், சல்ஃபோரபேன் போன்ற சத்துக்கள் நிரம்பியது. இவை இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்கவும், அழற்சிக்கு எதிரான செயல்பாட்டை நல்கவும் உதவுகின்றன. முட்டைக்கோஸ் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பல அதிசயங்களை புரிகிறது.

முட்டைக்கோஸால் நன்மைகள்

செரிமானம் மற்றும் மலச்சிக்கல்

முட்டைக்கோஸில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த உணவான கிம்சி, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது; இதில் புரோபையாட்டிக்குகள் அதிகம் நிறைந்துள்ளன. இது யோகர்ட் மற்றும் பிற பால் பொருட்கள் போன்று செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிம்சி, மலச்சிக்கலை தடுத்து, பெருங்குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

முட்டைக்கோஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது மலத்தை ஒன்றாக சேர்த்து, தொடர்ந்து ஒட்டுமொத்தமாக மலம் வெளியேற உதவுகிறது. இது நல்ல கட்- ஃ பிரண்ட்லி  அதாவது வயிற்றின் செயல்பாடுகளுக்கு துணை புரியும் பாக்டீரியாவை உடலில் அதிகரிக்க உதவுகிறது.

புற்றுநோய் தடுப்பாற்றல்

சல்ஃபோராபேனின் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகள் மீது ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன; மூலக்கூறு அளவில், இந்த ஆன்டி ஆக்சிடென்ட் நல்ல பலன்களை அளித்து வருகிறது.

முட்டைக்கோஸில், ஐசோதியோனேட்கள் எனும் ஒரு வித சத்துக்கள் அமைந்துள்ளன. இவை கார்சினோஜென்களை செயலிழக்கச் செய்து வெளியேற்றிவிடுகின்றது.

முட்டைக்கோஸில் காணப்படும் பிரஸ்ஸின் எனும் பொருள் கீமோபிரிவென்ட்டிவ் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

முட்டைக்கோஸில் இருக்கும் சத்துக்கள் சிறுநீர்ப்பை, மார்பகம், பெருங்குடல், கல்லீரல், வயிறு மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

கண் பார்வை மேம்பட

முட்டைக்கோஸில் உள்ள லூடெய்ன் எனும் சத்து கண் பார்வை மேம்பட உதவுகிறது; லூடெய்ன் கண்ணின் ரெட்டினா மற்றும் லென்ஸை புற ஊதா கதிர்களில் இருந்து காக்க உதவுகிறது.

கண் பார்வை மேம்பட உதவும் மற்றொரு ஊட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். இது கண்களின் உட்புறத்தில் வைட்டமின் ஈ சத்தை மீள் உருவாக்கம் செய்ய உதவும் முக்கியமான ஆன்டி ஆக்சிடென்ட்டாக திகழ்கிறது; கண் பார்வையை மேம்படுத்துகிறது.

முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடென்ட் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தூண்டி விட்டு, நோய்களுக்கு எதிராக போராட செய்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமானவை இரத்த வெள்ளை அணுக்கள் தான்; அத்தகைய அணுக்களை தூண்டி, அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவுகிறது. அடிக்கடி உணவில் முட்டைக்கோஸ் வகைகளை சேர்த்து வந்தால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பெற்று, சிறந்த நோய் எதிர்ப்பு தன்மையை அடைந்து நோய் நொடிகள் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்கலாம்.

உடல் எடை குறைத்தல்

பழங்கள் மற்றும் காய்கறிகள்  போன்றவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன. முட்டைக்கோஸை மட்டும் உணவாக கொண்ட உடல் எடை குறைப்பு முறையில்  முட்டைக்கோஸ் சூப் குறித்து நடத்தப்பட்£ ஆராய்ச்சிகள் நல்ல பலன்கள் தந்துள்ளன கூறப்படுகிறது.

இந்த டயட் முறையில், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அதிகளவு முட்டைக்கோஸை – முட்டைக்கோஸ் சூப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இதனுடன் இதர பழங்கள், காய்கறிகள், பிரௌன் ரைஸ், சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றையும் கூட உட்கொள்ளலாம்.

உடல் எடையை விரைவாக குறைக்க இது ஒரு நல்ல உணவாக, அமைகிறது என்று கூறப்படுகிறது; ஆனால், இந்த டயட் முறையை ஏழு நாட்களுக்கு மேல் கடைபிடிக்க வேண்டாம்; ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் இதர வைட்டமின்கள் & கனிமச்சத்துக்கள் குறைவாகவே உள்ளன.

அல்சர் / புண் ஆறிட

அல்சர் என்பது சாதாரணமாக பல மக்களுக்கு ஏதேனும் ஒரு உணவு அல்லது உடல் சீரற்ற தன்மை காரணமாக ஏற்படக்கூடிய ஒரு நோய்க்குறைபாடு ஆகும். வயிற்றில் அல்லது உடலின் உறுப்புகளில் ஏற்படக்கூடிய அல்சர் என்னும் வயிற்றுப்புண்ணை சரி செய்ய உதவும் மிகச்சிறந்த உணவு முட்டைகோஸ் ஆகும்; இதில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அல்சர் நோயை குணப்படுத்த உதவுகின்றன.

ஒரு ஆய்வில் அல்சர் கொண்ட சில நபர்களுக்கு நாள் முழுவதும் 946 மில்லி லிட்டர் அளவுள்ள முட்டைகோஸ் சாறு வழங்கப்பட்டது; இதை பருகிய பின் அந்நபர்களில் பெரும்பான்மையோருக்கு 7 – 10 நாட்களில் அல்சர் நோயின் தீவிரம் குறைந்து, அந்நோயிலிருந்து விடுதலை கிடைத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தசை வலி விலகிட மக்களில் பலருக்கு கடினமான வேலைகளை செய்த பின் அல்லது தொடர்ச்சியாக வேலை செய்த பின் ஏற்படக்கூடிய ஒரு சாதாரணமான குறைபாடு தசை வலி ஆகும். இதனை போக்க சரியான உணவு முறையே போதுமானது.

ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு அற்புதமான உணவு முட்டைக்கோஸ் ஆகும்; இதை உட்கொண்டால் தசை வலி போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

முட்டைக்கோஸின் இலைகளை தசை வலி அல்லது மூட்டு வலி உள்ள இடங்களில் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு வைத்து வந்தால், வலி குறைந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது; எந்த ஒரு மருந்து, மாத்திரை, ஊசி என எதுவும் இல்லாமல், உடலில் ஏற்படும் தசை வலிகளில் இருந்து உடனடி நிவாரணத்தை முட்டைக்கோஸ் இலைகள் மூலம் பெறலாம்.

இதயம் பலப்பட

சிவப்பு முட்டைக்கோஸில் ஆந்தோசையனின்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த உறுப்புகள் தான் முட்டைக்கோஸ் சிவப்பு நிறமாக இருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். ஆந்தோசையனின்கள் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்க பெரிதும் உதவுகின்றன.

ஆந்தோசையனின்களை அதிகம் உட்கொண்டால், இள வயதினர் மற்றும் நடுத்தர வயது பெண்களில் ஏற்படக்கூடிய  மையோகார்டியல் நோயை தடுக்கலாம். இந்த அந்தோசையனின்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன.

சார்க்ராட் எனும் புளித்த முட்டைக்கோஸ் தயாரிப்பு, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது; ஆர்த்ரிட்டிஸில் கடினத்தன்மையை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை கொண்ட நல்ல தாவரங்களை நடுநிலைப்படுத்த இது உதவுகிறது.

சிவப்பு முட்டைக்கோஸ் உடலில் கெட்ட கொழுப்புகள் உருவாவதை தடுத்து, இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு சக்தி

அழற்சிகளில் ஒன்றான குரோனிக் அழற்சி நன்மை பயப்பது அல்ல; இவ்வாறு தீமையை ஏற்படுத்தும் குரோனிக் அழற்சிக்கு எதிராக போராடும் தன்மையை குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் கொண்டுள்ளது.

ஒரு ஆராய்ச்சியில் குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளை அதிகம் உட்கொண்ட பெண்களில் குறைவான அழற்சி அளவுகள் காணப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளில் காணப்படும் சல்ஃபோராபேன் எனும் ஆன்டி ஆக்சிடென்ட்டுடன் தொடர்பு உடையது. சல்ஃபோராபேன் எனும் சத்து மூட்டுக்களில் ஏற்படும் சேதத்தை போக்கவும் உதவுகிறது.

வேறொரு ஆய்வில், ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் உள்ள நோயாளிகள் முழங்காலில் ஏற்படும் அழற்சியை போக்க முட்டைக்கோஸ் இலைகளை அதன் மீது சுற்றி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முட்டைக்கோஸில் உள்ள பைட்டோ வேதிப்பொருட்கள் அழற்சி போன்ற உடல் பிரச்சனைகளை எதிர்த்து போராடவும், புற்றுநோய் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களை தடுக்கவும் உதவுகின்றன.

சர்க்கரை நோய்

சிவப்பு முட்டைக்கோஸில் உள்ள ஆன்டி ஹைப்பர்கிளைமிக் பண்புகள், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன (30). சிவப்பு முட்டைக்கோஸில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் நீரிழிவு நோயை தடுக்க உதவுவதுடன், அதன் வாஸ்குலர் சிக்கல்களையும் போக்க உதவுகின்றன.

விரதம் இருக்கும் அதாவது உண்ணாமல் இருக்கும் முயல்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், முட்டைக்கோஸில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் இரத்த அழுத்த அளவுகளை குறைத்து, நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன.

சர்க்கரை நோயை குணப்படுத்துவதில் ஆந்தோசையனின்கள் பெரிதும் பயன்படுவதாக முட்டைக்கோஸ் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சரும ஆரோக்கியம்

முட்டைக்கோஸில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளன; இந்த சத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வடிவமைக்கப்பட்ட புரதத்தை உருவாக்கவும் உதவி, தோல் உருவாதல் மற்றும் காயங்களை குணப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.

தோல் புற்றுநோயை தடுப்பதில் சிவப்பு முட்டைக்கோஸ் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

தலைமுடி ஆரோக்கியம்

முட்டைக்கோஸில் கொயர்செட்டின் எனும் சத்து நிறைந்துள்ளது; இந்த ஆன்டி ஆக்சிடென்ட் அலோபேஷியா அரியேடா (திடீர் முடி இழப்பை ஏற்படுத்தும்) குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கொயர்செட்டின் சத்து உட்புகுத்தப்பட்ட எலிகளில் அலோபேஷியா அரியேடா குறைபாடு குறைந்து, முடி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்; அதன் பின் தான் முட்டைக்கோஸில் காணப்படும் கொயர்செட்டின் மனிதர்களில் எத்தகு முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று தெளிவாக கூற முடியும்.

முட்டைக்கோஸ் என்பது பல வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்த ஊட்டச்சத்து மிகுந்த ஒரு காய்கறி ஆகும்; இதில் எத்தகைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது குறித்து கீழே படித்தறிவோம்.

முட்டைக்கோஸின் ஊட்டச்சத்து மதிப்பு

பிற எந்த ஒரு காய்கறிகள் அல்லது பழங்களில் இல்லாத அளவு, அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டது முட்டைக்கோஸ் ஆகும்; இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கக்கூடியவை. அது பற்றி முந்தைய பத்திகளில் தெளிவாக படித்து அறிந்தோம்; முட்டைகோசு வழங்கும் பலன்களை அறிந்த நாம் அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, தாதுக்கள் யாவை என்பது பற்றியும் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

இப்பொழுது ஒரு அற்புதமான ஊட்டச்சத்து மதிப்புகளை கொண்ட, ஓர் அருமையான காய்கறியான முட்டைக்கோஸில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

சத்யா


Spread the love