பலரும் பபிள்காம் மற்றும் சூயிங்கங்களை அன்றாடம் மென்று கொண்டேயிருக்கிறார்கள். வாய் துர்நாற்றம் போகவும், தூக்கம் வராமல் இருக்கவும், வாய் நல்ல மணம் வீச வேண்டும் என்பதற்காகவும், புகைப் பழக்கத்தை மறைக்கவும், இதனை செய்கின்றனர். சமீபக்கால ஆராய்ச்சிகள் பபிள்காம் சாப்பிட்டுக் கொண்டே இருப்பது சுவை மொட்டுக்களைச செயல் இழக்கச் செய்கின்றது. அதேபோல ருசியை உணர முடியாமல் செய்து விடுகின்றது. இந்த பபிள்கம் பல பிரச்சினைகளைத் தருவதாக அமெரிக்க ஒஷிமோ பல்கலைக் கழகம் நிருபித்துள்ளது. எனவே, பபிள்கம் சாப்பிடாது இருப்பது நல்லது.
