முட்டைக்கோஸ் என்றால் அதை ஒரு காய்கறியாகத்தான் நினைக்கத் தோன்றும். உண்மையில், இது கீரை வகையைச் சேர்ந்தது. உடலுக்கு வலிமை, அழகு, பொலிவு தரக்கூடிய கீரை இது. முட்டைக்கோஸில் வைட்டமின் – சி மற்றும் டி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
முட்டைக்கோஸை பச்சையாகவும் சாப்பிடலாம். சமைக்கிறேன் என்று நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருந்தால் முட்டைக்கோஸில் உள்ள சத்துகள் குறைந்துவிடும். அதனால், சரியான நேரத்தில் முட்டைக்கோஸ் சமையலை முடித்து விடுவது நல்லது.
முட்டைக்கோஸின் மருத்துவப் பயன்கள்
1. முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து, அதோடு உப்பு மற்றும் சீரகத் தூளைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால், குடற்புண்கள் விரைவில் ஆறும்.
2. முட்டைக்கோஸை பச்சையாக அரைத்துச் சாறு எடுத்து 60 மி.லி. அளவில் சாப்பிட்டால் வாய்ப்புண், தொண்டைப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
3. முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து, தயிர், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.
4. முட்டைக்கோஸ், மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து, இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் மலச்சிக்கல் மறையும். மூல நோய்களும் குணமாகும்.
5. முட்டைக்கோசுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, காலை உணவாக 48 நாள்கள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.