காலையில் சாப்பிட சிறந்த 1௦ இந்திய உணவுகள்

Spread the love

ஒரு நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், கொஞ்சமும் சோர்வடையாமலும் இருக்க வேண்டுமா?, அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஒன்றை மட்டும்தான், “காலை உணவு” ஆம் வாசகர்களே தினமும் நீங்கள் சரியான காலை நேரத்தில், ஆரோக்கியமான அந்த உணவை அளவோடு எடுத்துகொண்டால் மேற்கூறிய அந்த விஷயத்தை நீங்கள் முற்றிலுமாக தினமும் அனுபவிக்கலாம். சென்செக்ஸ் படி இந்த கால இளைஞர்களில் முக்கால்வாசி பேர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களது காலை உணவை தள்ளிப்போடுகிறார்களாம், காலை உணவை எதற்காகவும் நாம் தவிர்த்துவிட கூடாது. சுமார் பன்னிரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு நாம் காலையில் எடுத்துகொள்ளும் உணவு, வெறும் உணவல்லவே அது ஒரு “மருந்து”. நாம் தினமும் காலையில் சாப்பிடுவதற்கான சிறந்த இந்திய உணவுகளின் பட்டியலில், முதல் 1௦ இடங்களை பிடித்த இந்தியாவின் சிறந்த உணவுகளை உங்களுக்காக கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.

  1. இட்லி

முதல் இடத்தை பிடித்திருப்பது நமது தமிழ்நாட்டில் மிக பிரபலமான உணவான இட்லி. சிறு குழந்தைகள் முதல் வையதான முதியவர்கள் வரை இந்த இட்லியை உண்ண கொடுக்கலாம், அது ஏன் என்றால் இட்லி மாவை புலிக்கவைத்து உண்பதால் இட்லிக்கு இயல்பாகவே செரிமான சக்தி நிறைய வந்துவிடுகிறது. அதனால் தான் இட்லி மிக சிறந்த உணவுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

  • ரவா தோசை

தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது இந்த ரவா தோசை. தோசை மாவில் கொஞ்சம் ரவையை சேர்த்து கூட இந்த மொரு மொரு ரவா தோசையை தயார் செய்ய முடியும். தோசை வகைகள் மொத்தம் 624 இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. அதோடு இந்த தோசையை 2௦௦௦ வருடங்களுக்கு முன்னதாக தமிழ் நாட்டில் தான் முதன் முதலில் கண்டுப்பிடித்திருகின்றனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 2௦௦௦ வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் செய்யப்படும் தோசை மிருதுவாகவும் கர்நாடகாவில் செய்யப்படும் தோசை மொரு மொருவென்றும் இருந்து உள்ளது.

  • உப்மா

உப்மா காலையில் சாப்பிடுவதற்கு மிக சிறந்த உணவு, உப்மா நிறைய வகையில் தயாரிக்கின்றனர், உதாரணத்திற்கு அரிசி உப்மா, ரவா உப்மா, சேமியா உப்மா, சம்பா கோதுமை உப்மா என்று பல வகைகள் உண்டு. இந்த உப்மா தயாரிக்கும் போது அதில் காய்கறிகளும் சேர்த்து செய்தால் மிகவும் நல்லது. “உப்மா” என்பது வட மொழி சொல், அவ்வாறு வட இந்தியாவில் தான் அழைக்கின்றனர். தமிழில்  “உப்புமாவு” ஆகும்.

  • கண்டா பட்டடா போஹா

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு இது. போஹா என்றால் அவல், கண்டா பட்டடா என்பது வெங்காயமும், உருளைகிழங்கும். இந்த உணவை அவலுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, வேர்கடலை சேர்த்து செய்கிறார்கள், இதனுடன் எலுமிச்சை பழ சாரும் சேர்ப்பதால் புளிப்பு காரம் எல்லாம் கலந்து மிக சுவையாக இருக்கும். இந்த கண்டா பட்டடா போஹாவுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து சாப்பிட்டால் காலை உணவு அருமையாக முடிந்து விடும்.

  • தொக்லா

தொக்லா என்பது ஒரு குஜராத்தி உணவாகும். இந்த தொக்லாவை அரிசியும், கடலைப் பருப்பும் சேர்த்து செய்கின்றனர். இந்த தொக்லவை காலை உணவாக மட்டும் இல்லாமல், சிற்றுண்டியாக கூட சாப்பிடலாம், அவ்வளவு அருமையாக இருக்கும் இந்த தொக்லா. தொக்லா நிறைய வகையில் செய்கின்றனர், அதோடு கஹமன் என்று இன்னொரு உணவு இருக்கின்றது அதுவும் தொக்லா போன்றது தான் ஒரு சிறு வித்தியாசம் மட்டுமே. கஹமனில் கடலை பருப்பு மட்டும் தான் உபயோகிப்பார்கள்.

  • புட்டு

கடவுளின் மாநிலம் என்று கருதப்படும் கேரளாவில் மிக பிரபலமானது இந்த புட்டு. பழைய காலத்தில் சிகப்பு அரிசியும், தேங்காய் துருவலும், தேங்காய் தண்ணீரும் சேர்த்து “புட்டு குடம்” என்று அழைக்கப்படும் ஒரு பாத்திரத்தில் இந்த பிரபலமான குழாய் புட்டு செய்து வந்தனர். தற்பொழுது சிகப்பு அரிசி மட்டுமில்லாமல் கோதுமை, கம்பு என பல விதமாக இந்த குழாய் புட்டை தயாரிக்கின்றனர். இந்த புட்டுடன் கொண்டக்கடலை மசாலா சேர்த்து சாப்பிடுவது தான் மலையாளிகளின் வழக்கம்.

  • அடை

எல்லா வகையான பருப்புகளும் இந்த அடையில் சேர்த்து செய்யபடுவதால், உடம்பிற்க்கும், காலையில் சாப்பிடுவதற்கும் மிகவும் ஏற்ற உணவு. இந்த அடை மாவு அரைக்கும் பொழுது அரிசிக்கு பதில் ஓட்ஸ் அல்லது கம்பு போன்ற தானியங்களும் சேர்த்து வித்தியாசமாக சிலர் செய்கின்றனர். இந்த அடையுடன் எல்லா காய்கறிகளுடன் தேங்காய் சேர்த்து செய்யப்படும் அவியலுடன் சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும், உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்.

  • பூல்கா

முழு கோதுமையில் செய்யப்படும் இந்த பூல்கா மிகவும் சிறந்த காலை உணவாகும். இந்த பூல்காவுடன் தால் என்று கூறப்படும் பசிப்பருப்பு குலம்புடனோ அல்லது காய்கறிகள் கலந்து செய்த கிரேவியுடனோ சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். வட நாட்டில் இந்த பூல்கா தான் மிகவும் பிரபலம்.

  • பெசரட்டு

இந்த உணவு தோசை வகையில் ஒன்றாகும். ஆந்திரா மாநிலத்தில் மிகவும் பிரபலமானது இந்த பெசரட்டு. பாசிப் பருப்பு வைத்து செய்கின்றனர் இந்த பெசரட்டு தோசையை. வட இந்தியாவில் இந்த உணவை “மூங் தால் சில்லா” என்று அழைகிறார்கள். இந்த பெசரட்டுடன் சட்னி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். தமிழ் நாட்டில் வெண் பொங்கலில் பாசிப்பருப்பு சேர்த்து செய்வதால், வெண் பொங்கலும் ஒரு சிறந்த காலை உணவாகும்.

1௦. ஆழு பராத்தா

“ஆழு” என்றால் உருளைகிழங்கு என்று அர்த்தம். உருளைகிழங்கை வைத்து மசாலா செய்து அதனை சப்பாத்தி மாவிற்கூள் வைத்து தேய்த்து, தோசை கல்லில் சுட்டு எடுத்தால் ஆழு பராத்தா தாயார். இந்த ஆழு பராத்தா உடன் தயிர் அல்லது உருகாய் வைத்து சாப்பிட்டாலே மிகவும் நன்றாக இருக்கும். வட இந்தியாவில் மிகவும் பிரபலம் இந்த ஆழு பராத்தா. கோதுமை, உருளைக்கிழங்கு என எல்லாம் இருப்பாதால் இந்த உணவு காலையில் சாப்பிட மிக சிறந்த உணவாகும்.

இந்தியாவை பொறுத்தவரை இது போல இன்னும் பல விதங்களில் சிறந்த காலை உணவுகள் இருகின்றன. அதில் சிறந்த மற்றும் உடலுக்கு எந்த பக்கவிளைவுகளையும் தராத அருமையான பத்து வகைகளை மட்டும் இங்கே எடுத்து காண்பித்துள்ளோம்.


Spread the love