பழுப்பு அரிசி ஆரோக்கியம்

Spread the love

பழுப்பு நிற அரிசி என்னும் கைக்குத்தல் அரிசியானது சுத்திகரிக்கப்படாத அரிசியாகும். வெள்ளை அரிசியை விட பழுப்பு நிற அரிசியில் அதிகளவு நியூட்ரியேஷன் உள்ளது. அதற்கு காரணம், பழுப்பு அரிசி நேரடியாக நெல்லில் இருந்தே நமக்கு கிடைக்கின்றது. பழுப்பு நிற அரிசி சாப்பிடுவதற்கு கடினமாக இருந்தாலும், இதில் அதிகளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. பழுப்பு நிற அரிசியினால் நமது உடலிற்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

பழுப்பு நிற அரிசியின் நன்மைகள்:

நீரழிவு நோயாளிக்கு பழுப்பு நிற அரிசி மிகவும் நல்லது. இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி,  இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து, சீராக வைக்க உதவுகிறது.

பழுப்பு நிற அரிசியில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது நமது உடலில் உள்ள செல்கள், ப்ரீ ராடிக்களால் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

பழுப்பு நிற அரிசியில் அதிகளவு மெக்னீஷியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடல் எடையை குறைத்து சீராக வைக்கவும்,  ஒபேசிட்டியில் இருந்து தப்பிக்கவும் பழுப்பு நிற அரிசி பெரிதும் உதவுகிறது.

முளைத்த பழுப்பு நிற அரிசியை சாப்பிட்டால் வயதான பின் வரும் மறதி நோயான அல்சிமர் நோயை தடுக்கலாம். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பழுப்பு அரிசி மிகவும் நல்லது, மனம் அலைபாய்வதினால் ஏற்படும் மன அழுத்தம் குறையும். இதில் உள்ள அமினோ அமிலங்களான குளுட்டமைன், கிளிசரின், காமா அமினோபியட்ரிக் அமிலம் போன்றவை நமது மூளையில் செரோடோனின் ஹார்மோனை சுரக்கச்செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது. அனிஸ்சிட்டி போன்ற பிரச்சனையும் நீங்குகிறது.

பழுப்பு அரிசியில் வைட்டமின் H, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவு உள்ளது. மேலும் இதில், உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் அதிகமாக உள்ளது.

பழுப்பு அரிசியில் நார்சத்து அதிகளவில் இருப்பதால், இது மலச்சிக்கலை தடுத்து, குடலின் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்கின்றது. மேலும் பழுப்பு அரிசி உண்பதால் இதய நோய் ஏற்படுவதையும் குறைக்கலாம், என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

பழுப்பு அரிசி (Vs) வெள்ளை அரிசி

பழுப்பு அரிசியில் வைட்டமின் சி, தவிர அனைத்து வைட்டமின் சத்துக்களும் அடங்கியுள்ளது. ஆனால் வெள்ளை அரிசியில் இவ்வித சத்துக்கள் ஏதும் இல்லை. 

100 கிராம் பழுப்பு அரிசியில் 6.7 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது. ஆனால் வெள்ளை அரிசியில் ௦0.7 கிராம் மட்டுமே உள்ளது.

பழுப்பு அரிசியில் 0.6 கிராம் நார்ச்சத்து  உள்ளது. ஆனால் வெள்ளை அரிசியில் 0.2 கிராம் மட்டுமே உள்ளது.

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைக்க இரும்புச்சத்து மிகவும் அவசியமானதாகும். இந்த இரும்புச்சத்து பழுப்பு அரிசியில் 3.2 கிராமும், வெள்ளை அரிசியில் 0.7  கிராமும் உள்ளது.

நல்ல கொழுப்புகள் வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியில் 50 சதவிகிதம் அதிகமாக நிறைந்துள்ளது. இந்த நல்ல கொழுப்புகள் உடலின் செரிமானத்தை கட்டுப்படுத்தி, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

சர்க்கரை நோய் மற்றும் கல்லீரலில் கொழுப்பு உள்ளவர்களுக்கு பழுப்பு அரிசி மிகவும் சிறந்ததாகும். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பாதிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ் பழுப்பு அரிசியில் குறைவாக உள்ளது. வெள்ளை அரிசி பாலிஷ் செய்யப்படுவதால், அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறி  கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு அதிகரிக்கிறது.


Spread the love